Monday 3 August 2015

தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.
உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான்.
அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.
அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்லிவிட்டு தனக்குள் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.
நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார்.
சிறுவன் தீர்க்கமாக சொன்னான்.
‘இல்லை, எனக்கும் ஒரு இளைய சகோதரன் இருக்கிறான். ஆகவே நான் இந்த காரை பரிசு வழங்கிய உங்களின் அந்த சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.
சிறுவனின் தன்னம்பிக்கையை பார்த்து வியந்து நின்றார் அவர்...!!!

~*~

No comments:

Post a Comment