Tuesday 14 December 2021

நாவிதன்

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...

 அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...

 பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...

வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...

 வேலையை ஆரம்பித்தார்...

'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...

"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... 
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
            
"நல்ல சந்தேகங்க சாமி... 
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. 
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?" 

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.

அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
 
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம். 
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...

"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..." 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். 

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். 

அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?" 

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...

*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*

இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...

*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*

*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*

*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*

*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*

ஆகவே, 
*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*
*மதிப்போம்...*
*வாழ்வளிப்போம்...*

நாம் அனைவரும் நலமாக வாழ...

நன்றி சகோதரர் அருள்மணி.(திரு. ராஜ்கிரன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து) 

Saturday 11 December 2021

மகானின் அறிவுறை..

ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... 

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... 

இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது...  31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி  பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...

"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... 

"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார். 

மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள், அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள். 

*நேசியுங்கள் நேசிக்கப்டுவீர்கள்.*

அன்பானது உங்களை தனிமையில் விடாது...

அன்பு சகலத்தையும் உருவாக்கும்...

*அன்பாலே உங்கள் வாழ்க்கையை அமையுங்கள்*!

Tuesday 23 November 2021

நாத்திகனின் தியானம்

ஒரு நாத்திகர் என்னிடம் வந்து, 
"நானும் தியானம் செய்ய முடியுமா?",
என்று கேட்டார்.

நான் சொன்னேன், 
"கடவுளை நம்பினால்தான் தியானம் செய்ய முடியும் என்ற கருத்து நிலவி வருகிறது. அது ஒரு முட்டாள்தனமான கருத்து! தியானத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை" - என்று. 

இன்னும் சொல்லப்போனால், எதையும் நம்பாதவர் எளிதில் எண்ணங்களை கடந்து போய்விட முடியும்.

ஒன்றின் மேல் விசுவாசம் வைத்திருப்பவன், அந்த நம்பிக்கையை பலமாக பற்றிக்கொண்டு இருப்பதால் அந்த நம்பிக்கையே மனதினால் கடக்க முடியாத ஓர் எண்ணமாக மனதில் படிந்து விடுகிறது.  

விசுவாசம் என்பது மனதின் ஒரு பகுதி! நீங்கள் தீவிரமான கடவுள் நம்பிக்கையோடு இருந்தால், உங்களால் மனதை கைவிட முடியாது. 

மனம் தீவிரமாக உள்ள இடத்தில் தியானம் நிகழாது. எனவே அந்த இடத்தில் நீங்கள் "பக்தி" என்ற படிமானத்தை தாண்டி வர வேண்டியுள்ளது. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு உள்ள பக்குவம்,  இந்த  படிமானம் என்கிற தொல்லை இல்லாமல் செய்துவிடுகிறது!!

~~ஓஷோ

Saturday 16 October 2021

RATTAN TATA

ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

                           இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்.

          நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.

                   நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .

         எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.

             நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.

        எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது .

      உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.

        என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.

          மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..? 

            அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.

                இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

        செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. 

        ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?

               நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?

       ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. 

           மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?

                நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்.

                  நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.

             அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.

Thursday 30 September 2021

மரண தண்டனை

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது .மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். 

- மதத்தலைவர்
- வழக்கறிஞர் 
- இயற்பியலாளர் 

முதலில் மதத் தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என் வினவப்பட்டது. 

ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார். 

மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார். 

அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

'நீதி! நீதி! நீதியே வெல்லும்' என்றார். 

மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்.

அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. 'கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா? என வினவப்பட்டது.

எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்' என்றார்.  

உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது. 

*நீதி*

👉 சில சந்தர்ப்பங்களில் 
வாய் மூடி இருக்கப் பழகிக்கொள்!

👉 தெரிந்த உண்மைகளையெல்லாம்  உளரிக்கொட்டுவதால் உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!

👉 சிலவேளை முட்டாளாக இருப்பதுதான் 
புத்திசாலித்தனமானது!

Saturday 18 September 2021

அப்பா

*அப்பா........🙏🙏🙏🙏🙏🙏*
*மனச தொட்ட கதை* 

கணேசன் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார். 

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.  

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.  
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் கணேசன். 

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.  

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.   

அந்த சமயத்தில் ஒருவர் கணேசனின் பக்கத்தில் 
வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் கணேசன்!  
நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் கணேசன்.  
யோசித்தார்.  
பிறகு பேசினார்.

""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""
என்று கேட்டார் கணேசன்..

""மிஸ்டர் கணேசன்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் கணேசன்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் கணேசன்.

''அதெல்லாம் சரி! உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''
என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் கணேசன்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.  

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.  

நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.  

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''
என்று கேட்டார் கணேசன்.   

அமைதியானார் கடவுள்.  
மீண்டும் கணேசன் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன், 

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன், 

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.   

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.  

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் கணேசன்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.   
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.  

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.  

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.   

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.  

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.  

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் கணேசன்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் கணேசன்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.  
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.  
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.    

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் கணேசன்..

கடவுள் சிரித்தார்.  

‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.   

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் கணேசன்.

':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது கணேசனின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.  

‘மிஸ்டர் கணேசன் ! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.  

இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

கணேசன் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? 
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.  

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் கணேசன்.  

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?  
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.  

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் கணேசன்.

‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.    
 
கணேசன் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் கணேசன்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.   

நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.   
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....   

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.    

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.  

கணேசன் மீண்டும் பேசினார்.

‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.  

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் கணேசன்..
  
( கணேசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
ஆகவே அப்பா............. இருந்தால்.................... மதியுங்கள்.................... 
அப்பா........................ இல்லையேல்....... ..........
நினையுங்கள்..... ............

Saturday 24 July 2021

இன்றைய கல்விமுறை

ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!*.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது. மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்.

 அதனிடமிருந்து அசைவேயில்லை!
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-
*"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*

*மொபைல் போன்* குறைந்தது 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்கும் சாமானியன் ஒரு *பசு மாட்டுக்கு* 10 ஆயிரம் விலைகொடுத்து வாங்குவதில்லை!

தினமும் *20, 50, 100, 200* ரூபாய் ரீச்சார்ச், இன்டர்நெட்டுன்னு *செலவு செய்யும் சாமானியன்* தக்காளி கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்கணும்னு நினைக்கிறான் !
*நாட்டுப் பற்று, சொந்தம் பந்தம்* பற்றி பேசறாங்க , நமக்காக நம்ம *ஊருக்காரன்* வச்சிருக்கும் கடையில் போய் ஒரு பேனா கூட வாங்கறதில்ல !,
நமக்கு தெரிஞ்சதெல்லாம் *அமேசான், பிளிப்கார்ட்!* அதில வாங்குறத கௌரவமா வேற நினைக்கிறாங்க !
அரிசி போட்டவுடன் வேகணும் !

சோறு பளபளன்னு வெள்ளையா இருக்கணும் !
பொடிசா இருக்கணும் !
ஆனா நோய் வரக்கூடாது ! !
பழுப்பு நிறத்துல இருக்கிற அரிசிய வெள்ளையா கேட்டா எதையாவது போட்டு கலரா மாத்ததான செய்வான்?
தப்பு யார் மேல ?

கீரை பச்சையா இருக்கணும், இலையில சின்ன ஒட்டைகூட இருக்ககூடாது ன்னு கடைக்காரண்ட கேட்டா அவன் விளைவிக்கிறவண்ட சொல்லி…
விளைய வைக்கிறவன் பூச்சி மருந்த அடிக்க
நாமும் வாங்கி சாப்பிடறோம்…! அப்பறம் டாக்டர தேடி அலையறோம் !

நாமெல்லோருமே ஆடு மாடு மேய்ச்சவங்க வாரிசுதான்.!
என்ன கூட குறைய ஒரு சில தலைமுறைகள் இருந்திருக்கும்.
இப்போ பேண்ட் சர்ட் , KFC Chicken, Pizza, Burger அப்போல்லுனு வாழ்ந்துட்டா சந்தோசம் கிடைச்சிடுமா?

*இன்னும் ஆடு மாட வச்சு சாணிய அள்ளி உரமாக்கி எங்கே ஒரு காட்டுல நமக்காக உழைச்சிட்டு இருக்கானே அவன் எவ்வளவு மேலானவன் என்பதை என்று உணர்வீர்களோ!*

*நல்லதை சாப்பிட நினையுங்கள்.*
*சாப்பிட கொடுத்தவரை நினையுங்கள் !*.
*வாழ்க விவசாயி !*
*வாழ்க இயற்கை விவசாயம் !*

~*~

Thursday 17 June 2021

உயர்திரு. நந்தக்குமார் - வருவாய் இணை ஆணையர்

அப்போது 8ம் வகுப்பு டிராப் அவுட்... 

இப்போது வருமான வரித்துறை இணை ஆணையர்...!

“ஸ்கூல்ல நான் ரொம்ப பிரபலம். நந்தகுமார்னா யாருக்கும் தெரியாது; ‘தூங்குமூஞ்சி’ன்னா கரெக்ட்டா சொல்லிடுவாங்க. பள்ளிக்கூடத்துக்கு உள்ளே  நுழைஞ்சவுடனே எங்கிருந்துதான் வருமோ தூக்கம்... உக்காந்தவுடனே தூங்கிருவேன். டீச்சர் சொல்லிப் பாத்தாங்க, அடிச்சுப் பாத்தாங்க. கடைசியா ஒரு பெஞ்சை  காலிபண்ணிக் கொடுத்து, ‘படுத்து தூங்குப்பா’ன்னு சொல்லிட்டாங்க...’’ - சிரிக்கிறார் #நந்தகுமார். நந்தகுமார், இந்திய வருமான வரித்துறையின் இணை  ஆணையர். தற்போது திருச்சி மண்டலத்தில் பணிபுரிகிறார். சென்னை ஆவடியில், விளிம்புக் குடும்பத்தில் பிறந்து, ஒவ்வொரு நகர்விலும் தடுக்கி விழுந்து,  கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனை மனிதராக உயர்ந்து நிற்கும் இவரின் கதை உற்சாக நரம்புகளை முறுக்கேற்றும் சக்திமிக்கது. ‘‘அஞ்சு வயசுக்குள்ள  சின்னம்மை, மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாய்டுன்னு உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு. எப்பவும் சோர்வாவே  இருக்கும். படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது.

போர்டுல எழுதிப் போடுறதை எழுதமுடியாது. அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று  சொல்லப்படுற ‘கற்றல்குறைபாடு’தான்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும்போது தான் தெரியவந்துச்சு. ‘தாரே ஜமீன் பர்’ படத்தில ஒரு சின்னப் பையனுக்கு  இருக்குமே, அதே பிரச்னைதான். இது நோயில்லை; உளவியல் பிரச்னையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு சிக்கல். இதுக்கு மருத்துவத்துறை இன்னும்  தீர்வு கண்டுபிடிக்கல...’’ - நிதானமாகப் பேசுகிறார் நந்தகுமார். ‘‘ஒருவழியா 8ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்குமேல என்னைச் சிரமப்படுத்த அப்பா  விரும்பல. ‘படிப்புதான் வரல... லாட்டரிச் சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோ’ன்னு ஆவடியில இருந்த கடையில உக்கார வச்சுட்டார். தெருக்கள்ல  போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். வயது ஆக ஆக, ஸ்கூலுக்குப் போற பிள்ளைகளைப் பாக்க ஆசையா இருக்கும்.

இன்னொரு பக்கம், ‘அவன்கூடப் பழகுனா நீயும் ஊர்சுத்திப் பயலாயிடுவே’ன்னு சொல்லி என்கூட பழகுற பசங்களை அவங்க பேரன்ட்ஸ் அடிப்பாங்க. படிக்காம  இருக்கிறது தப்புன்னு உணர்ந்தேன். ஆனா, திரும்பவும் பள்ளிக்கூடம் போறதுக்கு மிரட்சியா இருந்துச்சு. அப்போ தான் அமல்ராஜ்னு ஒரு நண்பன், ‘பள்ளிக்கூடம்  போய்தான் படிக்கணும்னு இல்லைடா, வீட்டில இருந்துக்கிட்டே தேர்வு எழுதலாம்’னு சொன்னான். அதுதான் முதல் பொறி. உடனடியா அப்ளை பண்ணினேன்.  கடையில இருந்துக்கிட்டே எட்டாவது பாஸ் பண்ணிட்டேன். அடுத்து பத்தாவது... டியூஷன் போகக்கூட நேரம் கிடைக்காது. எழுதி எழுதிப் பாப்பேன். நாலு தடவை  தப்பா எழுதினா, அஞ்சாவது தடவை சரியா எழுதிடுவேன். மத்தவங்க மாதிரி வேகமா எழுத வராது. எல்லோரும் ரெண்டரை மணி நேரத்தில 40 கேள்விக்குப்  பதில் எழுதினா என்னால 15 கேள்விக்குத்தான் எழுதமுடியும். கையெழுத்தும் சரியா இருக்காது. ஆனா விடையை சரியா எழுதுவேன்.

இப்படித்தான் பத்தாம் வகுப்பை முடிச்சேன். கணக்குல 92...’’ - வியக்க வைக்கிறார் நந்தகுமார். ‘‘திடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க.  கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்குப் போனேன். என் உடல்வாகுக்கு செங்கலும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா  வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ் கடை. அங்கிருந்து டி.வி. மெக்கானிக் சென்டர். வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.  கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சுக்கிட்டே +2வுக்கு அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கனாமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம  பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில ஃபெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். அடுத்து கல்லூரி போகணும். இப்போ அப்பாவோட மனநிலையும்  மாறிடுச்சு. ‘சரி.. வேலைக்குப் போகவேணாம், படிடா’ன்னு சொல்லிட்டார். எனக்கு பி.எஸ்சி கணிதம் படிக்க ஆசை.

ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலயும் இடம் கிடைக்கலே. வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில, ‘பி.ஏ. ஆங்கிலம் இருக்கு,  எடுத்துக்கிறியா’ன்னு கேட்டாங்க. சேந்துட்டேன்...’’ என்கிறார் நந்தகுமார். கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் நந்தகுமாரின் ‘ஆங்கில அறிவைப்’ பார்த்து  மிரண்டு போன பேராசிரியர்கள், ‘நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ணமுடியாது... ஒர்க்ஷாப்புக்குப் போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ’ என்று அறிவுரை சொன்னார்கள். ‘‘போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செமஸ்டர்... தேர்வுக்கு முதல் நாள் அம்மை  போட்டுருச்சு. எழுந்து உக்காரக்கூட முடியலே. தட்டுத்தடுமாறி கல்லூரிக்குப் போயிட்டேன். ஆனா உள்ளே அனுமதிக்கலை. போராடி அனுமதி வாங்கி தனியா  உக்காந்து எழுதுனேன். அடுத்த செமஸ்டர் நேரத்தில பெரிய விபத்து. அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.

அந்த செமஸ்டர்ல ஆங்கிலத்தில டிஸ்டிங்ஷன். இறுதியா, என் பேட்ச்ல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும்தான். பி.ஏ முடிச்சதும்  எம்.ஏவுக்கு நிறைய கல்லூரிகளுக்கு அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில ‘வராண்டா அட்மிஷன்’தான் கிடைச்சுது. வராண்டா அட்மிஷன்னா, ‘போனாப்  போகுது’ன்னு கொடுக்கிறது...’’ என்கிற நந்தகுமாருக்கு அங்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள்தான் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளை எல்லாம்  அறிமுகம் செய்தார்கள். ‘‘எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்குப் படிக்க முடியலே. இடையில, ‘ஆபீசர்ஸ் டிரெயினிங்  அகாடெமி’ நடத்தின ஒரு தேர்வை எழுதுனேன். என்.சி.சி.யில இருந்ததால அந்த வாய்ப்பு கிடைச்சுச்சு. அதுல பாஸ் பண்ணி, ஆர்மியில செகண்ட் லெப்டினென்ட்  வேலைக்குத் தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க.

54 கிலோவா இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. மருத்துவர்களுக்கே புரியாத புதிர். ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்தும் மீண்டு வந்தேன். ஆனா, வேலை  கைவிட்டுப் போயிடுச்சு. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுதி பாஸ் பண்ணினேன். ஏ.எஸ்.ஓவா வேலை கிடைச்சுச்சு. ஆனா அதில்லை என் இலக்கு. அடுத்து குரூப்-1  எழுதினேன்... வெற்றி! கூட்டுறவுத்துறையில துணைப் பதிவாளரா 3 வருஷம் வேலை செஞ்சேன். டெபுடி கலெக்டர் ரேங்க் வர்ற நேரம், யு.பி.எஸ்.சி பாஸ்  பண்ணிட்டேன். ஐ.பி.எஸ் கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கலே. அதனால ஐ.ஆர்.எஸ்ல (இந்திய வருவாய்ப்பணி) சேர்ந்துட்டேன்...’’ -  சிலிர்க்க வைக்கிறார் நந்தகுமார். இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குப் பயணிக்கிறார். தன் கதையைச் சொல்லி, ‘நானே  சாதித்திருக்கிறேன்... நீங்களும் சாதிக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார். மாணவர்களிடம் உற்சாகம் கிளர்ந்தெழுகிறது. ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்கும்  வகுப்பெடுக்கிறார். நந்தகுமாரின் காதல் மனைவி விஜயலெட்சுமி, மெக்கானிக்கல் எஞ்சினியர். இவர்கள் அன்பில் விளைந்த குட்டிப்பையன் சரண், ஸ்கூலில் படிக்கிறான்.

Saturday 12 June 2021

பொய் பேசாதவர்

ஒரு சாமியார் ஒருவர், 
*ஒரு நாள் ஒரு ஊருக்குச் சென்றபோது*,
*“இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது உண்டா? என்று கேட்டபோது, சுப்ரமணியன் என்பவரது வீட்டை காட்டினார்கள்.*

*''அதோ அந்த மாடி வீட்டுதான். நல்லவர், சாது, பக்தர். லட்சாதிபதி. நான்கு பிள்ளைகள்''*

*அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியன் உடனே எழுந்தார். ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர்த்தினார்,*  

*”ஐயா, இங்கு உணவு அருந்தவேண்டும் '' என வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் யோகிக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணினார். பேச்சு கொடுத்தார்.* 

*“உங்களிடம் எவ்வளவு செல்வம் உண்டு?”*

*“சுவாமி! ரூபாய் 22,000/- உண்டு”*

*குழந்தைகள் எத்தனை பேர்?” 

“சுவாமி! ஒரே புதல்வன் தான்” 

“உமக்கு வயது என்ன?” 

“சுவாமி! எனக்கு வயது 4 வருஷம்.

சாமியாருக்கு கோபம் வந்தது.

இவரைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே?''.  

எனவே கோபத்தோடு பேசினார்.

*“ எதற்கு ஒன்றுமில்லாத விஷயத்துக்கு புளுகுகிறீர்கள். நீர் பேசுவ தெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு பூசித்தால், அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் புசிப்பதில்லை.'' சாமியார் எழுந்தார்.*

*சாமியார் காலில் விழுந்து, “ சாமி, நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து உண்மை உணரவேண்டும்'' என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார்.* 

*அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.*

*“முதலியார், உங்கள் கணக்குப் புத்தகமே '' உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டும்போது எப்படி நீங்கள் என்னிடம் 22,000 ரூபாய் என்று பொய் சொன்னீர்கள்.?*
*“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் எனதாகுமா? இதோ பாருங்கள், நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான்; செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து.” என்று சொன்னேன்.*

*சாமியார் ''ஆஹா என்று சந்தோஷமாக தலையாட்டினார்.* 

*' உங்களுக்கு நாலு பிள்ளைகள் இருக்கும்போது ஏன் ஒன்று என்று சொன்னீர்?.*

*''சுவாமி! எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். உண்மையில் ஒருவன் தான் என் பிள்ளை ''*

*''முதலியார் என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?*

*“சுவாமி! இதோ விளக்குகிறேன். முதலியார் '' '' மகனே! நடேசா ” என கூப்பிட்டார்.*

 *''அப்பா நான் சீட்டு விளையாடுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்'' என்று பதில் வந்தது.*

*“மகனே! வடிவேலா'' என முதலியார் குரல் கொடுத்தார்.*

*“ஏன் இப்படிக் கத்தறே , வாயை மூடிக்கொண்டிரு” என்று ஒரு குரல் பதிலாக வந்தது.*

*“என் மகனே! சிவராஜா என்று ஒரு குரல் கொடுத்தார் முதலியார்.* 

*'' உன்னோடு பேச என்னால் ஆகாது, என்று கோபமாக கத்துவது காதில் விழுந்தது.*

*''அப்பா குமரேசா '' என்று ஒரு முறை முதலியார் கூப்பிட்ட கணமே ஒரு பையன் ஓடிவந்தான். அப்பாவையும், எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான்.*  

*முதலியார் சாமியாரிடம் “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பில் நான் செய்த பாவங்களின் உருவங்கள். இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன்.*

*''முதலியார் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏன் உன் வயது விஷயத்தில் நம்பும் படியாக சொல்ல வில்லை? ''*

*“சுவாமி! ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத / பேசாத நாள் எல்லாம், பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால், அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், ''எனக்குச் சொந்தமான வயது 4 வருஷம் தானே'' சரியா ஐயா?*

முதலியார் நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை.

  *1.தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.*

*2.தாய்-தந்தை கருத்தை / பேச்சை கேட்கின்றவர்களே மகன் / மகள்*

3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார்.*

*இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்*

வாழ்க வளமுடன்!

சும்மா - சொல்லாடல்

*சும்மா*==  ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. 

*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*

*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*

*"சும்மா"* ======
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால்  நம்ப முடிகிறதா?*

*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.

*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)

*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)

*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
 (அருமை/in fact)*

*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
 நினச்சியா*?
 (இலவசமாக/Free of cost)

*5. *"சும்மா" கதை அளக்காதே?*
 (பொய்/Lie)

*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* - 
(உபயோகமற்று*/Without use)

*7. *"சும்மா"*  *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*

*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
 (எப்போதும்/Always)

*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*- 
(தற்செயலாக/Just)

*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது* 
(காலி/Empty)

*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)

*12.ஒன்றுமில்லாமல்  *"சும்மா"  போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)

*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*- 
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

*14.அவன்  *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)

*15.எல்லாமே  *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* 
*என்கிற ஒரு சொல். நாம்  பயன் படுத்தும் இடத்தின் படியும்  தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது   *"சும்மா"* இல்லை!)

Fb la irunthu suttathu...😃😄

Sunday 6 June 2021

உருவ வழிபாடு

உருவ வழிபாடு.

இரண்டு இஸ்லாமியர்கள் ரமண மகரிஷியிடம் வந்து கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் விக்கிரங்களை வழிபடுவது முறையா?” என்று கேட்டனர்.

பகவானின் பதில் பின்வரும் உரையாடலில்

மகரிஷி: கடவுளை விட்டு விடு. ஏனெனில் அவரைப் பற்றி நமக்குத் தெரியாது. உனக்கு உருவம் இருக்கிறதா?

பக்தர்: ஆமாம். இந்த உடல்தான் நான். எனக்குக் குறிப்பிட்ட பெயர் இருக்கிறது.

மகரிஷி: அப்படியானால் நீ குறிப்பிட்ட உயரம், தாடி, அவயவங்கள் கொண்ட மனிதன் அல்லவா?

பக்தர் கண்டிப்பாக!

மகரிஷி: அப்படியானால் இதேமாதிரி உன்னை நீ தூக்கத்திலும் காண்கின்றாயா? மேலும், நீ உடலென்றால் மரணத்திற்குப் பிறகு ஏன் உடலைப் புதைக்கின்றார்கள்? உடல்தான் புதைக்கப்படுவதை மறுக்க வேண்டும் அல்லவா?

பக்தர்: இல்லை. நான் இந்த ஜடவுடலில் இருக்கும் சூக்ஷ்ம ஜீவன்.

மகரிஷி: இப்பொழுது நீ உண்மையாகவே உருவமற்றவன் என்று உணர்கின்றாய். ஆனால் தற்பொழுது உடலை நீதான் உடல் என்று நினைக்கின்றாய். உருவமற்ற நீ உன்னை உருவாகக் கருதும் போது ஏன் கடவுளை உருவம் கொண்டவராக எண்ணி வழிபடலாகாது? என்றார்.

பிராணவாயு எனும் பூட்டாங்கயிறு

1989  அருப்புக் கோட்டை   சிவன் கோயிலில் நடைபெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சாமி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு.

அவர் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்பதையும் தாண்டி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.

வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.

அன்று அவர் கூறிய ஒரு தத்துவம். 

மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும். வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு. ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது. 

வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவர் உள்ளான். அவன் தான் பூட்டாங்கயிறால்  வண்டியையும்  மாட்டையும் இணைத்து இயக்குகிறார்.  பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார். 

நம் உடலுக்குப் பெயர் அசித்து.  ஆன்மா பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு. உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது. 

இறைவன் என்னும் வண்டிக்காரன், 
பிராண வாயு (ஆக்ஜிஸன்) என்னும் பூட்டான் கயிறால்  உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டு உள்ளார். வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர். மரணம் வரும்வரை  சரணம் சொல்ல வேண்டும் என்றபோது கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது. 

பிராண வாயு என்னும் ஆக்சிஸனுக்காக இன்று  மக்கள் அல்லல் படுவதை நினைத்தபோது திரு வாரியார் சாமி அவர்களின் கதை நினைவுக்கு வந்தது.  

பூட்டாங்கயிறு முக்கியமாச்சே.

படித்ததில் பிடித்தது.

Saturday 24 April 2021

கோபத்தை துறந்த துறவி

குருவின் பாடம்

யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை! எப்படி இவரால் இருக்க முடிகிறது? என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில் அவரின் ஒரு சிஷ்யருக்கு ஆர்வம். தன் கேள்வியை துறவியிடமே கேட்டு விட்டார். துறவி அவரிடம் பொறுமையாக தான் யாரிடமும் கோபமே படாத ரகசியத்தை விளக்கினார். "ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என் நெடுநாள் வழக்கம். அப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து முட்டியது ஒரு படகு." என் தியானம் கலைந்தது. 'இப்படி அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்?' என்று கோபமாகக் கண்களைத்

திறந்து பார்த்தால்,அது ஒரு வெற்றுப்படகு! காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து நான் தியானம் செய்த படகு மீதி மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்தப் படகிடம் காட்டி எதுவும் பிரயோஜனம் உண்டோ சீடனே? யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். இதுவும் ”வெற்றுப் படகு தான்” என்று அமைதியாகி விடுவேன்" என்றார். கோபத்தின் பாதிப்பை நாம் 3வகைகளாக பிரிக்கலாம்: 

1) கோபம் அறிவை பாதிக்கக் கூடியது, 
2) கோபம் உடலை பாதிக்கக் கூடியது, 
3) கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது. 

புரிந்ததா ரகசியம் என்றார் குரு! குரு கோபப் படாததின் ரகசியம் கேட்ட சிஷ்யர் தெளிவு பெற்றார்.

நீதி:

உண்மையான பலசாலி யார் என்றால், தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. 

Wednesday 14 April 2021

பூர்வஜன்மம்


ஒரு நபர் தனது காரை ஒரு கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு, தனது மகளிடம் சொன்னார்.

"கார்லயே பத்திரமா இரும்மா... உனக்கு  சாக்லேட் வாங்கிட்டு சீக்கிரமா வந்துர்றேன்" மாஸ்க்கை மாட்டிக்கொண்டு  கடைக்கு கிளம்பினார்.

அவர் திரும்பி வந்தபோது, ​​
அவள் காரில் இல்லை. திகைத்தவர், சிறிது தூரம் சுற்றிப் பார்த்தபோது, ​​200 அடி தூரத்தில் ஒரு கட்டிடத்தைப் தன் மகள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

நிம்மதி பெருமூச்சுடன் 
ஓடிச் சென்று 
அவள் முன்னால் நின்றார்.
" என்னம்மா இங்க பண்றே?" என தவிப்புடன் கேட்டார்.

"என்னைத் தடுக்காதீங்க...அப்பா. இந்த பில்டிங்க்கும் எனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குனு  நினைக்கிறேன். போன ஜென்மத்துல  நடந்த ஏதோ ஒரு விஷயம் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கிறேன்.இதப்பத்தி எனக்கு தெரியணும்...நிறைய தெரியணும் " என கத்த ஆரம்பித்தாள்.

அப்பாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் திகைப்புடன் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

" கொஞ்சம்..நில்லுமா" என கெஞ்சினார்.

ஆனால், அவள், அப்பா சொல்வதைக் கேட்காமல்..அந்த கட்டிடத்தை நோக்கி சென்றாள்.

"அதுக்கும் எனக்கும்  என்ன சம்பந்தம்னு தெரியறவரைக்கும்  நான் ஓயமாட்டேன்பா".
 
பொறுமையிழந்த 
அப்பா பளாரென்று மகளின் கன்னத்தில் அறை ஒன்றை விட்டார். கதிகலங்கி போய் நின்ற மகளிடம் சொன்னார்.

"இந்த லீவுல அம்மாவோடவும் பாட்டியோடவும்  சீரியல்ஸ் பாத்து உன் மூளை எப்படி ...இப்டி மழுங்கிப் போச்சு. Covid க்கு முன்னாடி நீ படிச்ச ஸ்கூல்டி...இது."
🤣😂🤣😂🤣😂

Monday 12 April 2021

ஓட்டைப் பானை

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

The Cracked Potஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

Sunday 11 April 2021

அழுக்கு

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
*அழுக்கு*  சிறுகதை. 
🥢🥢🥢🥢🥢🥢🥢🥢🥢🥢

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை தேனீர் குடித்தபடி ஜ  ன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான். 

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. 

தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...???

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள்

கணவன் அமைதியாகச் சொன்னான்,

*“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”*

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. 

*நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.*

*ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.*

*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...??....!!!*

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்......???

*வீரம்* என்பது 
பயப்படாத மாதிரி 
நடிப்பது;

*புத்திசாலித்தனம்* என்பது 
அடுத்தவனை 
முட்டாளாக்குவது; 

*அமைதி* எனப்படுவது 
அடுத்து என்ன பேசனும்னு 
தெரியாமலிருப்பது; 

*குற்றம்* என்பது 
அடுத்தவர் செய்யும்போது மட்டும்
தெரிவது; 

*தானம்* என்பது 
வீட்டில் உள்ள 
பழையதை கொடுப்பது; 

*பணிவு* என்பது 
மரியாதை இருப்பதுபோல் 
நடிப்பது;

*நேர்மை* என்பது 
நூறை திருப்பிக் கொடுத்து 
இருநூறாய் கேட்பது; 

*நல்லவன்* என்பது 
கஷ்டப்பட்டு 
நடிப்பது; 

*எதார்த்தம்* என்பது 
நெல்லை விற்றுவிட்டு 
அரிசி வாங்கிக்கொள்வது; 

*மனிதம்* என்பது 
இன்னமும் கண்டுபிடிக்க 
முடியாதது...!!

பாத்திரம் அறிந்து பிச்சை போடு

#வரம்_ஆன்மீககதை
 
அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர்
தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
-
முனிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்
போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர்
சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது.
அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.
-
ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத்
துரத்தியது. நடுங்கிப் போன நாய், முனிவரின் கால்களில் விழுந்து
கதறியது.
-
கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக்
காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால்
உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம்
மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்’ என்றபடி கண்களை மூடி
மந்திரத்தை உச்சரித்தார்.
-
அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த
சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.
ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது.
ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.
வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது
சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக்
கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
-
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை
சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று
ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர,
நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக
அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.
-
கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல
விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக
மாறியது.
-
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை
உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம்
என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.
-
இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள்,
காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.. வழக்கம் போல் முனிவர்,
அதை சரபமாக மாற்றினார்.
-
சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க கலக்க ஆரம்பித்தது. கண்ணில்
பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு
உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.
-
இப்போதும் ஆபத்து வந்தது. சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.
ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொன்று விட விரும்பியது சரபம்.
-
ஏன்?
-
காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன.
பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச்
சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும்
சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப்
போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று
கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.
-
எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம்
தெரியாதா என்ன? வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப்
பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.
-
அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக,
சோதா நாயாக மாறிற்று.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

பாத்திரம் அறிந்து பிச்சை போடு!!!

Monday 5 April 2021

நிலக்கரி - கர்மவீரர்

நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை.

முதல்வர் ராஜாஜியிடம் முறையிட்டார்.
ஒன்றும் நடக்கவில்லை.
காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர்.

மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார்.

காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் ..

" இதெல்லாம் சாத்தியமில்லை..!"

"ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.."

கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர்.

காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. ..

( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் அரசியல் தலைகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை )

அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர்.

"திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..."

"அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி ..
எங்களால் எப்படி....?"

" நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர்.

முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம்.

1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன.

அடுத்த வருடம் 50 கோடி.

1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார்.

பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல.

மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...!

சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்....

முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார்.

அதோ..

நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர்.

ஓடினார் முதல்வர்....

தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ?

தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார்.

வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது.

இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...!

இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன.

இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை !
ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை.

படித்த பதிவு.

Friday 2 April 2021

மை

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட*மையை* 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர் *தற்பெரு“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ
*பொறா“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். 
வேறு சிலரோ
*பழ“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
*அரு“மை“*யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
*“மை“கள்* 
உள்ளன.
இவை என்ன தெரியுமா? 
*கய“மை“*, 
*பொய்“மை“*, 
*மட“மை“*, 
*வேற்று“மை“* ஆகியவைதாம்.
கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?
*நன்“மை“* தரக்கூடிய
*நேர்“மை“*, 
*புது“மை“*, 
*செம்“மை“*, 
*உண்“மை“*.

இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது 
எவைத் தெரியுமா? 

*வறு“மை“*, 
*ஏழ்“மை“*, 
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே. 

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
*கட“மை“* யாகவும்,
*உரி“மை“ யாகவும்*
கொண்டு சமூகத்திற்குப்
*பெரு“மை“*
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன.
படித்ததில்
பிடித்ததைப் பகிர்ந்தேன்.
இந்த அரு *மை* யான 
நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பலாமே !!!

படித்ததில் பிடித்தது.

Thursday 1 April 2021

பிச்சைகார இராஜா

*தேர்தல் நேரத்தில்
சிரிச்சிட்டு சிந்திங்க*

*ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்ச்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.*

*அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"*  *ன்னு சொன்னார்.*

*மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* 

*ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.* 
*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*

*ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*
*அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிக்கும் ன்னு.*

*ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*

*ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய குடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*

 *ராஜாவுக்கு சந்தோஷம்.*
*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*

 *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*

*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.*

*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*
*வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னு ட்டார்.*

*ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரிய தோட கரெக்டா சொல்லுவான்.*

*மந்திரி போய் அந்த குருடன கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*

*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு....  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி ன்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*

 *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*

*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*
*எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*

 *குருடன் சொன்னான்.*
 *ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம் ன்னும் பிரிச்சேன்.*

 *ராஜா சந்தோஷமா பாக்கெட் ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு ன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*

*இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி குடுக்க ரெடியா இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*
*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார்.*

 *ராஜா பார்த்தார்.*
 *கூப்புடுங்கடா  அந்த கபோதிய.*
 *குருடன் வந்தான்.*
 *ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜா வோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*

*குருடன் சொன்னான்.*
 *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுல இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண குடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*

 *ராஜாவுக்கு ஒரே குஷி.*
*சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*

 *குருடனும் போய்ட்டான்.*

*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடன தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.*

*டேய்.!!*
*நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார்.*

 *குருடன் அமைதியா இருந்தான்.*
 *பதிலே பேசல.*

*ராஜா திரும்ப கேட்டார்.*

*குருடன் அமைதியா  சொன்னான்.*

 *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*

 *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான்.*

 *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*

*ராஜா...*
*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.*

 *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*

 *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*
 *ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன்.*

 *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.*
 *நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன்.*

*ஆக....  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விசயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*  
*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*
*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*

*அந்த குருடனிடம் இருந்த மதிநுட்பம்  தேவையான நிலைமைல தான் இப்ப நாம இருக்கோம்.*

*தெளிவான முடிவெடுத்து அனைவரும் முதலில் தவறாது வாக்களிப்போம்* ..
😎👍

Tuesday 23 March 2021

மார்கெட்டிங்

ஒரு டூவீலர்காரன் க்ராஸிங்க்ல 
ரெட் சிக்னல் போட்டிருந்தும் கவனிக்காதவன் மாதிரி போனான்.

அவனைப் பாத்து இன்னும் அஞ்சாறு டூ வீலர்காரங்களும் ரெட் சிக்னல மதிக்காம போனாங்க.

இத கவனிச்ச ட்ராஃபிக் கான்ஸ்டபிள் முதல்ல போனவனை வுட்டுட்டு இந்த அஞ்சு பேரையும் நிறுத்தி ஃபைன் போட்டாரு.

அதுல கடுப்பான ஒருத்தன் "யோவ், முதல்ல போனவனை ஏன்யா விட்டே" ன்னு கேட்க கான்ஸ்டபிள் சொன்னாரு,

"அவரு எங்க மார்க்கெட்டிங் ஆளு.
இப்படி சிக்னல மதிக்காம போயி போயி மத்தவங்களுக்கு ஆச காட்டி எங்க மன்த்லி டார்கெட்ட முடிக்க ஹெல்ப் பண்ணுவாரு"!!!

Be cautious and follow traffic rules.

😁 😁😁

Tuesday 16 March 2021

மனைவி - சிற்றுரை

தமிழில் மனைவி 
என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்.

01.துணைவி 
02.கடகி 
03,கண்ணாட்டி
04.கற்பாள் 
05 காந்தை
06.வீட்டுக்காரி
07.கிருகம்
08.கிழத்தி
09.குடும்பினி
10.பெருமாட்டி
11.பாரியாள்
12.பொருளாள்
13.இல்லத்தரசி,
14.மனையுறுமகள்
15.வதுகை
16.வாழ்க்கை
17.வேட்டாள் 
18.விருந்தனை 
19.உல்லி
20.சானி
21.சீமாட்டி
22.சூரியை
23.சையோகை
24.தம்பிராட்டி
25.தம்மேய் 
26.தலைமகள்
27.தாட்டி
28.தாரம் 
29.மனைவி
30.நாச்சி
31.பரவை
32.பெண்டு 
33.இல்லாள்
34.மணவாளி 
35.மணவாட்டி
36.பத்தினி 
37.கோமகள்
38.தலைவி 
39.அன்பி
40.இயமானி
41.தலைமகள்
42.ஆட்டி
43.அகமுடையாள்
44.ஆம்படையாள் 
45.நாயகி
46.பெண்டாட்டி
47.மணவாட்டி 
48.ஊழ்த்துணை
49.மனைத்தக்காள்
50.வதூ 
51.விருத்தனை
52.இல்
53.காந்தை
54.பாரியை
55.மகடூஉ
56.மனைக்கிழத்தி
57.குலி
58.வல்லபி
59.வனிதை
60.வீட்டாள்
61.ஆயந்தி
62.ஊடை

நம் தமிழ் மொழியின் சிறப்பே...!!!

ஒவ்வொரு ஊரிலும் இன்றும் ஒரு சில பெயரால் மனைவியை குறிப்பதை நாம் கேட்கலாம்...

இத்தனை பெயர்கள் இருந்தாலும் 
"அடியே" என்பதும், 
பொத்தாம் பொதுவாக 
அவ, இவ
என்பதும் தான் ஆண்களின் வழக்கமாக இருக்கிறது...

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம்  செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண்  அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய கடமைகளும், உரிமைகளும்  சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன.

மேலும் மனைவி என்பவள் அந்த ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். அவனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிப்பவள் ஆகிறாள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவள்.

இசையின் மறுபெயர் தமிழ் - கட்டுரை

இசையின் இன்னொரு பெயர் தமிழ்!

 பெருமதிப்புமிக்க இசை வரலாற்று நூலை எழுதி தமிழுக்கு அளித்திருக்கிறார் அரிமளம் சு.பத்மநாபன். அடிப்படையில் ஓர் அரங்கிசை கலைஞர் இவர். தமிழ் இசை குறித்தும் தமிழ் இசை வரலாறு குறித்தும் சிறந்த ஆய்வு நூல்களையும் வழங்கியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக இசைத் துறை அனுபவமும் ஆசிரியர் பணி அனுபவமும் பெற்றவர். மூன்று நூல்களின் ஆசிரியர்.

இப்போது நாம் பேச எடுத்துக்கொண்டு இருப்பது தமிழிசையும் இசைத்தமிழும் என்ற நூல். இந்நூல், தமிழ் இசை என்ற பொருளின் வரலாற்றை ஆராய்கிறது. முத்தமிழ் நீட்டி முழக்கும் மேடைகளின் கோடைக் காற்று ஏனோ இயலோடு நின்றுவிடுகிறது. இசையின் பக்கம் திரும்புவது இல்லை. நாடகம் சுத்தமாக இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இறைவனை இசையாகக் கண்டவர்கள் தமிழர்கள். ஓசை ஒவ்வொன்றுக்கும் பொருள் உள்ளது என்று சொன்னவர்கள் தமிழர்கள். தமிழை செம்மொழியாக்கிய நாம் இயல், இசை, நாடகம் மூன்றையும் இணைத்து முத்தமிழாகத் தமிழை வளர்த்தெடுக்க என்ன செய்யப் போகிறோம் என்ற மிக முக்கியமான கேள்வி ஒன்றை நூலாசிரியர் நம்மிடம் கேட்கிறார்.

தமிழின் இலக்கண நூலான (கிடைத்தவரையில் முதலாவதான) தொல்காப்பியம் வெறும் எழுத்துகளுக்கும் வார்த்தைகளுக்கும் மட்டும் இலக்கணம் கூறவில்லை. தொல்காப்பியர் எழுத்துகளுக்கான ஓசை கால அளவு குறித்துள்ளார். இந்தக் கால அளவின் அடிப்படையை ஒட்டியே இன்றைய இசை இலக்கணத்தில் தாளமும் இசை காலக் கணக்கும் நடைபோட்டு வருகின்றன. தொல்காப்பியரே இசைக்கான அடிப்படையை நமக்கு தொட்டுக் காட்டியவர்.

இசையின் அளவு

இன்றைய இசை பாடல்களுக்கு - கிருதி, கீர்த்தனை என்றெல்லாம் சொல்லப்படுகிற பாட்டு வகைகளுக்கு உருப்படி என்ற சொல் தமிழில் உண்டு. உரு என்னும் அடிப்படை சொல் எழுத்து உருவை மட்டுமல்ல; அதன் இசையின் அள வையும் குறிப்பிடுகிறது.

மேலும், ச - ரி - க - ம - ப - த - நி என்னும் இசை ஒலியங்களின் பிறப்பிலக்கணமும் தொல்காப்பியத்தை ஒட்டியே விளங்குகின்றது என்பதை ‘சங்கீத ரத்னாகரம்’ என்னும் நூல் தெளிவாக்குகின்றது.

தமிழ் இசை இயல் என்கிற ஒரு கருத்துருவை தொல்காப்பியம் தொடங்கி சிலப்பதிகாரம் என்று வளர்ந்து வந்திருக்கும் இசை வரலாற்றை கொண்டு நாம் உருவாக்கிட முடியும். ஆனால், தமிழருக்கு இசை உணர்வே இல்லை என்று வடமொழியில் ஈடுபாடு கொண்ட சில அறிஞர்கள் ஒரு பொய்யான கருத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சங்க இலக்கியம் தொடங்கி இசை குறித்த தொடர் சிந்தனை தமிழர்களுக்கு உண்டு. இன்றைய இந்திய இசை, கர்னாடக இசை, தென்னிந்திய செவ்விசை ஆகிய அனைத்து இசை வகைகளுக்கும் ஆதாரமாக விளங்கு வது தமிழ் இசையே ஆகும் எனும் கருத்தை நூலாசிரியர் மிகத் தெளிவாக புலப்படுத்தியிருக்கிறார். பின்னர் பக்தி இலக்கியங்களான தேவ திவ்ய பிரபந்தங்களாக உருவெடுத்தன. பக்தி இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பண்கள் இன்றைய கர்னாடக இசையில் வழங்கப்படும் பண்களின் மாற்று பேர்களாகவே இருக்கின்றன. ஆதிகால பெயர்கள் பக்தி இலக்கியத்திலேயும் பின்னர் வந்த கர்னாடக இசையிலும் நாம் கண்டுகொள்ள முடியும்.

பூக்களைக் குடையும் வண்டின் ஒலி

‘அகநானூறு’ பாடல் ஒன்று தமிழர்களின் இசையின் ஆர்வத்தை நமக்கு உணர்த்தும், அந்தப் பாடலின் கருத்து (அகநானூறு 82) மூங்கிலில் வண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகளில் இருந்து காற்று குழல் ஒலிபோல எழுகிறது. அருவியில் வீழும் நீர் மத்தளங்களைப் போல ஒலிக்கிறது. கலை மான்களின் கூட்டம் ஒலிக்கும் கடும்குரல் ‘பெருவங்கியம்’ என்கிற (பெரிய நாதஸ்வரம் போன்ற ஊதுகுழல்) இசையாகவும் பூக்களைக் குடையும் வண்டின் ஒலி யாழ் இசையாகவும் நமக்கு கேட்கின்றன. இந்த இனிமையான இசையைக் கேட்டு மந்திக் கூட்டமும் மயில் கூட்டமும் ஆடுகின்றன. அந்த ஆட்டத்தைச் சென்று பார்ப்போமா என்கிறது ஒரு பெண்ணின் குரல். சங்க இலக்கியங்களில் பலப் பாடல் கள் இசையின் சிறப்பை அடிப்படையாகக் கொண்டவை.

சங்க இலக்கியத்தில் சில ராகங்களின் பெயரை நாம் காண முடிகிறது. அதில் ஒன்று முல்லைப் பண். இன்று நாம் மோகனம் என்று சொல்கிற அந்த ராகமே பழங்காலத்திலே முல்லைப் பண் ஆகும். மேலும் சில பழைய ராகத்தின் பெயர்களை சுவை கருதி காணலாம். ‘கம்பீரநாட்டை’ என்று சொல்லப்படுகிற இப்போதைய ராகம் பழைய ‘நைவளம்’ ஆகும். ‘நடபைரவி’ என்று நாம் சொல்வது பழைய ‘படுமலை’ என்ற ராகம். ‘கரஹரபிரியா’ என்று இப்போது நாம் அழைக்கிற மிக அருமையான ராகம், பழங்காலத்தில் ‘மருதப்பண்’ என்று சொல்லப்படுவது. புகழ்பெற்ற ‘தோடி’ ராகத்துக்கு பழங்காலப் பெயர் ‘விளரிப்பண்’. எல்லோரும் அறிந்த ‘சங்கராபரணம்’ ராகத்தின் பழைய பெயர் ‘பஞ்சுரம்’ என்பதாகும்.

நண்பகலில் பாடும் ராகம் என்னவோ?

மேலும் ஒரு முக்கியமான செய்தியை ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார். பழந்தமிழ் இலக்கியம் எவ்வாறு திணைக் கோட்பாட்டை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) வாழ்க்கை முறையை ராகங்களுக்குக் கூட ஏற்றியிருக்கிறார்கள் தமிழர்கள் என்பதை சொல்கிறார்.

உதாரணத்துக்கு, ‘பாலை’ ராகத்தை நண்பகலில்தான் பாடவேண்டும். ‘ஆம்பல்’ ராகத்தை மாலையிலும் முன் இரவிலும் பாடலாம். ‘குறிஞ்சி’ ராகத்தை நள்ளிரவில் கேட்டால் இரவு இனிமை தரும் என்பது போன்ற கருத்துகள் தமிழர்களிடம் இருந்தது. இவை எல்லாம் சுமார் இரண்டாயிரம் வருட சங்கதிகள். இருந்தாலும், பலர் தமிழனுக்கு இசை இல்லை என்று இன்றும் சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள்.

தமிழிசை பல மாற்றங்களை இன்று அடைந்திருக்கிறது என்றாலும் அதன் அடிப்படை சிதைக்கப்படவில்லை. கர்னா டக இசைக்கும் இந்துஸ்தானிய இசைக்கும் ஆதியாக இருப்பது தமிழிசை என்பதை வரலாற்றுபூர்வமாக நிறுவ முயற்சிக்கிறார் ஆசிரியர். கி.பி. 15-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை தமிழ் இசைக்கு இருண்ட காலம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் தெலுங்கு, சமஸ்கிருதம் முதலான மொழிகளில் கீர்த்தனங்கள் எழுதும் போக்கு இருந்துள்ளது. இந்த நிலை குறித்து ஆபிரகாம் பண்டிதர் ‘சங்கீதத்துக்கு சங்கீத ரத்னாகரர் என்னும் சாரங்க தேவர் எழுதிய நூலே முதல் நூல் என்றும் தமிழ் மக்களுக்கு சங்கீதமே தெரியாதென்றும் சொல்லுகிறார்களே’ என்று வருத்தமாகவும் கவலையோடும் தம்முடைய ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் ஆய்வு நூலில் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் ஆபிரகாம் பண்டிதர்.

இந்த இருளைப் போக்கியவர்களில் மிக முக்கியமானவர் உ.வே.சா ஆவார். 1889-ம் ஆண்டு உ.வே.சா பதிப்பித்த ‘பத்துப்பாட்டு மூலமும் உரையும்’ மற்றும் 1892-ம் ஆண்டு அவர் பதிப்பித்த ‘சிலப்பதிகாரம் மூலமும் உரையும்’ என்னும் இரண்டு பதிப்புகளும் தமிழ் இசை குறித்த ஆய்வின் போக்கையே மாற்றியமைத்தன.

‘திருட்டு நாரதர் முனி’

சங்கரதாஸ் சுவாமிகள் என்னும் பெயர் ஒரு பழமைவாதியையே நம் கண் முன் நிறுத்தும். ஆனால் உண்மை அது அல்ல. உண்மையில் பாரதியாருக்கு முன்பே பெண் சார்ந்த சிந்தனையை மிகத் தீவீரமாக எழுதியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவருடைய ‘வள்ளி திருமணம்’ நாடகம் அத்தகைய காத்திரமான, பெண்ணியல் சார்ந்த எழுத்தாக இப்போது வாசிக்கும்போது தோன்றுகிறது. ஏறக்குறைய ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் நினைவை சுவாமிகள் எழுப்புகிறார்.

அவருடைய ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் நாரதரும் வள்ளியும் சந்திக்கும் இடம் மிகுந்த சுவாரசியம் பொருந்திய இடமாகும். முதலில் நாரதரை ‘புண்ணியமே உருவான முனி’ என்று வள்ளி வரவேற்கிறார். நாரதர் வள்ளியை பார்த்து ‘நீ எந்தக் குலம்?’ என்று கேட்கிறார். ‘மிக வலிமைபெற்ற குறக் குலத்திலே பிறந்தேன்’ என்று சொன்ன வள்ளியிடம் ‘முருகனை திருமணம் செய்துகொள்’ என்று சொல்லுவார் நாரதர். இதைக் கேட்டு வெகுண்டெழுகிறாள் வள்ளி. அதை தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்காகவும், தன் உரிமைக்கு விடப்பட்ட சவாலாகவும் கருதி சீற்றமடைகிறாள்.

அதோடு நிறுத்தவில்லை வள்ளி, ‘பித்தன் மகன் பித்தனுக்கு என்னை கூட்டிக் கொடுக்க வந்திருக்கிறாயோ? உத்தமன் போல நடிக்கிறாயே. இந்தத் தொழிலை எத்தனை நாளாக கைக் கொண்டுள்ளாய்? உன் கை வரிசை என்னிடம் செல்லாது போ’ என்கிறாள். இப்போது நாரதர் ‘ஆறுமுகனை சேர்ந்தால் அடையலாம் பிரம்மானந்தம்’ என்கிறார். அதற்கு வள்ளி ‘கூட்டிகொடுப்பது உங்கள் கோத்திரமா?’ என்கிறாள். அதோடு முடியவில்லை ‘திருட்டு நாரதர் முனியே’ என் கிறாள். நாரதனை திருடன் என்றும் வேடனை கள்ளன் என்றும் வைகிறாள். உண்மையில் சங்கரதாஸ் என்னும் சுவாமிகளின் பெயரோடு இந்த நாடகம் வெளிவந்து இன்றும் நடந்து கொண்டிருப்பது ஒரு பெரும் புரட்சியே ஆகும்.

தமிழிசை அன்றிருந்த நிலையும் இன்றிருக்கும் வளர்ச்சியையும் கண்டுகொள்ள எழுத்தாலும், இசையாலும், நாடகத்தாலும் பணியாற்றிய மகத்தான கலைஞர்களைப் பற்றிய ஓர் அபூர்வமான பதிவு இந்த தமிழிசையும் இசைத் தமிழும் நூலாகும். இந்த நூலை ‘காவ்யா பதிப்பகம்’ நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.

(நன்றி: தி இந்து)

Sunday 14 March 2021

பச்சை

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். 

அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. 

பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். 

அவர் பணக்காரனை வந்து பார்த்தார். 

பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். 

அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். 

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.

தலைவலி குணமாகி விட்டது. 

சன்னியாசி கூறியது சரிதான். 

உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். 

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. 

ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். 

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். 
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். 

வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. 

காரணம் கேட்டார். 

அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். 

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. 

வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. 

“நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. 

“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். 

ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். 

உன் பணமும் வீணாகி இராது. 

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். 

அது சாத்தியமல்ல. 

மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

Friday 12 March 2021

பயம்

ஒரு சர்க்கஸ் கூடாரத்திலிருந்து ஒரு சிங்கம் தப்பித்துவிட்டது.பிடிப்பதற்கு எல்லோரும் ஆயத்தமானார்கள்.

மாஸ்டர் சொன்னார்.சிங்கம் மிக ஆபத்தானது.ஆகவே அதை நெருங்க அதிக தைரியம் தேவை எனவே எல்லோரும் சிறிது மதுவை அருந்திகொள்ளுங்கள்.

எல்லோரும் மது அருந்த முல்லா மட்டும் மறுத்துவிட்டார்.

முல்லா சொன்னார் எனக்கு மது தேவையில்லை.ஏனென்றால் சில அசாத்தியமான நேரத்தில் பயம் தேவைப்படுகிறது.

சிங்கத்தை பிடிப்பதைவிட நான் சிங்கத்திடம் பிடிபடாதிருக்க பயம் தேவைப்படுகிறது.

இது சரியான வழிதான்.

ஏனென்றால் மது உங்களுக்கு அளவுக்கு அதிகமான தைரியத்தை கொடுக்கிறது.அதனாலேயே பல இடங்களில் அபாயத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள்.

ஆனால் அதை விட ஒரு சிறந்த போதை உள்ளது.

அது தாவோ என்னும் போதை.

பலர் மது அருந்துவதே இந்த சமுதாயம் என்னும் பயித்தியக்காரத்தனத்தை சமாளிக்கமுடியாமல் போவதால்தான்.

ஆனால் தாவோ என்னும் போதை அப்படி அல்ல.

அது இந்த சமுதாயத்தையே உங்கள் கிட்டே நெருங்கவிடாமல் செய்கிறது.

__ஓஷோ.

Wednesday 17 February 2021

விடுதலை - ஓஷோ

🏀 விடுதலை 🏀
            இந்தியாவில் வாழ்ந்த ஷாஜகான் என்ற பேரரசர் ஒரு அழகான பெண்னை விரும்பினார் .. ஆனால் அந்த பெண்ணோ அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை .. 
           அவர் ஒரு பெருந்தன்மைக்காரர் ..அதனால் அவர் அவளை சம்மதிக்கவைக்க முயன்றார்..ஆனால் அவரால் முடியவில்லை ..
            ஆனால் அவளோ அவரது மெய்க்காப்பாளர் ஒருவரிடம் காதல் வயப்பட்டு இருந்தாள் ..இதைக் கண்டு கொண்ட அவர் மிகவும் கோபம் அடைந்தார் .. அவர்கள் இருவரும் உடனடியாக பிடிக்கப் பட்டு அரச சபைக்கு கொண்டு வரப்பட்டனர் ..
             ஷாஜகான் அங்கேயே அப்போதே இருவருடைய தலையையும் துண்டிக்க ஆணையிட்டார் .. 
            ஆனால் அவரது வயதான பிரதான மந்திரியாக இருந்த பெரியவர் ஒருவர் , அரசே அப்படி செய்யாதீர்கள் ..அது அவர்களுக்கு சரியான தண்டனையாக அமையாது ..கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் என்று கூறி நான் இவர்களுக்கு சரியான தண்டனையை அளிக்கிறேன் என்றார் ..
             அவர்கள் இருவரையும் நிர்வாணம் ஆக்கி அவர்கள் இருவரும் கட்டிப் பிடுத்துக் கொண்டிருக்கும்படி ஒன்றாக கட்டி அதன் பின் அந்த அரச சபையில் இருந்த ஒரு தூணில் கட்டும்படி ஆணையிட்டார் ..
            இதைக்கேட்ட அங்கிருந்த மற்றவர்களால் இதை நம்ப முடியவில்லை ..இது என்ன தண்டனை இது அவர்களுக்கு ஒரு பரிசு போல அல்லவா அமைந்துள்ளது என்றனர் .. இதைத்தானே அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்று மற்றவர்கள் நினைத்தார்கள் ...
            அந்த இரண்டு காதலர்கள் கூட இது என்ன தண்டனை .. இது ஒரு வெகுமதி போல அல்லவா இருக்கிறது என்று நினைத்து இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள் ..ஆனால் அவர்கள் நினைப்பு தவறாகி விட்டது ..
             இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் ஓடி விடாதபடி ஒரு கயிற்றினால் கட்டப்பட்டு பிறகு ஒரு தூணில் கட்டப்பட்டு இருந்தனர் ..நீங்கள் எவ்வளவு நேரம் தான் ஒருவரைக் கட்டிப் பிடிக்க முடியும் ..ஐந்து நிமிடம் .. அரைமணி நேரம் .. இருபத்தி நான்கு மணி நேரம் சென்றது .. பிறகு ஒருவரை ஒருவர் வெறுத்தனர் ..
             அவர்கள் இருவருக்கும் வியர்த்தது .. அவர்கள் உடலும் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது ... இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து அந்த பிரதம மந்திரி அவர்களை விடுதலை செய்யுங்கள் .. அவர்களின் ஆடைகளை கொடுத்து அனுப்புங்கள் என்றார் ..
             அவர்கள் இருவரும் தங்களின் ஆடைகளைப் பெற்றுக் கொண்டு எதிர் எதிர்த் திசையில் ஓடி விட்டனர் .. அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை .. அவர்கள் போதுமான அளவு சந்தித்து விட்டனர் ..
              உங்கள் உடல் இறக்கப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் ..உயிர்த் துடிப்புள்ள ஏதோ ஒன்று அதனுள் இருந்து கொண்டு உடலை இயக்குகிறது அந்த ஒன்று இந்த உடலை விட்டு பறந்து செல்கின்ற அந்த நொடியே இந்த உடலின் உண்மை நிலை வெளிப்படுத்தப் படும் ..
ஓஷோ ...
விடுதலை 
நீ நீயாக இரு .

Monday 15 February 2021

துயரம் - ஓஷோ

ஒரு ஸென் குருவிடம் சீடர் ஒரு கேள்வி கேட்டார்.

"நாம் ஏன் இவ்வளவு துயரப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?"  <3 

அவர் "அதோ அந்த சைப்ரஸ் மரத்தைப் பார்.!"என்றார்.

கேட்டவர் காட்டிய மரத்தைப் பார்த்தார்."எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!"

"மறுபடி பார்.! அந்த மரத்திற்கு அருகே ஒரு ரோஜாச் செடி இருக்கிறது.
அந்த ரோஜாச் செடி நான் ஏன் குட்டையாக  இருக்கிறேன்  என்று எப்போதும் புகாரிட்டதில்லை."

"அந்த சைப்ரஸ் மரமும் ரோஜாக்களை பார்த்து  நான் மிக உயரமாக வளர்ந்தும் ஏன் என்னிடம் ரோஜாப் பூ மலர்வதில்லை என்று கேட்பதில்லை.

.காலை நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.இரவு நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.ரோஜாச் செடியோ சைப்ரஸ் மரமோ வருந்தி அழுவதை நான் கேட்டதில்லை."

இரண்டும் தாம் எப்படி இருக்கின்றனவோ அதில் திருப்தியோடு இருக்க அங்கே ஆழ்ந்த அமைதிதான் இருக்கிறது.

ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. உயர்ந்தது எது தாழ்ந்தது எது என்ற விசாரணை    இருப்பதில்லை."

ஒப்பிடாத வரையில் வாழ்வில்  பிரச்சினையில்லை. ஒப்பிடாத போது வாழ்வு மிகவும் அழகானது .

*--ஓஷோ--*

சாது

ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் படகில் இருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர். 

அவர் சூரிய பகவானின் பக்தர். அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட ஒரு வாலிபன் கிண்டலாக, உழைக்கப் பயந்த சோம்பேறி மனுஷனான உனக்கு என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு!

 என்று சொல்லி அடிக்கப் பாய்ந்தான்.சாதுவின் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது சூரியபகவான் அசரீரியாக, என் அருமை சாதுவே! நீ கட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றார். இதைக் கேட்ட இளைஞர்கள் பயந்து போனார்கள்.

ஆனால் சாதுவோ,செங்கதிரோனே! எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி சொல்வது? செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்ப்பதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்தார்.உடனே சூரிய பகவான் பேசினார். சாதுவே! 

மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. நீ விரும்பியது போல, இவர்களுக்கு நல்ல புத்தியையும் அளித்தேன், என்றார்.மென்மையான போக்கு தான் மனிதனை வாழ வைக்கும்.

 பழி வாங்குதலும், கோபமும் மனிதனை மிருகமாக்கி விடும்.- கு. சிவஞானம்

அன்பின் ஆழம் - ஓஷோ

அன்பின் ஆழம் பற்றி ஓஷோவின் அற்புத கதை  <3 

ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்த ஒரு ஃபக்கீரின் கதை எனக்கு நினைவிற்கு வருகிறது . 

ஒரு இரவு, நள்ளிரவில், பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது .

 ஃபக்கீரும் அவரது மனைவியும் தூங்கிக்கொண்டிருந்தனர். திடீரென்று, கதவைத் யாரோ தட்டி ,தங்குமிடம்  கேட்டனர் . 

ஃபக்கீர் தனது மனைவியை எழுப்பினார். 

"யாரோ வெளியே சில பயணி, சில அறியப்படாத நண்பர்." இருக்கிறார்கள்," 
என்று அவர் கூறினார். "

நீங்கள் கவனித்தீர்களா? அவர், "சில அறியப்படாத நண்பர்" என்கிறார் .

 உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் கூட நீங்கள் நட்புடன் நடந்து  கொள்வதில்லை. அவரது அணுகுமுறை அன்பில் மூலம் வந்த ஒன்றாகும்.

"தெரியாத சில நண்பர் வெளியே காத்திருக்கிறார், தயவுசெய்து கதவைத் திற" என்று ஃபக்கீர் கூறினார்.

அவரது மனைவி, "இங்கே இடமில்லை. நம்  இருவருக்கும் போதுமான இடம் கூட  இங்கே இல்லை. இன்னும் ஒருவர் எப்படி உள்ளே வர முடியும்?" என்றார் .

அதற்கு ஃபக்கீர் பதிலளித்தார்,

 "என் அன்பே, இது ஒரு பணக்காரனின் அரண்மனை அல்ல. இது சிறியதாக மாற முடியாது. 

ஒரு விருந்தினர் கூட வந்தால் கூட  ஒரு பணக்காரனின் அரண்மனை சிறியதாகத் தெரிகிறது, ஆனால் இது ஒரு ஏழை மனிதனின் குடிசை."

அவரது மனைவி கேட்டார், "ஏழை மற்றும் பணக்காரர்களின் கேள்வி இதில் எப்படி வருகிறது? 
தெளிவான உண்மை என்னவென்றால் இது மிகச் சிறிய குடிசை!"

அதற்கு ஃபக்கீர் பதிலளித்தார், 

"உங்கள் இதயத்தில் போதுமான இடம் இருந்தால், இந்த குடிசை ஒரு அரண்மனை என்று நீங்கள் உணருவீர்கள்.

ஆனால் உங்கள் இதயம் குறுகலாக இருந்தால், ஒரு அரண்மனை கூட சிறியதாகத் தோன்றும். 

தயவுசெய்து கதவைத் திற. நம் வீட்டு வாசலுக்கு வந்த ஒரு மனிதனை நாம் எவ்வாறு மறுக்க முடியும் ?
இப்போது வரை, நாம்  படுத்து உறங்கி கொண்டிருக்கிறோம். மூன்று பேர் படுத்துக்கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் குறைந்தது மூன்று பேர் உட்காரலாம். நாம் அனைவரும் அமர்ந்தால் இன்னொருவருக்கு இடம் கிடைக்கும் . " என்றார் . 

மனைவி கதவைத் திறக்க வேண்டியிருந்தது. அந்த மனிதன்  முழுமையாக  நனைந்து உள்ளே வந்தான். அவர்கள் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து, மேலும் இரண்டு பேர் வந்து கதவைத் தட்டினர்.

"வேறொருவர் வந்துவிட்டதாகத் தெரிகிறது" என்று சொன்ன ஃபக்கீர், 

கதவைத் திறக்க உட்கார்ந்திருந்த விருந்தினரைத் திறக்கச் சொன்னார். 

அந்த மனிதன், "கதவைத் திறக்கவா? இங்கே இடம் இல்லையே " என்றார். 

இந்த குடிசையில் சற்று   முன்பு தஞ்சம் புகுந்த அந்த மனிதன், தனக்கு ஒரு இடம் கொடுத்தது ஃபக்கீரின் அன்பு  தான் என்பதை மறந்துவிட்டான். 

இப்போது, ​​சில புதிய நபர்கள் வந்திருந்தனர். மேலும் அன்பு  புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.

ஆனால் அந்த நபர், "இல்லை, கதவைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் சிரமப்படுவதை இங்கே காணவில்லையா?"

ஃபக்கீர், "என் அன்பே, நான் உங்களுக்காக இடம் கொடுக்கவில்லையா? 

இங்கே அன்பு  இருப்பதால் தான் நீங்கள் அனுமதிக்கப்பட்டீர்கள். அது இன்னும் இங்கே உள்ளது; அது உங்களுடன் முடிவடையவில்லை. 

கதவைத் திற, தயவுசெய்து. இப்போது நாங்கள் அமர்ந்திருக்கிறோம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நாம் உட்கார்ந்து கொள்ளலாம் . மேலும், இரவு குளிர்ச்சியாக இருக்கிறது, மேலும் ஒன்றாக அமர்ந்திருப்பது  நமக்கு  அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் தரும். "

கதவு திறக்கப்பட்டு இரண்டு புதியவர்களும் உள்ளே வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச  ஆரம்பித்தார்கள்.

பின்னர், ஒரு கழுதை வந்து அதன் தலையுடன் வாசலில் முட்டியது . கழுதை ஈரமாக இருந்தது; அது இரவுக்கு தங்குமிடம் வேண்டும் போல . கிட்டத்தட்ட கதவின் மேல் அமர்ந்திருந்த ஒருவரை அதைத் திறக்கும்படி ஃபக்கீர் கேட்டார்.

"சில புதிய நண்பர் வந்துவிட்டார்," என்று ஃபக்கிர் கூறினார்.

வெளியே எட்டிப் பார்த்த அந்த மனிதன், "இது ஒரு நண்பன் அல்லது ஒரு நண்பனைப் போன்ற ஒன்றும் இல்லை. இது ஒரு கழுதை தான் . திறக்கத் தேவையில்லை" என்றார்.

ஃபக்கீர் கூறினார், "பணக்காரர்களின் வாசலில் ஆண்கள் விலங்குகளாக கருதப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.

 ஆனால் இது ஒரு ஏழை ஃபக்கீரின் குடிசை, மேலும் விலங்குகளை கூட மனிதர்களாகக் கருதுவது எங்களுக்குப் பழக்கமாகிவிட்டது.

தயவுசெய்து கதவைத் திறக்கவும். "

ஒரே சத்தத்தில் எல்லாரும் கூறினார்கள் "ஆனால் இடம்?"

"ஏராளமான இடம் உள்ளது. உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, நாம் அனைவரும் நிற்க முடியும். வருத்தப்பட வேண்டாம். அது தேவைப்பட்டால், நான் வெளியே சென்று போதுமான இடத்தை உருவாக்குவேன்."

அன்பு இதை கூட  செய்ய முடியாதா?

பின்பு கதவு திறக்கப் பட்டது .  கழுதை உள்ளே வந்தது . அனைவரும் மகிழ்ச்சியாக நின்று கொண்டு விடியும் வரை பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர் . 

அன்பு நிறைந்த இதயம் இருப்பது கட்டாயமாகும். அன்பான அணுகுமுறை என்பது நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு அன்பான இதயம் இருக்கும்போது மட்டுமே மனிதநேயம் பிறக்கிறது. 

அன்பான இதயத்துடன் ஆழ்ந்த மனநிறைவின் உணர்வு, ஆழமான மற்றும் மகிழ்ச்சியான மனநிறைவு வருகிறது.

-- ஓஷோ 
Osho - From Sex to Superconscious

Sunday 14 February 2021

ஒலி ஆலோசனை - ஓஷோ

🔔 ஒலி ஆலோசனை 🔔

எல்லோருக்குள்ளும் இருப்பதைப் போல உங்களுக்குள்ளும் தொடர்ந்து ஒரு உள்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

அதைக் கேட்பதற்கு நாம் மெளனமாக இருக்கவேண்டும்  

தலை ரொம்பவும் சத்தம் போடுகிறது 

அதனால் நிசப்தமான, இதயத்தின் மெல்லிய குரலைக் கேட்க முடியாத

மேலும் அது மெல்லிய சிறிய குரல்

எல்லாமே அமைதியாக இருந்தால் மட்டுமே அதை கேட்கமுடியும்

ஆனால் 

அதுதான் உங்களுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு 

ஒருமுறை கேட்டுவிட்டால்

நீங்கள் எங்கே இணைந்து  

எங்கே தொடர்பாகி

எங்கே பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரிய வரும்  

ஒருமுறை அதை கேட்டு விட்டால் 

நீங்கள் அதனுள் சுலபமாக செல்லலாம் 

அதில் கவனம் வைத்தால் 

பின் நீங்கள் எளிதாக அதை கேட்கலாம்

நீங்கள் எப்போதெல்லாம் அங்கே போகிறீர்களோ 

அப்போதெல்லாம் அது உங்களுக்கு புத்திளமை அளிக்கும் 

அது உங்களுக்கு அற்புதமான பலத்தை கொடுக்கும்

மேலும் மேலும் அதிக உயிர்ப்போடு வைத்திருக்கும் 

ஒருவர் அந்த உள்சத்தத்தை மறுபடியும் மறுபடியும் கேட்டால் 

அவர் தெய்வீகத்தோடு உள்ள தொடர்பிலிருந்து விலகமாட்டார் 

அவர் இந்த உலகில் வாழலாம்

ஆனாலும் 

அந்த தெய்வீகத்தன்மையோடு தொடர்பிலேயே இருக்கலாம் 

இப்படியே நாளடைவில் இந்த தந்திரத்தை தெரிந்து கொண்டால் 

சந்தையில் இருந்தால்கூட உங்களால் அதை கேட்கமுடியும் 

ஒருமுறை அதை தெரிந்து கொண்டு விட்டால் 

பின் அதை கேட்பதில் சிரமம் எதுவும் இருக்காது 

முதல்முறை கேட்பதில்தான் பிரச்னை

காரணம் எது எங்கிருக்கிறது

அல்லது அது என்ன அதை எப்படி அனுமதிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை 

அதற்கு தேவையானதெல்லாம் மேலும் மேலும் மெளனமாக இருப்பதுதான் 

மெளனமாக உட்காருங்கள்  

உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம்

தினமும் ஒருமணிநேரம், எதுவும் செய்யாதீர்கள் 

உட்காருங்கள் கேளுங்கள் 

சுற்றிலுமுள்ள சத்தங்கள் எல்லாவற்றையும் கேளுங்கள்

எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் 

அதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் சொல்லாமல்

எந்த காரணமுமில்லாமல் கேளுங்கள் 

அங்கே ஒரு சத்தம் இருக்கிறது  

அதனால் அது ஒருவரால் கேட்கப் படுகிறது 

மெதுவாக, மெதுவாக, 

மனது மெளனமாக இருக்கத் துவங்குகிறது

சத்தம் கேட்கப்படுகிறது 

ஆனால் 

மனம் அதற்கு இனிமேலும் விளக்கம் கொடுப்பதில்லை 

இனிமேலும் அதை பாராட்டவில்லை, 

இனிமேலும் அதைபற்றி யோசிப்பதில்லை

திடீரென்று அந்த இருப்பு மாறுகிறது 

மனம் மெளனமாக இருக்கும்போது  

வெளிசத்தத்தை கேட்கும்போது  

திடீரென்று ஒரு புதியசத்தம் கேட்கிறது 

ஆனால் 

அது வெளியே இருந்து இல்லாமல்

உள்ளேயிருந்து கேட்கிறது  

ஒருமுறை கேட்டுவிட்டால் பிறகு கயிறு உங்கள் கையில்தான்

அந்த சங்கிலியையே பின்பற்றுங்கள்

அதில் ஆழமாக இன்னும் ஆழமாக செல்லுங்கள்  

உங்களுடைய இருத்தலில் மிக ஆழமான பகுதி ஒன்றுள்ளது 

அதில் போகதெரிந்தவர்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான உலகத்தில்

ஒரு தனியான யதார்த்ததில் வாழ்பவர்கள் 🔔

📣 ஓஷோ 📣

லாவோத் ஸு - ஓஷோ சிறுகதை

2200 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நடந்தது...
லாவோத் ஸூ(Lao Tzu) மிகவும் புகழ்பெற்ற ஞானியாக இருந்தார். 

சீன நாட்டின் சக்கரவர்த்தி,அவரைத் தனது நாட்டின் உச்சநீதிமன்ற தலமை நீதிபதியாக இருக்கும்படி
மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டார். ஏனெனில் அவரைப் போல வேறு யாராலும் நீதி,நெறிகளை நிலைநாட்ட முடியாது என சக்கரவர்த்தி நம்பினார்.

ஆனால் அவரோ, "நான் அதற்கு சரியான ஆள் கிடையாது" என மறுத்து விட்டார். ஆனால் சக்கரவர்த்தி விடாப்பிடியாக வற்புறுத்தவே, "நான் சொல்வதை நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள்.. 

வெறுமனே ஒரே ஒரு நாள் நான் நீதிபதியாக இருந்தால் போதும், நான் அதற்கு சரியான ஆள் அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஏனெனில் உங்களது இந்த அமைப்பு முற்றிலும் தவறானது ஆகும். அடக்கத்தின் காரணமாக இதை உங்களிடம் நான் முன்னதாகவே சொல்லாமலிருந்தேன்.

ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது உங்களது அரசியல் அமைப்புச் சட்டங்கள் இருக்க வேண்டும். எனவே உங்களது வற்புறுத்தலுக்காக
இதை நாம் முயற்சி செய்து பார்ப்போம்" என்றார் ஞானி.

முதல் நாள், அந்த நீதிமன்றத்திற்கு, அந்த தலை நகரத்திலேயே மிகப் பெரிய செல்வந்தரின் வீட்டில், கொள்ளை
அடித்த திருடன் ஒருவன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.

வழக்கை விசாரித்த ஞானி, அந்தச் செல்வந்தர் அந்தத் திருடன் ஆகிய இருவருக்கும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறினார்.
பதறிப் போன செல்வந்தர், 

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் திருட்டு கொடுத்துள்ளேன். நான் எப்படி குற்றவாளி ஆக முடியும்? திருடனுக்கு கொடுத்த அதே கால அளவு நானும் சிறை போக வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயமாகும்? என்று கேட்டார். 

அதற்கு அந்த ஞானி,
" உண்மை! நான் அந்த திருடனுக்கு அநீதி இழைத்து விட்டேன். அந்த திருடனைவிட அதிக காலம் நீங்கள் சிறைவாசம் இருக்க வேண்டும்.ஏனெனில் 

நீங்கள் அளவுக்கு அதிகமாக பணத்தைச் சேமித்து வைத்துக் கொண்டதால், அநேக மக்களுக்கு அந்தப் பணம் கிடைக்காமல் போய்விட்டது.ஆயிரக்கணக்கான மக்கள் ஏழைகளாகவே இன்னும் இருக்கின்றனர்.

நீங்களோ மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகிறீர்கள்.உங்களது இந்தப் பேராசை தான் திருடர்களையே உருவாக்கியுள்ளது. நீங்கள் தான் இதற்கு பொறுப்பு. 

முதல் குற்றவாளியே நீங்கள் தான்" என்றார்.
அந்தச் செல்வந்தர், "நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவதற்கு முன் நான் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டும்.

உங்கள் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது" என்றார்.
"அது அரசியல் சாசனத்தின் தவறாக இருக்கலாம்.அதற்கு நான் பொறுப்பாக முடியாது. போய்,சக்கரவர்த்தியைப் பாருங்கள்" என்றார் ஞானி.

சக்கரவர்த்தியைப் பார்த்த செல்வந்தர் அவரிடம், " இங்கே பாருங்கள், இந்த ஆளை உடனடியாக இந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவர் மிகவும் ஆபத்தானவர். இன்று நான் சிறைக்குச் செல்கிறேன்.

நாளை நீங்களும் சிறைக்கு செல்வீர்கள்.நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த மனிதரை
உடனே வெளியேற்ற வேண்டும். 

அவர் சொல்வது சரியாக இருக்கலாம்.ஆனால் அவர் நம்மையெல்லாம் அழித்து விடுவார்" என்று கூறினார்.
இதைப் புரிந்து கொண்ட சக்கரவர்த்தி, 

"இந்தச் செல்வந்தர் குற்றவாளி என்றால், அதன் பிறகு நான் இந்த தேசத்தின் மிகப் பெரிய குற்றவாளி ஆகிவிடுவேன் என்னையும் சிறைக்கு அனுப்ப ஞானி தயங்கமாட்டார்" என நினைத்தார்.
உடனே, ஞானி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப் பட்டார். அப்போது ஞானி, "நான்
அப்பொழுதே உங்களிடம் கூறினேன்.

நீங்கள் தேவையில்லாமல் எனது நேரத்தை வீணாக்கிவிட்டீர்கள். இந்த தவறான அமைப்பை நடத்திச் செல்வதற்கு உங்களுக்கு ஒரு தவறான ஆள் தான் தேவை"
என்று கூறி விடை பெற்றார்.

ஓஷோ