Monday, 6 November 2017

துன்பங்களுக்கான காரணம்

ஒரு நிமிடக் கதை !

!

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடி இருக்கிறார்கள்?

எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓய மாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.

சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப் பையில் போட்டுக் கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக் கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித் தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போக வேண்டும்”..

“இவ்வளவு தானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான்.
ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்றும் பெரிய சிரமமாய் தெரியவில்லை.
ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக் கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.
அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகி விடும்.
துர் நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள். அதை எனக்கு விளக்கத் தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக் கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக் கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!

கோணி இருப்பதால் தானே அதில் உருளை கிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?
எனவே,

உனக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றம் எடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.
உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

ஆம்,நண்பர்களே..

கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத் தான்...

"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........

மறக்க வேண்டாதவகளை மறந்து விடுவதும் தான் ".
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.

கூரை அஸ்த்திவாரம்

சமீபத்திய தஞ்சை பயணத்தின் போது, பொறியாளர்
ஒருவர் மூலம் நாம் பெற்ற, தஞ்சை பெரியகோவில்
கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்..

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ,  அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.. இந்த பிம்மாந்திர
கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்.. அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்
எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்
4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட
கற்கோவில்.. கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு
அமையும்.. குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல
அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை.. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்
புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்
5 அடிதான்..

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்
இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.
அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது,
ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை
நினைவில் கொள்ளுங்கள்.. கயிறுகளின் பினைப்பு
லூஸாகத்தான் இருக்கும்.. அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்.. கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..

லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,
அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி
மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..

அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற
அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று
இருக்கும்..

*சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும்* *இருக்கும்... என்ற நம் இராஜராஜ சோ ழ மன்னரின் நம்பிக்கை எந்த* *காலத்திலும் பொய்க்காது..*

பாடம்

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

Sunday, 5 November 2017

நான் யார்? ?

*இந்த உலகத்திலேயே மிக மிக கஷ்டமான கேள்வி "நான் யார்?" என்பது தான்.*

இதுவரை நான் படித்த ஆன்மீக புத்தகங்களில் அப்புத்தக ஆசிரியர்கள், "நீ யார்?" என்பதை முதலில் கண்டுபிடி என்று கூறும்போதெல்லாம் குழம்பிப் போய் இருக்கிறேன்.

சில சமயங்களில், "அட போங்கடா", என்று அந்தக் கேள்வியைத் தூக்கி ஓரத்தில் வைத்து விட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய் இருக்கிறேன்.
"நான் என்பது உன் பெயரா?"
"நான் என்பது உன் உடலா?"
"நான் என்பது நீ கண்ணாடியில் பார்க்கிறாயே அந்த முகமா?"
- இது போன்ற கேள்விகள் வந்த போதெல்லாம் முதலில் எரிச்சல் அடைந்திருக்கிறேன்.
...
காலப் போக்கில், இந்த அனைத்து கேள்விகளும் என் மூளைக்குள் ஏதோ வேலை செய்து அலசி ஆராய்ந்து என்னென்னமோ பதில்களைத் தந்தன... என் புரிதலை, வாசித்துக் கொண்டிருக்கும் நண்பர்களாகிய உங்களுக்குக் கடத்த விரும்புகிறேன்.
............

முதலில் சில கேள்விகள்:
1. உடல் - உயிர் - ஆன்மா: இந்த மூன்றும் ஒன்றா?
2. இந்த மூன்றில் உயிருக்கும் ஆன்மாவிற்கும் உங்களால் வித்தியாசம் கண்டு கொள்ள முடிகிறதா?
3. உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு என்ன?
4. உயிருக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு என்ன?
உடலுக்கும் ஆன்மாவுக்குமான தொடர்பு என்ன?
5. உயிர் என்பது உடலுக்கா? ஆன்மாவிற்கா?
..........

மேற்கூறிய இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் குறைந்த பட்சம், கேள்வியாவது புரிந்ததா? சரி... மேலும் சில கேள்விகள்:
........
நண்பர்களே... நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா?
ஒரு குடும்பத்தில் அப்பாவும் அம்மாவும் பரம சாதுவாக இருப்பார்கள், ஆனால், அவர்கள் மகன் ஊரில் பெரிய ரௌடியாக இருப்பான்.
ஒரு குடும்பத்தில் நான்கு பேர் அண்ணன் தம்பிகள் என்றால், அதில் ஒருவன் 1165 மதிப்பெண் எடுத்திருப்பான் 12 ம் வகுப்பில்.... இன்னொருவன் 650 மதிப்பெண் எடுத்திருப்பான்...
ஒரு குடும்பத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீர் என்று ஒருவன் சன்யாசம் சென்று விடுவான்.
....
நண்பர்களே... நீங்கள் யோசித்துப் பார்த்தது உண்டா?
விஞ்ஞானம் சொல்வது உண்மை என்றால், x y கிரோமோசோம் கணக்கில் இன்னார்க்கும் இன்னார்க்கும் பிறந்த குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று விஞ்ஞான அடிப்படை சூத்திரத்தில் மேலே நான் கூறிய அந்த குடும்ப நிகழ்வுகள் எப்படி நடந்திருக்க முடியும்.. நீங்கள் என்ன தான் தாத்தா பாட்டி, கொள்ளு தாத்தா வரைக்கும் வரைபடம் போட்டாலும் x y கிரோமோசோம் சொல்கிற விஞ்ஞானத்தால் இந்த "நான் யார்?" என்கிற கேள்வியை விளக்கி விட முடியாது...

முந்தைய ஜென்மத்தில் ஆன்மீக வளர்ச்சி அடைந்த மனிதன் தான் இந்த ஜென்மத்தில் திடீர் சன்யாசம் சென்று விடுகிறான்.
முந்தைய ஜென்மத்தில் சேர்த்து வைத்த ஞானம் தான் இந்த ஜென்மத்தில் 1165 மதிப்பெண் பெற வைத்தது.
...
இப்போது யோசித்துப் பாருங்கள், நண்பர்களே... இப்போது நீங்கள் அனைவரும் என்ன நிலையில் இருக்கிறீர்களோ அது எல்லாம், நீங்கள் பல ஜென்மங்களாக சேமித்து வைத்த வாழ்வு.
அந்த ஒரே காரணத்தால் தான் எனக்கு இந்த உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட மரியாதை உண்டு, ஏனென்றால், முன் ஜென்மங்களில் நல்ல செயல்கள் செய்யாமல்   உனக்கு மனிதப் பிறவி என்கிற ப்ரோமோஷன் கிடைக்க வாய்ப்பில்லை.
...
ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்:
தினமும் நான் புறாக்களுக்கு உணவு போடுவதுண்டு... அந்தப் புறாக்கள் உணவு உண்பதை அப்படியே ரசித்துப் பார்ப்பது என் வழக்கம். அவற்றில் ஒரு புறா, மற்ற புறாக்களை அடித்து விரட்டும்... வேறு யாரையும் அந்த தானியங்களைக் கொத்தி தின்ன விடாது. ஒரு நாள் இன்னொரு புறாவின் கண்ணிலேயே கொத்தி விட்டது..இது தினசரி  தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தப் புறாவைப் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்: "ஏன் இப்படி கொடுங்கோல் ஆட்சி செய்கிறாய்? உனக்கு இன்னும் எத்தனைப் பிறப்புகள் கடந்து மனிதப் பிறவி கிடைக்குமோ?" என்றெல்லாம் எனக்குள் புலம்பிக் கொள்வேன்.
...
நண்பர்களே...நாம் மனிதனாகப் பிறந்தது நாம் சேர்த்து வைத்த சொத்து..  நீங்கள் இன்று என்ன குணம் படைத்தது இருக்கிறீர்களோ அது நீங்கள் யுகம் யுகமாக சேமித்து வைத்த குணம்... இந்த புரிதல் வந்து விட்டால் போதும் "நான் யார்?" என்ற கேள்விக்கான பதில் தேடும் முனைப்பின் முதல் படியில் நிற்கிறீர்கள் என்று பொருள்..
...
வாழ்க்கையில் சேட்டை செய்யும் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் மிகப் பரிதாபமாக இருக்கும்.. "எவ்வளவு கஷ்டப் பட்டு அடைந்த இந்த மனிதப் பிறவியை, அந்த குணத்தை இப்படி சீரழித்துக் கொள்கிறானே, இவன் தன் ஆன்ம பயணத்தை அறியாத ஒரே காரணத்தால் இப்படி ஆன்மாவை கீழ்நிலைக்கு கொண்டு செல்கிறானே," என்று தோன்றும்...
...
கிளாஸ் ல first ரேங்க் வாங்கிய மாணவன் திடீர் என்று திமிர் பிடித்துப் போய் கடைசி ரேங்க் வாங்குவது போன்றது, மனிதப் பிறவி என்கிற first ரேங்க் வரை வந்து விட்டு ரௌடித்தனம் செய்வது...
...
தன்னை அறிந்த மனிதன் எவனும் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட மாட்டான்.
தன்னை அறிந்தவன் எந்த உயிரையும் கொல்ல மாட்டான்.
தன்னை அறிந்தவன் automatically சைவ உணவு உண்ண தொடங்கி விடுவான்.
தன்னை அறிந்தவன் மரணத்துக்குப் பின் பிறப்பு மறுபடியும் உண்டு என்பதை நம்புவான்.
தன்னை அறிந்தவன் இந்தப் பிறப்புகளை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்.
தன்னை அறிந்தவன் எப்போதும் தன்னுடைய குணம் பாழ் பட்டுப் போவதை அனுமதிக்க மாட்டான்.
தன்னை அறிந்தவன் முடிந்தவரை தனிமையாக இருப்பான்.
...
நீங்கள் நிறைய தனிமையாக இருந்து பாருங்கள் - உங்கள் ஆன்மா உங்களிடம் பேசும். நீங்கள் இத்தனைப் பிறவிகளில் எப்படியெல்லாம் கடந்து வந்தீர்கள் என்பதை உணர வைக்கும்.

மக்களுடன் கலக்க கலக்க நரகத்துக்குள் சென்று விடுவது போல், நம் ஆன்மாவை உணர முடியாமல் போய் விடுகிறோம்.

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மா என்கிற விஷயத்தில் வேறு வேறு தளத்தில் இருப்பீர்கள்... ஒரு தந்தை தன்னை அறியாத மிருகமாக இருக்கலாம், அவருடைய மகன் முற்றும் துறந்த மனிதனாக இருக்கலாம்... இதெல்லாம் விஞ்ஞானம் பதில் சொல்ல முடியாத, கிரோமோசோம் சமாச்சாரம் இல்லாத எல்லை இது...
...
தன்னை அறிதல் தொடர்பாக எழுத வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது....
உங்கள் ஆன்மாவிடம் நிறைய பேசுங்கள்..
உங்களை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும்...

நன்றி...

Saturday, 4 November 2017

எது எப்பொழுது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும் ..!!

...  DONT WORRY BE HAPPY ....

ஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்..??

ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்) உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது..!!

அப்போது எமதர்மரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது..!!

இதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம்,

“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்;”அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினாரம்..!!

வாழ்க்கையில் அவ்வப்போது என்ன நடக்கவேண்டுமோ நிகழ்ந்தே தீரும்.

அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்..!!

Wednesday, 1 November 2017

இரகசியம்

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்.....😊

"39ம் நம்பர் அறை கிடைக்குமா?"
"கண்டிப்பாக சார்....."
"நன்றி...."

அந்த அறைக்குச் செல்வதற்கு முன் முதலாளியிடம் ஒரு கறுப்பு கத்தி, 39செமீ நீள வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சு ஒன்று தரச் சொல்லி கேட்டான்.

இதைக் கேட்ட முதலாளி மிகுந்த ஆச்சரியத்துடன் ஒத்துக் கொண்டார்.

அறைக்குச் சென்ற அந்த வாலிபன் அதன் பின் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை.

இதில் ஆச்சரியமான ஒன்று எதுவென்றால் முதலாளியின் அறை 39ம் அறைக்கு அருகில்.
நடுநிசியைத் தாண்டியவுடன் முதலாளிக்கு பக்கத்து அறையிலிருந்து பல வினோத சப்தங்கள் கேட்டது. காட்டு மிருகங்களின் கத்தல் மற்றும் பாத்திரங்கள் உருளும் சப்தம் என விதவிதமான ஒலிகள்.

அன்று இரவு முழுவதும் முதலாளி உறங்கவில்லை. விதவிதமான ஒலிக்கு காரணத்தை யோசித்தம் விடை கிடைக்கவில்லை.

அடுத்த நாள் காலை அந்த இளைஞன் அறையைக் காலி செய்து சாவியைக் கொடுத்தவுடன் முதலாளி அந்த அறையை செக் பண்ண சொன்னார்.

அந்த அறை மிகவும் சுத்தமாக பொருட்கள் அதனதன் இடத்தில் இருந்தது. அங்கிருந்த மேசையில் அந்த கறுப்பு கத்தி, வெள்ளை நூல் மற்றும் ஆரஞ்சும் இருந்தது.

பின் அந்த இளைஞன் பில்லை செட்டில் செய்து விட்டு ரூம் பாய்ஸ்க்கும் நல்ல டிப்ஸ் கொடுத்து புன்னகையுடன் கிளம்பி விட்டான்.

முதலாளி இதில் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அவன் மேல் மிகுந்த சந்தேகமும் அடைந்தார்.

ஒருவருடத்திற்குப் பின் மீண்டும் வந்த அந்த இளைஞன் அதே அறையைக் கேட்டதோடு மட்டும் அல்லாமல் போன முறை போல் கறுப்புக் கத்தி, 39 செமீ வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சும் கேட்டான்
.
இந்த முறை எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என முதலாளி தூக்கம் விழித்து காத்திருந்தார். கடந்த முறை போலவே நடுநிசியைத் தாண்டியவுடன் அதே போல சப்தங்கள் பக்கத்து அறையிலிருந்து வரத் தொடங்கின ஆனால் இந்த முறை கடந்த வருடத்தை விட அதிகமாக இருந்தது.
அடுத்த நாள் முகம் முழுதும் பன்னகையுடன் கை நிறைய டிப்ஸ் கொடுத்து பில்லை செட்டில் செய்து விட்டு அவன் கிளம்பினான்.

இதற்கான காரணங்களை முதலாளி ஆராயத் தொடங்கினார். எதற்காக 39ம் நம்பர் ரூம் எதற்கு கறுப்பு கத்தி வெள்ளை நூல் ஆரஞ்சு என எவ்வளவு மண்டையை உடைத்துக் கொண்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

முதலாளி மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த வருட மார்ச் மாதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மார்ச் முதல் தேதியே அந்த இளைஞன் வந்தான்.
இந்த முறையும் அதே அறை மற்றும் அதே பொருட்களுடன் அறைக்குள் சென்றான்.

அந்த நாள் இரவும் அதே போல பல சப்தங்களோடு முதலாளிக்கு கழிந்தது.

அடுத்த நாள் அந்த இளைஞன் அறையைக் காலி செய்து விட்டு புறப்படுவதற்கு முன் முதலாளி பணிவுடன் அவனிடம் சப்தங்களுக்கான காரணத்தைக் கேட்க அதற்கு அவன்.....

"இந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது...."

"கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..."
"சத்தியமாக......."

"சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்...."

அதற்குப் பின் அவன் சப்தங்களுக்கான காரணத்தை முதலாளியிடம் சொன்னான்.

ஆனா அந்த முதலாளி ரொம்ப நம்பிக்கையான ஆளுங்கறதுனால இன்னமும் எங்கிட்ட அந்த இரகசியத்தை சொல்லலை.

அவர் சொன்னான்னா கண்டிப்பா நான் உங்களுக்கும் சொல்லிடுறேன்...... ;) ;) 😜😜😜😜😜😜

துப்புவதாக இருந்தால் ஓரமாக போய் துப்பவும்....!...

போனுக்கு நல்லதல்ல...!