Wednesday, 26 October 2022

பட்டாம்பூச்சியின் கனவில்

ஒரு ஜென் குரு மிகவும் அமைதி இழந்து, பதற்றத்துடன் காணப்பட்டார்.

சீடர்கள், அவரிடம் கேட்டார்கள். குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று. ஏன் இப்படி நிம்மதி இழந்து தவிக்கிறீர்கள்.

குரு சீடர்களிடம் சொன்னார் நேற்று இரவு நான் கண்ட கனவில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக மாறி மலருக்கு மலர் தாவிக் கொண்டிருந்தேன் என்றார்.

சீடர்கள் கேட்டார்கள், குருவே இது ஒரு சாதாரண நிகழ்வு தானே!! இதில் கவலைப்பட என்ன இருக்கிறது.

குரு சொன்னார், 'இல்லை. அதில் ஒரு சிக்கல் இருக்கிறது" அதாவது என்னுடைய கனவில் நான் வண்ணத்துப்பூச்சியாக இருக்கிறேன் என்றால்' இப்போது இங்கு இருக்கும் நான், ஏன் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவாக இருக்கக் கூடாது?.

இப்பொழுது இங்கு இருக்கும் நான், ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவாக இருந்து விட்டால்!! அதுதான் என்னுடைய பிரச்சனையும், சிக்கலும்.

சீடர்கள் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்கள். அவர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டது.

உண்மைதானே!! நாம் கனவு காணும் போது கனவில் நடப்பதெல்லாம் உண்மை இல்லை என்று சொல்வதற்கு அங்கு எந்த ஆதாரமும் இல்லை. விழித்து எழும்வரை கனவில் நடப்பதெல்லாம் உண்மையாகவே தெரிகிறது.

அப்படி என்றால் இப்பொழுது இருக்கும் நாம் ஏன் ஒரு கனவாக இருக்கக் கூடாது.

கனவிலும் மகிழ்ச்சி அடைகிறோம்,துக்கம் அடைகிறோம், பயங்கரங்களை சந்தித்து அலருகிறோம்.

விழித்த பிறகும் இவையெல்லாம் நிகழத்தான் செய்கிறது.

உண்மையில் அந்த குரு பதற்றத்தில் இல்லை. அவர் ஒரு விழிப்படைந்த ஞானி.

சீடர்களை சிந்திக்க வைப்பதற்காக அவர் செய்த தந்திரம் இது.

உண்மையாகவே தூங்கும் பொழுது மட்டும் அல்ல. விழித்த பிறகும் நீங்கள் கனவில்தான் இருக்கிறீர்கள்.

*__ஓஷோ.*

Tuesday, 18 October 2022

குறுஞ்செய்தி

ஒரு பெண்மணிக்கு மும்பையில் வேலை கிடைத்தது. பெண்மணியும் தனியாக சென்று வேலையில் சேர்ந்தாள். அவளுக்கு தங்குவகற்கு வசதியான வீடும் கொடுத்தார்கள். அவள் இந்த விபரத்தை தன் கணவணுக்கு தெரி விப்பதற்காக மொபைல் மூலம் எஸ்.எம்.எஸ் செய்து அனுப்பினாள். எஸ்.எம்.எஸ் தவறுதலாக கணவனுக்கு பதில் வேறொறு நபருக்கு சென்று விட்டது. அந்த மனிதர் அப்பொழுது தான் தன் இறந்து போன மனைவிக்கு இறுதி மரியாதைகளை செய்து விட்டு வந்தார். அவர் அந்த எஸ்.எம்.எஸ் ஐ படித்து விட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அந்த எஸ்.எம்.எஸ் கீழே உள்ள படி எழுதி இருந்து. நான் இங்கு நல்ல படியாக வந்து சேர்ந்தேன். தங்குவதற்கு வசதியான இடமும் கிடைத்துள்ளது. நீங்கள் என்னை பற்றி கவலை பட வேண்டாம். முடிந்தால் இரண்டொரு நாட்களில் உங்களையும் அழைத்து கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் மனைவி. தனியாக

Friday, 7 October 2022

*கடவுளை விட குருவே உயர்வானவர்*

🦜🦜🦜🦜

 கடவுளை விட குருவே உயர்வானவர் என்பதை விளக்கும் ஆன்மிகக் கதையை படியுங்கள்.

ஒரு சீடனின் வீட்டுக்கு கடவுளும் சீடனின் குருவும் வருகை தந்தனர். கடவுளையும், குருவினையும் ஒன்றாகப் பார்த்த சீடன் உடனடியாக கடவுளின் அருகில் சென்று அவரின் பாதத்தை தொட்டு வணங்கச் சென்றான்.
உடனே கடவுள் அவனைத் தடுத்து, “முதலில் நீ உன் குருவை வணங்கு” என்று சொன்னார்.

சீடன் குருவினை பணியச் சென்ற போது, “சீடனே, நான் உன் வீட்டுக்கு கடவுளை அழைத்து வந்திருக்கிறேன், அதனால் நீ கடவுளைத்தான் முதலில் வணங்க வேண்டும்” என்று சொன்னார்.

குருவின் உபதேசத்தைக் கேட்ட சீடன் மீண்டும் கடவுளின் அருகில் சென்று அவர் பாதம் பணிய முயன்றான்.

”அப்பனே, உன் வாழ்க்கையில் கடவுளை கொண்டு வந்தவர் உன் குருதான். அவர் தான் என்னை அடைவதற்கு உரிய வழியைக் காட்டி உனக்கு அருளினார், ஆகையால் அவரையே நீ முதலில் வணங்க வேண்டும், ஆகவே நீ அவரிடம் சென்று அவரின் ஆசியைப் பெறுவாயாக “ என்றார் கடவுள்.

சீடன் மீண்டும் குருவிடம் சென்றான்.

“சீடனே ! நான் தான் கடவுளை அடைய வழி காட்டினேன் என்றாலும், அவர் தான் அனைத்துக்கும் பொறுப்பானவர், ஆகவே நீ முதலில் கடவுளிடம் ஆசி பெறுவதுதான் சிறந்தது” என்றார் குரு.

மீண்டும் கடவுளிடம் சென்றான் சீடன்“அப்பனே, அவர் சொல்வது எல்லாம் சரிதான். கடவுள் யார்? குரு என்பவர் யார்? என்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.

ஒவ்வொருவர் செய்யும் செயலுக்கேற்ற கர்ம வினைகளைப் பொறுத்து எந்த வித பாரபட்சமும் இல்லாமல் நான் மனிதர்களுக்கு சந்தோஷத்தையோ துக்கத்தையோ அளிக்கிறேன். நான் யாருக்கும் தீமையோ அல்லது நன்மையோ செய்வதில்லை. அவரவர் செய்யும் கர்ம பலனைத் தான் அவரவர்களுக்கு வழங்குவேன்.

 ஆனால் *குரு* என்பவர் அப்படியல்ல. அவர் தூய்மையானவர். எளிமையானவர். அன்பானவர். குருவினைத்தேடிச் செல்லும் சீடனை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். என்னை அடைய அவனுக்கு வழி காட்டி அருள்வார். அவன் எப்படி இருந்தாலும் அவனை அவர் நெறிப்படுத்தி விடுவார். சீடனின் கர்மபலன் அவனைப் பாதிக்காமல் காப்பார். அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வழிகாட்டி அருள்வார். ஆனால் நான் அதைச் செய்வதே இல்லை. ஆகவே 
*கடவுளை விட குருவே உயர்வானவர்*” என்றார் கடவுள். ..                                                                                    🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

Tuesday, 4 October 2022

உலகில் அதிக வருடங்கள் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள்

❤️ #தமிழ்ப்பேரரசுகள் ❤️

உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது.

சேர ஆட்சிகாலம் - 430 கி.பி. - 1102 = 1532 ஆண்டுகள்
சோழ ஆட்சிகாலம் - 301 கி.பி. - 1279 = 1580 ஆண்டுகள்
பாண்டியர் ஆட்சிகாலம் - 580 கி.பி. -1345 = 1925 ஆண்டுகள்

❤️ #பாண்டியர்கள் ❤️

#முற்காலப்பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி
பெரும்பெயர் வழுதி

#கடைச்சங்கப்பாண்டியர்கள்

முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப்பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப்பெருவழுதி 
மாறன் வழுதி
நல்வழுதி
குறுவழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்

#இடைக்காலப்பாண்டியர்கள்

கடுங்கோன் → கி.பி. 575-600
அவனி சூளாமணி → கி.பி. 600-625
செழியன் சேந்தன் → கி.பி. 625-640
அரிகேசரி → கி.பி. 640-670
ரணதீரன் → கி.பி. 670-710
பராங்குசன் → கி.பி. 710-765
பராந்தகன் → கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792
வரகுணன் → கி.பி. 792-835
சீவல்லபன் → கி.பி. 835-862
வரகுண வர்மன் → கி.பி. 862-880
பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900

#பிற்காலப்பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945
அமரப்புயங்கன் → கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955
வீரபாண்டியன் → கி.பி. 946-966
வீரகேசரி → கி.பி. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293

#தென்காசிப்பாண்டியர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)

❤️#சோழர்கள் ❤️

#முற்காலச்சோழர்கள்
 
செம்பியன்
எல்லாளன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
மாற்றார் இடையாட்சி
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்
பெருநற்கிள்ளி

#இடைக்காலச்சோழர்கள்

விசயாலய சோழன் → கி.பி. 848–881
ஆதித்த சோழன் → கி.பி. 871–907
பராந்தக சோழன் I → கி.பி. 907–955
கண்டராதித்தர் → கி.பி. 955–962
அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963
சுந்தர சோழன் → கி.பி. 963–980
ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971
உத்தம சோழன் → கி.பி. 971–987
இராசராச சோழன் I → கி.பி. 985–1014
இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044
இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054
இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063
வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070

#சாளுக்கியசோழர்கள்

குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120
விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
இராசராச சோழன் II → கி.பி. 1146–1173
இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178
குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218
இராசராச சோழன் III → கி.பி. 1216–1256
இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279

❤️#சேரர்கள் ❤️

பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129
பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184
ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167
அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148
குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180
பெருஞ்சேரலாதன் → கி.பி. 180
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
குட்டுவன் கோதை → கி.பி. 184-194
மாரிவெண்கோ → காலம் தெரியல
வஞ்சன் → காலம் தெரியல
மருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியல
கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு

❤️#பல்லவப்பேரரசுகள் ❤️

#முற்காலப்பல்லவர்கள்

பப்பதேவன் 
சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I

#இடைக்காலப்பல்லவர்கள் 

குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II கி.பி. 400 - 436
சிம்மவர்மன் I II கி.பி. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I

#பிற்காலப்பல்லவர்கள்

சிம்மவர்மன் III 
சிம்மவிஷ்ணு கி.பி. 556 - 590
மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 - 668
மகேந்திரவர்மன் II கி.பி. 668 - 669
பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 - 725
பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 - 796
தந்திவர்மன் கி.பி. 775 - 825
நந்திவர்மன் III கி.பி. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 - 882
அபராஜிதவர்மன் கி.பி. 882 - 901

இவண்
சோழன்.திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்

நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை. இவற்றை உடைக்க முதலில் நம்மிடம் இருந்த பேரரசின் மன்னர்களின் பெயர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் 5 சோழப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் சேரப்பேரரசு, பாண்டியப்பேரரசு பெயர்களைக் கேட்டால், ஒன்று இரண்டு என்று திக்கித்திணறி நிற்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. இதனைக் கட்டுடைப்போம் அதற்காக நான் தொகுத்த பட்டியல் கீழ்வருமாறு. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துரையுங்கள், முடிந்தவரை பரப்புங்கள், நன்றி.

Friday, 30 September 2022

நீ யார்?

*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*

 *சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*

 காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு...
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்! 

உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்!

உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் *சந்திரன்* !
ஒருவர் *சூரியன்* !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்!

உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்!
ஒன்று *செல்வம்!*
இரண்டு *இளமை!*
இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! ....

உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று *பூமி* !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்* !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்! 

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்!

அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று *முடி* !
மற்றொன்று *நகம்* !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்!

உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! 

ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்*
மற்றவன் அவனுக்குத் *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்!

உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! 

சாட்சாத் *சரஸ்வதி தேவி* யே அவர் முன் நின்றாள்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், 
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!

*"நீ மனிதனாகவே இரு"* என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...! 

இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத் தரவேண்டும்! 

பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், கைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையென வாழ்க்கையை இயந்திர மயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது! 

*நீ நீயாகவே "மனிதனாகவே இரு" , வாழ்க வளமுடன் மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.......*

Saturday, 24 September 2022

அமைதி எங்கே

நாட்ல அப்பப்போ ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒருமுறை 'அமைதி'ன்னா என்ன? அப்படிங்கற தத்ரூபமான ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு. இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தாங்க.

மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டுட்டே வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தாங்க.

ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடி வாரத்தில் இருக்கற மாதிரி வரைஞ்சிருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.

மற்றொருத்தர் பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதிபலிச்சிருந்தாங்க.

ஆனா ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு. அதுமட்டுமா இடியோட மழை வேறே கொட்டிட்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்தப்ப நீர் வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.

''இந்த ஓவியத்தை வரைந்தது யார்?'' சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டார்.

மன்னர், ''இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?'' ன்னாரு.

அதுக்கு ஓவியர் ''மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல....

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!.

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!

''சபாஷ்... அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்'' ன்னு கைதட்டின மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

- அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல அது ஒரு வாழ்க்கையும் அல்ல. ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, ''நிச்சயம் ஒருநாள் விடியும்'' என்று விடாமுயற்சியோட தினசரி உழைச்சிட்டிருக்காங்களே அவர்களிடம் இருப்பதுதான் அமைதி!.

Tuesday, 13 September 2022

கடவுள் எப்படி உதவி செய்வார்?

"தன்னம்பிக்கை கதை"

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியன் "மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்!" என்றான்.

"கடவுளே! உதவி செய்!" என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்!" என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

via நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.

Saturday, 18 June 2022

கழுகும் காகமும்

கழுகினை தாக்கும் ஒரே பறவை
 காகம் மட்டுமே.

அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு 
   அதன் கழுத்தில் அலகால் கொத்தும்.
ஆனால் 
மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்
 பதில் தாக்குதல்
 எதுவும் நடத்தாமல் இருக்கும்.

அமைதியாக இருந்து தனது 
அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும் 
கழுகு 
எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர
பறக்கத் துவங்கும்.
உயரம் கூட கூட 

காகத்திற்கு சுவாசிக்க முடியாமல் 
 கடும் சிரமம் ஏற்படும் அதனால் 
ஆக்ஸிஜன் குறைந்து 
அது கீழே விழுந்து விடும்.....

கழுகு செய்யும் புத்திசாலித்தனமான 
      செயல் இதுதான்..... 

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.

நீங்கள் கழுகாக இருக்கப் போகிறீர்களா  
அல்லது 
காகமாக இருக்கப்போகிறீர்களா 
என்பதை நீங்கள் தான்
 முடிவு செய்ய வேண்டும்.... 

படித்ததில்_பிடித்தது 🤔👌👍கழுகினை தாக்கும் ஒரே பறவை
 காகம் மட்டுமே.

அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு 
   அதன் கழுத்தில் அலகால் கொத்தும்.
ஆனால் 
மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்
 பதில் தாக்குதல்
 எதுவும் நடத்தாமல் இருக்கும்.

அமைதியாக இருந்து தனது 
அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும் 
கழுகு 
எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர
பறக்கத் துவங்கும்.
உயரம் கூட கூட 

காகத்திற்கு சுவாசிக்க முடியாமல் 
 கடும் சிரமம் ஏற்படும் அதனால் 
ஆக்ஸிஜன் குறைந்து 
அது கீழே விழுந்து விடும்.....

கழுகு செய்யும் புத்திசாலித்தனமான 
      செயல் இதுதான்..... 

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.

நீங்கள் கழுகாக இருக்கப் போகிறீர்களா  
அல்லது 
காகமாக இருக்கப்போகிறீர்களா 
என்பதை நீங்கள் தான்
 முடிவு செய்ய வேண்டும்.... 

படித்ததில்_பிடித்தது 🤔👌👍

Monday, 23 May 2022

நற்செயல் தள்ளேல்...

ராவணண் சொன்ன அறிவுரை
நற்செயலை உடனே செய்
தீய செயலை தள்ளிப்போடு.

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது...!!

அப்போது ராமர் லட்சுமணனை நோக்கி, லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா" என்று கூறி அனுப்பினார்...!!

லட்சுமணன் அருகில் வந்ததும் இராவணன் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.

ராமன் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும், எமனும், இந்திரனும் 
கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.அப்போது 
நான் எண்ணியது என்ன தெரியுமா ?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். 
அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம்.அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன்.

விளைவு அனைவருக்கும் நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

நல்ல செயலை உடனடியாக 
செய்து முடி. அது பலன் தரும். 

தீய செயலைத் தள்ளிப் போடு. அதைச் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு" என்றான்.

ஸ்ரீராமஜயம்

மனதை கவர்ந்தது.

மாற்றம்

ஒரு நாள் கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து பொறித்த கோழி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், அப்போது ஒரு பிச்சைக்காரன் அவர்களின் வீட்டுக் கதவை தட்டினார், அதற்கு கணவர் யார் கதவைத் தட்டுகிறார் என்றுக் கேட்டார்? மனைவி பிச்சைக்காரன் தட்டுகிறார் அவருக்கு கொஞ்சம் கறியைக் கொடுங்கள் என்றாள்..

அதற்கு கணவன்: வேண்டாம் வேண்டாம் அதெல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

அந்த பிச்சைக்காரனை, துரத்திவிடனர். பின்னர் நாட்கள் கடந்தன, அந்தக் கணவர் வறுமையில் சிக்குண்டு தவியாய் தவித்து அவரும் மனைவியையும் விவாகரத்து பெரும் நிலைமை ஆயுற்று, அந்தப் பெண் வேறொருவரை மறுமணம் செய்துக்கொண்டார், ஒரு நாள் தன் இரண்டாம் கணவருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவர்களருகில் பொறித்த கோழி இருந்தது, அந்நேரத்தில் கதவு தட்டப்பட்டது, அப்போது கணவர் மனைவியிடம் சொன்னார், பிச்சைக்காரன் வந்திருப்பதைப் போல தெரிகின்றது. இந்த முழுக் கோழியையும் அவருக்கு கொடுத்து விடு என்றார், அவருடைய மனைவி அங்கு சென்று அந்த கறியைக் கொடுத்துவிட்டு வரும் போது அழுதுக் கொண்டே வந்தாள்...

கணவன் கேட்டார்: ஏன் அழுகிறாய்? அதற்கு அவள் அந்த யாசகம் கேட்பவர் யாரென்று தெரியவில்லையா என்றாள்?

அதற்கு கணவன்: இல்லை, தெரியவில்லையே என்றார்..

அதற்கு அவள்:
அவர் தான் என்னுடைய
முதல் கணவர்..

அதற்கு அவர் கேட்டார்:
நான் யாரு என்று தெரிகிறதா?..

அதற்கு அவள்: இல்லை தெரியவில்லையே என்றாள்..

அதற்கு கணவன்: நான் தான் முதலில் யாசகம் கேட்டு வந்து உன் முதல் கணவரால் துரத்தியடிக்கபட்ட பிச்சைக்காரன் என்றார்..

நம் நிலைமை எப்படி
வேண்டுமானாலும் கடவுள் மாற்றலாம்..

யாருடைய நிலைமை எப்படி மாறும் என்று கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது....

உங்களிடம் செல்வம் இருக்கிறது.!
என்று மற்றவர்களை கீழ்த்தரமாக பார்க்காதீர்கள்..

ஆடம்பர வாழ்வு நிலையற்றது....

Saturday, 21 May 2022

இந்திராணியின் கிளி

இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதைஎப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,
          
உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,
       
பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,
          
பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,
         
நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,
           
உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து விழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் அதை எடுத்து படித்தனர்
             
அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,
           
எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்.

Monday, 9 May 2022

உறவின்இழைகள்

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். 

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம்  தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். 

அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று...

பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம்  கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். 

மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை 
கற்றுக் கொள் என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று  மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.  

நெடுந்தொலைவில் இருந்தும்  கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப்  பரிசோதிப்பதற்காக வந்தார்கள். 

ஒரு நாள் அவனது மாமா கூறினார்... மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.
 
அவன் அம்மாவிடம்  இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த வாலிபன், அவனாகவே அதனைப் பரிசோதித்தான். அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான். 

அவனுடைய மாமா, ஒரு சிறந்த 
வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம்  தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான். 

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான். மாமா கேட்டார், நெக்லஸை கொண்டு வரவில்லையா? அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

பிறகு அவன் மாமா கூறினார்... நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, *அது போலியானது* என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,  நான் வேண்டுமென்றே  இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.  ஏனென்றால், அப்போது நீ ஒரு  கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய். இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், உண்மையிலேயே போலியானது என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில்,  உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட... உறவு இழையை அறுந்து விடாமல்  காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது. எந்த வித பட்டறிவும் இல்லாமல், நாம் இந்த உலகில் பார்ப்பது, நினைப்பது, தெரிந்து கொள்வது எல்லாமே தவறு என்று கூறுகின்றோம்.

தவறான புரிதல்களால் நம்முடைய உறவு  முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.

நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...!

படிக்க சிந்திக்க.

Saturday, 30 April 2022

கர்மா

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  

மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் வழக்கை விசாரிக்கச் சென்றார்.  

2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, 
"இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
மேலும் ,
அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார். 

நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.  

அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, ​​

மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார். 

அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது.

டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, 
"இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.  

நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவர் நோயாளியிடம், 
"தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?"  

நோயாளி கூறினார்,
"நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 
ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..."

டாக்டர் சொன்னார், 
"நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க...
இப்போது ஞாபகம் வருகிறதா?"

"ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..."

"அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ​​கார் பழுதாகி விட்டது. 

சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.

 குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது.  

நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.  

நீங்கள் பைக்கில் வந்தீர்கள்... 

பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள்.  

பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்... 

சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது.  

நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம். 

'அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' 
என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம்.  

நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள்.  

அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, 
அது விலைமதிப்பற்றது.  

ஆனாலும், 
நான் உங்களிடம், "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன். 

அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள், 

 "எனது விதியும் கொள்கையும் என்னவெனில்...

*பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை.*

*இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்."* 
என்றீர்கள். 

அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன.

'பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்..., 

அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' 
என்று அன்று நினைத்தேன்.  

அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். 

நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.

உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன்.  

இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது.  

நீங்கள் இங்கே என் விருந்தாளி. 

உங்கள் சொந்த விதியின்படி... 
என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது.

இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும்.  

 "நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்."  
மருத்துவர் கூறிவிட்டு 
கேபினை விட்டு வெளியே சென்றார். 

​​அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன... 

அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. 

அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது!
 
*நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன...*

அதுவும் ஆர்வத்துடன்.

*அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.*

*இதுதான் இயற்கை தியதி!..*

Saturday, 29 January 2022

செத்த பாம்பு

*ஒரு குட்டி கதை*
-------------------------------------

*🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*

*அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*
.
*🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*

*பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .*

*குரங்குக்குக் கொஞ்சம் பயம்வந்து விட்டது.*

*கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*

*🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*

*🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான்.*

*குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது.*

*”என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*

*🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை,*

*எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு,*

*மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.*

*“ஐயோ. புத்திகெட்டுப் போய் நானே வலியவந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே”.*

*குரங்கு பெரிதாய்க்குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*

*கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*

*🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*

*குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.*

*🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*

*அவர் நெருங்கி வந்து சொன்னார் ,” எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு” என்றார்.*

*🌼குரங்கோ ,”ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் ” என்றது.*

*அவர் மீண்டும் சொன்னார் ,” பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு “.அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*

*அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா.*

*🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .”இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே ” என்றபடி ஞானி கடந்து போனார்.*


*🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.*

*🌼கவலைகளை விட்டொழியுங்கள்.*

*🌼மகிழ்ச்சியாய் இருங்கள்....*

*🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்,*

*🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்,*

*🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்,*

*🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்,*

*🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்,*

*🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்,*

*🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.*

*🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.*

*🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.*

*பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.*

*எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.*