Saturday, 26 September 2020

சொர்க்கம்

குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார்.

புன்னகைத்த குரு கதை ஒன்றைச் சொன்னார். ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன் ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான் என்று எண்ணி அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான். அச்சம் கொண்ட அவன் அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன் ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான் எனக் கூறி அங்கிருந்து வெளியேறினான். இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும் என்றார் குரு....

காபி டப்பா மூடி

*காபி பொடி டப்பா மூடியில் இவ்வளவு பெரிய சைக்காலஜியா*
கற்பனைக்கதை அல்ல.
அனைவருக்கும் *பாடம்* புகட்டும்
அருமையான *நிகழ்வு.*

எங்க கிராமத்துக்கு பக்கத்துல ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூன்று சென்டுல ஒரு வீடு.

வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள்.

பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். 

இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு.

அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல..

 நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும்.

எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு Sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி.

காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும்.

அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் ஒரு தனி சுகம்.

ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் அவங்க வீட்டுக்கு போகும் போது. காபி டப்பா மூடியை திறக்க முடியாம அந்த பாட்டி, தாத்தா கிட்ட கொடுத்து திறக்க சொல்வாங்க.

தாத்தாவும் மீசையை ஸ்டைல முறுக்கி விட்டுகிட்டு ஒரு வெற்றி சிரிப்புடன் திறந்து கொடுப்பார்.  

பாட்டி ஒரு நமட்டு சிரிப்புடன் அடுப்பங்கரைக்கு போயிருவாங்க. 

இத ரெண்டு மூனு வாரம் பாத்துட்டு, போன வாரம் போயிருந்தப்ப பாட்டிக்கு மூடியை ஈஸியா தொறக்குற மாதிரி ஒரு Device வாங்கி கொடுத்தோம்.

இந்த வாரமும் வழக்கம் போல் எங்கள் ஞாயிறு மாலை Visit. வழக்கம் போல் காபி டப்பாவுடன் தாத்தாவை அணுகினார் பாட்டி. தாத்தாவும் இறுமாப்புடன் திறந்து கொடுக்க, 
பாட்டி உள்ளே சென்றார்.

பாட்டி உள்ளே செல்ல, என் மனைவியும் பின் சென்று.. "பாட்டி, ஏன் அந்த Device use பண்ணி நீங்க டப்பாவை திறக்கல்ல. மறந்துடீங்களானு"
கேட்க …

பாட்டி சிரித்துக்கொண்டே கூறியது தான் இந்த கதையின் ஹைலைட்!

"குழந்தே, இந்த மூடியை திறக்க எதுவும் தேவை இல்லை. நானே திறந்திருவேன். அவர நான் தெறக்க சொல்றதுனாலே அவருக்கு என்னைவிட பலசாலின்னு ஒரு பெருமிதம். சந்தோசம்.

இந்த வீட்டு ஆம்பிளைனு ஒரு கெத்து. இன்னும் நம்ம இந்த வீட்டுக்கு உபயோகமா இருக்கோம் என்ற ஒரு மகிழ்ச்சி. நான் இன்னும் அவரை சார்ந்து இருக்கேன்னு அவருக்கு ஒரு ஆளுமை.

திருமண வாழ்க்கையின் அடிப்படையே ஒருமித்து வாழ்வது தானே. இன்னும் வாழப்போறது கொஞ்சநாள் தான். யாரும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கோமென்ற நினைப்பு இல்லாமல் ஒருமித்து சந்தோசமா வாழனும். அதுக்குத் தான் இந்த நாடகம்"னு சொன்னாங்க.

கொஞ்ச நேரம் என்னால ஒன்னும் பேச முடியல. இந்த மூடியில இவ்வளவு விஷயமா?

வயசானவங்களை Underestimate பண்ணக்கூடாது. அவங்க செயல்களிலும் அர்த்தம் இருக்கு. தன்னாலே யாருக்கும் பிரயோஜனம் இல்லைனு ஒரு நெனப்பு யாருக்கும் வரக்கூடாதுன்னு எவ்வளவு அழகா சொல்றாங்க. செய்றாங்க.

இந்த பாடம் எல்லாம் எந்த பள்ளிக்கூடத்திலும் சொல்லிக்குடுக்க மாட்டாங்க.

இந்த மாதிரி தாத்தா பாட்டிகளை பார்த்து தான் கத்துக்கணும். அதுக்கு அவங்க நம்மளோட இருக்கணும். 🤝🏻

படித்ததில் பிடித்தது

Tuesday, 3 March 2020

பிரித்விராஜன்

அது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது

ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றியபின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்

மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை

ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி

அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி

அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்

இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை  வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி

இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான், அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்

ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி

உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்

தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி, 

போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது 

 யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான், இதற்கு ஜெயசந்திரனின் கொடூரமான திட்டமும் இருந்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் பிரித்வி

கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி

எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதை சம்யுக்தாவும் செய்தாள், ஆம் தீகுளித்து இறந்தாள் அவளோடு பல பெண்கள் செத்தனர்

டெல்லியினை வென்ற கோரி மற்ற ஆப்கன் மன்னர்களை போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை, தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான்

அத்தோடு மிக முக்கியமான காரியத்தை செய்தான், ஆம் தனக்கு உதவிய ஜெயசந்திரனை கொன்றான் கோரி. எதற்காக என்றால் அந்நாளைய வழக்கபடி பிரித்வியின் நாடு ஜெயசந்திரன் பக்கம் போயிருக்கும், கொள்ளைகளோடு கோரி ஊர் திரும்ப வேண்டி இருக்கும்

ஜெயசந்திரன் கணக்கு இதுதான், ஆனால் கொடூரமான கோரி காரியம் முடிந்ததும் அவனை காவு வாங்கினான்

குருடானான பிரித்விராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது அவனுக்கு வழக்கமாயிருந்தது

பைபிளில் சாம்சன் எனும் மாவீரனை மொட்டை அடித்து பிலிஸ்தியர் கண்களை குருடாக்கி கட்டி போட்டு வித்தைகாட்டினர் அல்லவா?

அதே காட்சிகள்

பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று இருந்திருக்கின்றது

குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று

"ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே? இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் கோரி

தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி

அரை போதையில் இருந்த கோரி,  அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்

மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி

ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி. 

அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான், அவனுக்கு வயது 24

24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே

இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், ஜெயசந்திரனின் துரோகமும் பிரித்வியினை சாய்த்தது

துரோகத்தால் வீழ்த்தபட்டான் மாவீரன் பிரித்வி, அவனின் வாழ்வும் காதலும் வீரமும் கடைசியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவிய பாடல்களாயின

இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு

ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது

ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு "பிரித்வி " என‌ அவன் பெயரையே சூட்டியது

இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு "கோரி" என பெயரிட்டு வைத்திருக்கின்றது

900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்

நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ ஜெயசந்திரன் இருந்தான் இன்று மொத்த இந்தியாவும் அவனுக்கு ஆதரவாய் இருகின்றது

பிரித்த்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது

அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்

Wednesday, 18 December 2019

Focus

A daughter went to her father and said, “I won't go to the temple anymore.”

The father said, “May I ask why?”

She said, “When I go there, all I see is people on their mobile phones during service & bhajan. Some are gossiping, some are just not living with integrity, they are all hypocrites.”

Father became silent, and then said, “OK! Can I ask you to do something for me before you make your final decision?”

She said, “Yes, what's that?”

He said, "Please take a glass of water and walk around the temple 3 times; but you mustn’t let any water fall out the glass.”

She said, "Yes, I can definitely do that.”

When she came back, she said, "It's done and here is the glass of water”

He asked her 3 questions:
1. Did you see anybody on their phone? 
2. Did you see anybody gossiping? 
3. Was anybody living without Integrity?

She said, “I didn't see anything! I was only concentrating on the glass & the water within it, making sure the water never dropped”

He told her, "When you go to the temple, this is exactly what you should be doing; you should only be focusing on, thinking about & connecting to God."

Isn't this equally true about Life?
To succeed, it is important to focus only on completing the task at hand at all costs

Monday, 9 December 2019

பக்தன்

"ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான் ,"

காலங்கள் கடந்தும், சிவனின் தரிசனம் அவனுக்குக் கிட்டவில்லை.

அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை.

கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து, வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான்.

சிவன் சிலையை தூக்கிப் பரண் மேல் வைத்து விட்டு, புதிய விஷ்ணு சிலையை வைத்து, பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி, ஊதுவத்தி, ஏற்றினான்.

நறுமணம் அந்த அறை முழுவதும் பரவியது.

நறுமணத்தை உணர்ந்த அவன், பரண் மீது ஏறி, சிவன் சிலையின் மூக்கைத் துணியால் கட்டினான், அப்போது தான் சிவன் அந்த நறுமணத்தை நுகர முடியாது என எண்ணி...!!

துணியை சிவன் மூக்கில் கட்டிய அடுத்த நொடி, சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார்...

வியந்துப் போன அவன் சிவனிடம் கேட்டான்...

"இத்தனை நாட்கள் உன்னை நான் பூஜித்தப் போது காட்சியளிக்காத நீ, இப்பொழுது மட்டும் காட்சி தருவது ஏன்?"

"பக்தா! இவ்வளவு நாட்கள் நீ (என்னை) இதை வெறும் சிலையாக நினைத்தாய்...

இன்று தான் இந்தச் சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய்...

நீ உணர்ந்த அந்த நொடி, நான் உன் கண் முன் வந்து விட்டேன்!!!" என இறைவன் பதிலளித்தார்.

ஓம் நமசிவாய...
சிவாய..

Tuesday, 5 November 2019

THE Naked Truth

According to a 19th century legend, the Truth and the Lie meet one day. The Lie says to the Truth: "It's a marvellous day today"! The Truth looks up to the skies and sighs, for the day was really beautiful. They spend a lot of time together, ultimately arriving beside a well. The Lie tells the Truth: "The water is very nice, let's take a bath together!" The Truth, once again suspicious, tests the water and discovers that it indeed is very nice. They undress and start bathing. Suddenly, the Lie comes out of the water, puts on the clothes of the Truth and runs away. The furious Truth comes out of the well and runs everywhere to find the Lie and to get her clothes back. The World, seeing the Truth naked, turns its gaze away, with contempt and rage.
The poor Truth returns to the well and disappears forever, hiding therein, its shame. Since then, the Lie travels around the world, dressed as the Truth, satisfying the needs of society, because, the World, in any case, harbours no wish at all to meet the naked Truth.

The world famous painting- "The Truth coming out of the well" Jean-Léon Gérôme, 1896.

Sunday, 13 October 2019

ஆசிரியர்

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார்.

அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார்.

ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார்.

அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது, என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார்.

இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார்.

"அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர்.

"உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார்.

மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார்.

" எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு நிகழ்வை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். 

" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார்.

அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது.

எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன்.

அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார்.

ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார்.

நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார்.

எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார்.

எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது.

அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார்.

அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார்.

என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார்.

ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார்.

ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை.

வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை.

அந்த ஆசிரியர் நீங்கள் தான், அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள்.

என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள்.

என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள்.

என்னிடமும் எதுவும் கூறவில்லை.

அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை.

இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது.

அது ஆசிரியர் என்பவர் இப்படி தான்.

கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம்.

இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இவ்வாறான கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்"
என்றார்.

இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மேலும் அந்த இளைஞர் கேட்டார், "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனறு.

அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, நீங்கள் யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார்.

"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார்,

"நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என் மாணவன் எவரையும் நான் தவறானவராக காண விரும்ப வில்லை என்றார் அந்த ஆசிரியர்.

ஆசிரியரைப் போற்றுவோம்.