Thursday 31 October 2024

Mike Tyson


"நான் அதிகாலை 4 மணிக்கு ஓடுகிறேன், ஏனென்றால் என் எதிரி இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். அது எனக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது." ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் பயிற்சியளிப்பீர்களா என்று கேட்டபோது மைக் டைசனின் பதில் இதுதான். டைசன் மேலும் கூறினார், "எனது எதிரிகளில் ஒருவர் அதிகாலை 4 மணிக்கு ஓடுவதை நான் அறிந்தால், நான் அதிகாலை 2 மணிக்கு ஓடத் தொடங்குவேன். யாராவது அதிகாலை 2 மணிக்குப் பயிற்சி செய்தால், பயிற்சியை தொடர நான் தூங்குவதை முழுவதுமாக நிறுத்திவிடுவேன்."

 "ஒழுக்கம் இல்லாமல், நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், நீங்கள் ஒன்றும் இல்லை." - மைக் டைசன்

 படத்தில், ஹெவிவெயிட் சாம்பியனான மைக் டைசன் தனது தினசரி 5-8 கிமீ வாடிக்கையாக ஓடுவதைப் படம்பிடித்துள்ளார், நிருபர்கள் 1987 இல் அவரது தீவிர பயிற்சியை ஆவணப்படுத்தினர்.

"I run at 4 A.M. because I know my opponent is still asleep. It gives me an edge." This was Mike Tyson's response when asked if he really trained every day at dawn. Tyson added, "If I find out one of my opponents runs at 4 A.M., I'll start running at 2 A.M. And if someone trains at 2 A.M., I'll stop sleeping altogether to keep training."

"Without discipline, no matter how talented you are, you’re nothing." – Mike Tyson

In the image, heavyweight champion Mike Tyson is captured running his daily 5-8 km routine, with reporters documenting his intense training in 1987.

👊#copiedpost

Monday 26 August 2024

கர்ணனும் கிருஷ்ணரும்

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக

"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்

என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை

ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.

அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. இங்கு எல்லாம் சரியாக அமைந்த வாழ்க்கை யாருக்கும் இல்லை....

நல்லதே நடக்கும்.

Saturday 8 June 2024

துணை

இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,

அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,

அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,

நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,

கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,

வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,,

கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,,

சோகமே உருவாகி விட்டான்,,,

ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான்,

மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது,

அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்,

"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக,

இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே,

அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,,

புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான்,

அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.

வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது,

ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்,

"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே,

என்ன அது?"

விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்

"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்,

இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு,

இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"

என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,

"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,

என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,,

அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்,

காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்,

கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.

மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான்,

வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்,,,

ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன,

வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து!...

அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது,,,

தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி,,,

நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,

எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.

மனைவி வந்தாள்,,,

கண்ணீரை துடைத்தாள்,,,

அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,

கண்ணீர் மல்க சொன்னாள்;

"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,

விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,

கரியாத்தானே ஆகியிருக்கு,

நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"

தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.

ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.

ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். - கவிஞர் வாலி

சதா உதாசினப்படுத்திகொண்டிருந்தால்

ஆரோக்கியமா இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.

ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.

ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.

Tuesday 27 February 2024

மூன்று விசித்திரமான மனிதர்கள்

ஒரு மதிப்புமிக்க பாடம் கொண்ட கதை.(தவற விடாதீர்கள்)

ஒரு ஏழை மற்றும் பரிதாபகரமான மனிதன் தான் அனுபவித்த அனைத்து கஷ்டங்களால் சோர்வடைந்தான். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை, குடும்பத்திற்கு உணவு கொடுக்க முடியவில்லை. அவன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு வேறு எங்காவது தூர தேசம் செல்ல முடிவு செய்தான், தான் விரும்பும் ஒரு வெற்றியாளராக மாற விரும்பினான்.

ஒரு நாள் காலையில், எழுந்து தனது நீண்ட பயணத்திற்கு தயாராகி கிளம்பினான். இரவும் பகலும் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்தான். சிறிது நாள் கழித்து, அவன் ஒரு ஆற்றின் அருகே மூன்று விசித்திரமான மனிதர்களைக் கண்டான்.

திடீரென்று, முதல் விசித்திரமான மனிதர் அவரிடம் கேட்டார்:
"நீங்கள் வெகு தூரம் வந்துவிட்டதாகத் தெரிகிறது. எங்கே செல்கிறீர்கள்?"

அந்த மனிதன் பதிலளித்தான்,
"எனது வாழ்க்கை எந்த வெற்றியும் இல்லாமல், சாதனை இல்லாமல் இருந்தது. கடந்த காலங்களில் நான் பலமுறை தோல்வியடைந்துள்ளேன். நான் விரும்பும் வாழ்க்கையை அடைய, அதற்கான இடம் தேடி பயணிக்கிறேன்."

இரண்டாவது விசித்திரமான மனிதர் சொன்னார்.
"நீங்கள் எங்களை உன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும், இல்லையெனில் உனது கனவுகளை நீங்கள் அடைய முடியாது."

ஆச்சர்யமும் ஆர்வமும் நிறைந்த அந்த மனிதன் கேட்டான்.
"நீங்கள் அனைவரும் யார்?"

மூன்றாவது விசித்திரமான மனிதர் பதிலளித்தார்,
"என் பெயர் Tesdnim, மற்றும் அவர்கள் பெயர்கள் முறையே, Sucof மற்றும் Ycnetsisnoc. நீ வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் உனக்கு நாங்கள் மூவரும் தேவை."

அந்த மனிதன் சிறிது நேரம் யோசித்தான், பின்னர் மூன்று விசித்திரமான மனிதர்கள் தன்னுடன் வரலாம் என்று ஒப்புக்கொண்டார். அவன் அந்த மூவரையும் மிகவும் நம்பினான். வேறு ஒரு சிறிய நகரத்திற்கு பயணம் செய்த அவர்கள், ஒரு தனியான வீட்டைக் கண்டார்கள், அங்கு வாழ முடிவு செய்தனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழையின் வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியாக மாறியது. அவன் வாழ்க்கையில் தனது கனவுகளை அடைந்தான். அவனுக்கு வேலை கிடைத்தது, பதவி உயர்வு கிடைத்தது, பணக்காரன் ஆனான், ஒரு மாளிகையைக் கட்டி தனது முழு குடும்பத்தையும் அங்கு வாழ வைத்தான்.

ஒரு நாள், அவன் மூன்று விசித்திரமான மனிதர்களை பார்த்து அவர்களிடம் கேட்டான்:

"சொல்லுங்கள் , உண்மையில் நீங்கள் யார்?"

அவர்களில் ஒருவர் புன்னகையுடன் பதிலளித்தார்,

"எங்கள் பெயர்களை நாங்கள் ஏற்கனவே உனக்குச் சொல்லிவிட்டோம். 
எங்கள் பெயரில் நாங்கள் யார் என்ற க்ளூ (துப்பு)உள்ளது.
எங்கள் பெயர்களை சரியாக கண்டுபிடித்தால், இவ்வளவு பெரிய பெரிய வெற்றி எப்படி வந்தது என்று உனக்கு புரியும்" 

"நாங்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள இடைவெளி. யாரேனும் தங்கள் கனவுகளை அடைய வேண்டும் என்றால், நீங்கள் எப்படி எங்களை உங்களோடு கூட்டி சென்றீர்களோ, அதே போல் அவர்களும் எங்களை அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் நினைத்ததை அடைவார்கள்"

நண்பர்களே.. இப்போது உங்களுக்கான சவால்.

அந்த மூன்று பேரும் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் கமெண்ட்டில் பதிவிடுங்கள்..

#ajaykumarperiyasamy #tamilmotivation #mindshiftmaestro

Saturday 30 December 2023

யார் காரணம்?

ஒரு ஜாடியில் 100 கருப்பு எறும்புகளையும் 100 சிவப்பு எறும்புகளையும் போட்டால் ஒன்றும் ஆகாது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் நீங்கள் ஜாடியை கடுமையாக அசைத்தால், எறும்புகள் ஒன்றையொன்று கொல்லத் தொடங்கும். சிவப்பு எறும்புகள் கருப்பு எறும்புகளை தங்கள் எதிரிகளாகவும், கருப்பு எறும்புகள் சிவப்பு எறும்புகளை தங்கள் எதிரிகளாகவும் கருதுகின்றன. ஜாடியை அசைப்பவனே உண்மையான எதிரி. மனித சமூகத்திலும் இதேதான் நடக்கிறது. ஆக, ஒருவரையொருவர் தாக்கும் முன், ஜாடியை அசைப்பது யார் என்று யோசிக்க வேண்டும்!

படித்ததில் பிடித்தது.

Friday 29 December 2023

மை-என். எஸ். கிருஷ்ணன்

மை...
ஒரு சமயம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
மையை 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

சிலர்
தற்பெரு“மை“ யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

சிலரோ பொறா“மை" யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

வேறு சிலரோ
பழ“மை“ யில்
தொட்டு எழுதுகிறார்கள்.

பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
அரு“மை“ யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
“மை“கள்
உள்ளன.
இவை என்ன தெரியுமா?

கய“மை“,
பொய்“மை“,
மட“மை“,
வேற்று“மை“ 
ஆகியவைதாம்.

கூட்டத்தில் கைத்தட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
“மைகள்“
என்னென்ன தெரியுமா?

நன்“மை“ 
தரக்கூடிய
நேர்“மை“,
புது“மை“,
செம்“மை“,
உண்“மை“.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?

வறு“மை“,
ஏழ்“மை“,
கல்லா“மை“,
அறியா“மை“
ஆகியவையே.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
கட“மை“ யாகவும்,
உரி“மை“ யாகவும்
கொண்டு சமூகத்திற்குப்
பெரு“மை“
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி 
விண்ணைப் பிளந்தன.

விருந்து

1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.

"மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 

2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.

3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.
 
திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.

"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?".

மகள் சொன்னாள்.

4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "

நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,

5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?