Friday, 14 August 2015

சிதம்பர இரகசியம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்து.

~*~

Tuesday, 11 August 2015

கண்ணாடி

இடையில் ஒரு தத்துவ முத்து...? ஆனால் படித்ததும் பகிராமல் இருக்க முடியவில்லை
மன்னிக்கவும்...!
கண்ணாடிப் பாடம்!
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!” “என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடி தானே?” “ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?” “ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே எப்போதும் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”
ஆச்சர்யமாக பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?
அப்படிக் கேள். “உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
எத்துணை ஆழமான உவமை இது! “இந்த உவமையில் என்ன இருக்கிறது"?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை யெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவு படுத்துகிறது.
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம், நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால்திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!” “யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் நம் மனத்தை அலங்கரிக்கட்டும்...!!

~*~

Saturday, 8 August 2015

விலை...

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.
அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.
உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.
அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.
அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.
ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.

~*~

Tuesday, 4 August 2015

முன்னே வச்ச காலை முன்னும் பின்னும் வைக்கலாமா?

ஒரு செயலில் இறங்கி விட்டால் “இறுதி வரைக்கும் வந்து பார்’ என்ற சவாலுடன் செயலில் இறங்கி விடவேண்டும்.

ஒரு கதை கேளுங்க!

மன்னன் ஒருவன் தன் படையினருடன், தனக்கு தொந்தரவு தந்து கொண்டிருந்த எதிரி நாட்டுக்கு கப்பல்களில் புறப்பட்டான்.

எதிரிநாடு பெரிய தீவு. படைபலமும் மிக அதிகம். மன்னனுடன் சென்ற வீரர்களுக்கு தங்கள் வெற்றி குதிரைக்கொம்பே என்ற எண்ணம் ஏற்பட்டது.

எப்படியாவது, இதை மன்னனிடம் எடுத்துச் சொல்லி நாடு திரும்பி ஏற்பாடு செய்யுங்கள் என படைத்தலைவரிடம் வேண்டினர்.

படைத்தலைவருக்கும் உண்மை நிலை புரிந்தது.

எதிரிநாட்டை நெருங்கும் முன் கப்பலின் மேல்தளத்தில் நின்ற மன்னனிடம் படைத்தலைவர் இதை எடுத்துச் சொன்னார்.

மன்னன், அவரது முகத்தை ஏற இறங்கப் பார்த்து விட்டு, மீண்டும் கடலை நோக்கினான்.

ஏதும் பேசவில்லை.

மன்னனுக்கு தனது யோசனையில் சம்மதமில்லை என்பதைப் புரிந்து கொண்ட படைத்தலைவர் அமைதியாக திரும்பி விட்டார்.

படைகள் எதிரிநாட்டை அடைந்தன. மன்னன் படைகளிடம்,

“”நாம் வந்த கப்பல்களின் அடியில் துவாரமிட்டு அத்தனையையும் மூழ்கடியுங்கள்,” என்று உத்தரவு போட்டான்.

“”இவனுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?”
என்று யோசித்த படையினர்,

வேறு வழியின்றி அவன் சொன்னதைச் செய்தனர்.

பின் அவர்களிடம், “”எக்காரணம் கொண்டும் எடுத்த செயலை முடிக்காமல் விடக்கூடாது.

ஜெயித்தால் எதிரிகளின் கப்பல்களில் நம் நாட்டுக்கு திரும்புவோம்.

தோற்றால் ஒட்டுமொத்தமாக இங்கேயே மடிவோம்,” என வீர முழக்கமிட்டான்.

மன்னனின் வீரத்தைக் கண்டு வியந்த படையினர் உத்வேகம் பெற்றனர்.

கடுமையாகப் போரிட்டு எதிரிகளின் பெரும்படையை வென்றனர்.

எதிரிகளின் கப்பல்களில் நாடு திரும்பி மக்களின் பாராட்டைப் பெற்றனர்.

முன் வைத்த காலை முன்னும் பின்னும் வைப்பது சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா!

~*~

நல்லவர் நட்பு நல்குதல் நலம்

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர்.

கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும்.

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.

அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “

” ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.

கடைக்காரரும் கிளம்பி விட்டார்.

அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.

“”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது.

பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா என்ற தயக்கம்…

தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் சிந்தித்தவன், “”தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார்.

அவரிடம்,””எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.

கடைக்காரரோ,””ஏன் இப்படி கேட்கிறாய்.

உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்துச் சென்றேன்.

அதனால், பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவையில்லை,” என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.

“”உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே.

வாழ்நாளெல்லாம் உங்களோடு உறவாடினால் பிறவிப்பயனே கிடைத்து விடுமே!” என்றான்.

கடைக்காரர், “” நீ சொல்வது புரியவில்லையே!”என்றார்.

“”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன்.

என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.

ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது.

இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

இப்படி திருடனைக் கூட திருத்தி பக்தராக மாற்றிய அந்தக் கடைக்காரர் வேறு யாருமல்ல. 

ஞானி துக்காராம் தான்!

~*~

உடமை

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே.......

.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?

இவ்வளவு சீக்கிரமாகவா?

என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........

உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........

அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........

குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"

"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."

"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"

"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......

.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

~*~

Monday, 3 August 2015

சமயோசிதம்

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர்.
அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்து பாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய்.
பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவற விட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய்.
அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது.
தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது.
சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய்.
புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.
புலி அருகில் வந்தவுடன்,
"ஆஹா... புலியின் மாமிசம் என்ன சுவை..!
இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே"
என்று நாக்கைச் சுழற்றியபடியே தனக்குத்தானே பேசியது.
அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து,
'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்'
என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.
இந்த சம்பவத்தை மரத்தின் மேல் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று,
நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது.
அதனைப் பார்த்த நாய், ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.
குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும்
கோபம் கொண்ட புலி,
"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்"
என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய்,
பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது
போல பாசாங்கு செய்து கொண்டு,
"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன
குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக..!!
பின் என்ன நடந்திருக்கும் சொல்ல நான் வேண்டியதில்லை,
நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.!!
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்வது,
எந்த சூழ்நிலையிலும் தன்நம்பிக்கையும் முயற்சியையும்
விட்டுவிட கூடாது.
ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் அதை நினைத்து கவலைப்படுவதாலோ வருத்தப்படுவதாலோ எந்த மாறுதலும் நிகழப் போவதில்லை.
அதை நினைத்து கவலைப் படுவதற்கு பதிலாக,
அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்தால்...
நடப்பவையாவது நல்லவையாக நடக்கும்..!! 

~*~