Saturday, 18 June 2022

கழுகும் காகமும்

கழுகினை தாக்கும் ஒரே பறவை
 காகம் மட்டுமே.

அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு 
   அதன் கழுத்தில் அலகால் கொத்தும்.
ஆனால் 
மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்
 பதில் தாக்குதல்
 எதுவும் நடத்தாமல் இருக்கும்.

அமைதியாக இருந்து தனது 
அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும் 
கழுகு 
எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர
பறக்கத் துவங்கும்.
உயரம் கூட கூட 

காகத்திற்கு சுவாசிக்க முடியாமல் 
 கடும் சிரமம் ஏற்படும் அதனால் 
ஆக்ஸிஜன் குறைந்து 
அது கீழே விழுந்து விடும்.....

கழுகு செய்யும் புத்திசாலித்தனமான 
      செயல் இதுதான்..... 

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.

நீங்கள் கழுகாக இருக்கப் போகிறீர்களா  
அல்லது 
காகமாக இருக்கப்போகிறீர்களா 
என்பதை நீங்கள் தான்
 முடிவு செய்ய வேண்டும்.... 

படித்ததில்_பிடித்தது 🤔👌👍கழுகினை தாக்கும் ஒரே பறவை
 காகம் மட்டுமே.

அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு 
   அதன் கழுத்தில் அலகால் கொத்தும்.
ஆனால் 
மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்
 பதில் தாக்குதல்
 எதுவும் நடத்தாமல் இருக்கும்.

அமைதியாக இருந்து தனது 
அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும் 
கழுகு 
எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர
பறக்கத் துவங்கும்.
உயரம் கூட கூட 

காகத்திற்கு சுவாசிக்க முடியாமல் 
 கடும் சிரமம் ஏற்படும் அதனால் 
ஆக்ஸிஜன் குறைந்து 
அது கீழே விழுந்து விடும்.....

கழுகு செய்யும் புத்திசாலித்தனமான 
      செயல் இதுதான்..... 

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.

நீங்கள் கழுகாக இருக்கப் போகிறீர்களா  
அல்லது 
காகமாக இருக்கப்போகிறீர்களா 
என்பதை நீங்கள் தான்
 முடிவு செய்ய வேண்டும்.... 

படித்ததில்_பிடித்தது 🤔👌👍

Monday, 23 May 2022

நற்செயல் தள்ளேல்...

ராவணண் சொன்ன அறிவுரை
நற்செயலை உடனே செய்
தீய செயலை தள்ளிப்போடு.

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது...!!

அப்போது ராமர் லட்சுமணனை நோக்கி, லட்சுமணா, ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா" என்று கூறி அனுப்பினார்...!!

லட்சுமணன் அருகில் வந்ததும் இராவணன் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.

ராமன் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா, ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும், எமனும், இந்திரனும் 
கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர்.அப்போது 
நான் எண்ணியது என்ன தெரியுமா ?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 
ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். 
அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம்.அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன்.

விளைவு அனைவருக்கும் நாசம்.
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

நல்ல செயலை உடனடியாக 
செய்து முடி. அது பலன் தரும். 

தீய செயலைத் தள்ளிப் போடு. அதைச் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு" என்றான்.

ஸ்ரீராமஜயம்

மனதை கவர்ந்தது.

மாற்றம்

ஒரு நாள் கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து பொறித்த கோழி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், அப்போது ஒரு பிச்சைக்காரன் அவர்களின் வீட்டுக் கதவை தட்டினார், அதற்கு கணவர் யார் கதவைத் தட்டுகிறார் என்றுக் கேட்டார்? மனைவி பிச்சைக்காரன் தட்டுகிறார் அவருக்கு கொஞ்சம் கறியைக் கொடுங்கள் என்றாள்..

அதற்கு கணவன்: வேண்டாம் வேண்டாம் அதெல்லாம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

அந்த பிச்சைக்காரனை, துரத்திவிடனர். பின்னர் நாட்கள் கடந்தன, அந்தக் கணவர் வறுமையில் சிக்குண்டு தவியாய் தவித்து அவரும் மனைவியையும் விவாகரத்து பெரும் நிலைமை ஆயுற்று, அந்தப் பெண் வேறொருவரை மறுமணம் செய்துக்கொண்டார், ஒரு நாள் தன் இரண்டாம் கணவருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவர்களருகில் பொறித்த கோழி இருந்தது, அந்நேரத்தில் கதவு தட்டப்பட்டது, அப்போது கணவர் மனைவியிடம் சொன்னார், பிச்சைக்காரன் வந்திருப்பதைப் போல தெரிகின்றது. இந்த முழுக் கோழியையும் அவருக்கு கொடுத்து விடு என்றார், அவருடைய மனைவி அங்கு சென்று அந்த கறியைக் கொடுத்துவிட்டு வரும் போது அழுதுக் கொண்டே வந்தாள்...

கணவன் கேட்டார்: ஏன் அழுகிறாய்? அதற்கு அவள் அந்த யாசகம் கேட்பவர் யாரென்று தெரியவில்லையா என்றாள்?

அதற்கு கணவன்: இல்லை, தெரியவில்லையே என்றார்..

அதற்கு அவள்:
அவர் தான் என்னுடைய
முதல் கணவர்..

அதற்கு அவர் கேட்டார்:
நான் யாரு என்று தெரிகிறதா?..

அதற்கு அவள்: இல்லை தெரியவில்லையே என்றாள்..

அதற்கு கணவன்: நான் தான் முதலில் யாசகம் கேட்டு வந்து உன் முதல் கணவரால் துரத்தியடிக்கபட்ட பிச்சைக்காரன் என்றார்..

நம் நிலைமை எப்படி
வேண்டுமானாலும் கடவுள் மாற்றலாம்..

யாருடைய நிலைமை எப்படி மாறும் என்று கடவுளை தவிர வேறு யாருக்கும் தெரியாது....

உங்களிடம் செல்வம் இருக்கிறது.!
என்று மற்றவர்களை கீழ்த்தரமாக பார்க்காதீர்கள்..

ஆடம்பர வாழ்வு நிலையற்றது....

Saturday, 21 May 2022

இந்திராணியின் கிளி

இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதைஎப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,
          
உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,
       
பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,
          
பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,
         
நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,
           
உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து விழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் அதை எடுத்து படித்தனர்
             
அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,
           
எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்.

Monday, 9 May 2022

உறவின்இழைகள்

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். 

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம்  தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். 

அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று...

பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம்  கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். 

மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை 
கற்றுக் கொள் என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று  மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.  

நெடுந்தொலைவில் இருந்தும்  கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப்  பரிசோதிப்பதற்காக வந்தார்கள். 

ஒரு நாள் அவனது மாமா கூறினார்... மருமகனே, அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா! அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.
 
அவன் அம்மாவிடம்  இருந்து நெக்லஸை பெற்றவுடன், அந்த வாலிபன், அவனாகவே அதனைப் பரிசோதித்தான். அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான். 

அவனுடைய மாமா, ஒரு சிறந்த 
வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம்  தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான். 

நெக்லஸை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான். மாமா கேட்டார், நெக்லஸை கொண்டு வரவில்லையா? அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

பிறகு அவன் மாமா கூறினார்... நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, *அது போலியானது* என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,  நான் வேண்டுமென்றே  இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும்.  ஏனென்றால், அப்போது நீ ஒரு  கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய். இன்று நீ, நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், உண்மையிலேயே போலியானது என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில்,  உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட... உறவு இழையை அறுந்து விடாமல்  காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது. எந்த வித பட்டறிவும் இல்லாமல், நாம் இந்த உலகில் பார்ப்பது, நினைப்பது, தெரிந்து கொள்வது எல்லாமே தவறு என்று கூறுகின்றோம்.

தவறான புரிதல்களால் நம்முடைய உறவு  முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது. நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.

நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...!

படிக்க சிந்திக்க.

Saturday, 30 April 2022

கர்மா

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  

மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் வழக்கை விசாரிக்கச் சென்றார்.  

2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, 
"இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
மேலும் ,
அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார். 

நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.  

அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, ​​

மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார். 

அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது.

டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, 
"இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.  

நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவர் நோயாளியிடம், 
"தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?"  

நோயாளி கூறினார்,
"நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 
ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..."

டாக்டர் சொன்னார், 
"நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க...
இப்போது ஞாபகம் வருகிறதா?"

"ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..."

"அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ​​கார் பழுதாகி விட்டது. 

சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.

 குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது.  

நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.  

நீங்கள் பைக்கில் வந்தீர்கள்... 

பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள்.  

பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்... 

சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது.  

நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம். 

'அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' 
என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம்.  

நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள்.  

அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, 
அது விலைமதிப்பற்றது.  

ஆனாலும், 
நான் உங்களிடம், "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன். 

அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள், 

 "எனது விதியும் கொள்கையும் என்னவெனில்...

*பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை.*

*இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்."* 
என்றீர்கள். 

அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன.

'பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்..., 

அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' 
என்று அன்று நினைத்தேன்.  

அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன். 

நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.

உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன்.  

இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது.  

நீங்கள் இங்கே என் விருந்தாளி. 

உங்கள் சொந்த விதியின்படி... 
என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது.

இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும்.  

 "நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்."  
மருத்துவர் கூறிவிட்டு 
கேபினை விட்டு வெளியே சென்றார். 

​​அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன... 

அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. 

அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது!
 
*நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன...*

அதுவும் ஆர்வத்துடன்.

*அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.*

*இதுதான் இயற்கை தியதி!..*

Saturday, 29 January 2022

செத்த பாம்பு

*ஒரு குட்டி கதை*
-------------------------------------

*🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.*

*அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.*
.
*🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.*

*பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .*

*குரங்குக்குக் கொஞ்சம் பயம்வந்து விட்டது.*

*கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.*

*🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.*

*🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான்.*

*குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது.*

*”என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.*

*🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை,*

*எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு,*

*மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.*

*“ஐயோ. புத்திகெட்டுப் போய் நானே வலியவந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே”.*

*குரங்கு பெரிதாய்க்குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.*

*கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.*

*🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.*

*குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.*

*🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.*

*அவர் நெருங்கி வந்து சொன்னார் ,” எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு” என்றார்.*

*🌼குரங்கோ ,”ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் ” என்றது.*

*அவர் மீண்டும் சொன்னார் ,” பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு “.அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.*

*அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா.*

*🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .”இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே ” என்றபடி ஞானி கடந்து போனார்.*


*🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.*

*🌼கவலைகளை விட்டொழியுங்கள்.*

*🌼மகிழ்ச்சியாய் இருங்கள்....*

*🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்,*

*🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்,*

*🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்,*

*🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்,*

*🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்,*

*🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்,*

*🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.*

*🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.*

*🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.*

*பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.*

*எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.*