Wednesday, 10 February 2021

பெண் பேயிடம் ஒரு கேள்வி - ஜென்

ஜென் கதைகள்: பெண் பேயிடம் ஒரு கேள்வி!

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை  சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், “நான் உன்னை உயிருக்குயிராக  நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை.  நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று  எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால்,  தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “,  என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள்.  அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள்.  அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான். கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்” என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.  அத்துறவியோ புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ  பெருமைப்பட வேண்டும்” என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், “உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,  அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும்  நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.

சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய  அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான். அவ்வளவுதான்,  அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

என்ன, கதையைக் கேட்டாச்சா?  சரி, இப்போ நாம இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும் வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின் அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக் கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….

“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை. பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”

“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன் எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள்  எதிர்த்து நின்று தைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”

“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”

” அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும் அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”

” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”

இன்னும் சிலர்…..

“எனக்கு இந்தக் கதையின் முடிவு பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத் தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”

“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”

ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள் எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில் கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம் பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!

உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும், மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும் உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான் காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.

இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென் துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம். ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால், பேய்கள் என்பவை  நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.  பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு ஒருவர் வந்து  நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!

அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம், பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும். மொத்தத்தில் பேய்கள்  நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப் பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான வாழ்வை வாழலாம்!

இந்த ஜென் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Tuesday, 9 February 2021

காதல் - திருமணம்

*சிரிக்க-சிந்திக்க*
ஒரு ஞானியிடம், அவரது சீடன் ஓரு கேள்வியை கேட்டான். அதாவது *“காதல் என்றால் என்ன? திருமணம் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?* ”என்ற கேள்வியை உதிர்த்தான். இதற்கு பதில் அளித்த ஞானி, *நீ ரோஜா தோட்டத்துக்கு போ. அங்கு உனக்கு பிடித்த உயரமான ரோஜா செடி ஒன்றை பிடுங்கி வா. ஆனால் ஒரு நிபந்தனை., எக்காரணத்தை கொண்டும் நீ போன வழியில் திரும்பி வரக்கூடாது* என்றார்.

உடனே அந்த சீடன் அங்கிருந்து புறப்பட்டு ரோஜா தோட்டத்துக்கு சென்றான். சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி கேட்டார்,”எங்கே உயரமான ரோஜா செடி?”. அதற்கு சீடன் ,” குருவே, நான் தோட்டத்தில் கால் வைத்ததும் உயரமான ஒரு ரோஜா செடி என்னை கவர்ந்தது. ஆனால், அதை விட உயரமான ரோஜா செடி கிடைக்கும் என்று கருதி, தொடர்ந்து நடந்தேன். ஆனால் அதன் பின் அங்கிருந்தவை அனைத்தும் குட்டையான ரோஜா செடிகள்தான். போன வழியில் திரும்பி வரக்கூடாது என்று நீங்கள் நிபந்தனை கூறி இருப்பதால், முதலில் பார்த்த உயரமான ரோஜா செடியை பறித்துக்கொண்டு வர முடியாமல், வெறுங்கையுடன் வந்து விட்டேன்” என்றார்.

இதனை கேட்ட ஞானி, “அதோ அந்த சூரிய காந்தி தோட்டத்துக்கு சென்று, *ஒரு நல்ல, அழகான சூரியகாந்தி செடியை பிடுங்கி வா., ஆனால் ஒரு நிபந்தனை., ஒரு செடியை பிடுங்கிய பின், வேறு ஒரு செடியை பிடுங்க கூடாது* ”என்றார். சிறிது நேரம் கழித்து, ஒரு சூரிய காந்தி செடியுடன், சீடன் வந்து சேர்ந்தான். அப்போது, ஞானி கேட்டார்,-”இதுதான், அந்த தோட்டத்திலேயே அழகான செடியா?”என்று. உடனே அந்த சீடன், “ இதை விட அழகான செடிகள் எல்லாம் இருந்தன. ஆனால் இந்த முறை கோட்டை விட்டு விடக்கூடாது என்று கருதினேன். உங்கள் நிபந்தனை படி, ஒரு செடியை பிடுங்கிய பின், வேறொரு செடியை பிடுங்கக்கூடாது அல்லவா? எனவே, முதலில் அழகாக தோன்றிய ஒரு சூரிய காந்தி செடியை பிடுங்கிக்கொண்டு, திரும்பி பார்க்காமல் ஓடி வந்து விட்டேன்” என்றான்.

அப்போதுதான் ஞானி சொன்னார்: “ *இதுதான் திருமணம். முதலில் நீ ரோஜா தோட்டத்துக்கு சென்று வெறுங்கையாக திரும்பினாயே,, அதுதான் காதல்*. இப்போது புரிகிறதா *காதலுக்கும், திருமணத்துக்கும் உள்ள வித்தியாசம்* 

சீடன்: ஆம் புரிகிறது., புரிகிறது… என்று தலையாட்டினான்.

வாழ்க்கையை வாழ்வது எப்படி - ஜென்

வாழ்க்கை வாழ்வது எப்படி ❤

ஜென் கதைகள் ...
இளைஞன் ஒருவன் " வாழ்க்கை வாழ்வது எப்படி" என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.
ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.

ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார். அவரிடம் " வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் " என்றான்.

" ஓ..... அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார் . முன் அறையில் அமருங்கள் வருவார். " என்றவர் .

ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார்.
இயற்க்கை எழில் கொஞ்சும் மலையையும் , குளிர்ந்த காற்றையும் ,சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும்,ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான் . தேனீர் ஆறிபோய்விட்டது.

சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார் . அவன் எழுந்து வணங்கினான் .

குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.
"வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்" என்றான் .

குரு லேசாக புன்னகை செய்தார் .பின்னர் " உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் கொட்டிவிடு " என்றார்
அவன் அப்படியே செய்தான்.

பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.
அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் . குரு மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார் .
அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான் அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.
"உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?" என்று கேட்ட துறவியிடம் நடந்ததை கூறினான்.
அதற்கு அந்த துறவி "குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டாரே"!! என்றார்.
"ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள்.
மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல் , இந்த அப்பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை .

இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்."
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையை புரிந்து கொண்டான் . அந்த நொடியில் வாழத்தொடங்கினான்

Wednesday, 20 January 2021

புண்ணியக் கணக்கு

பயணி ஒருவர் #ஆட்டோக்காரரிடம்.
எவ்வளவு?.  
என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ? 

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...

ஆட்டோ பறந்தது...

அண்ணே இந்த வழியா போனா
#நீங்கடிபன் எங்கே சாப்பிடுவிங்க...?

#ரோட்டுக்கடைதான் சார் 

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போலாம்  

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா...
அவரது நெற்றிமற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது 

வாங்க 

இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும்
பண்ணாது என்றார், 
ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை, புரோட்டா
என கட்டினோம்...

எவ்ளோம்மா ?.

60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை... சில்லரையாக பொருக்கியது
அந்த அம்மா...

இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்... 
அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...

சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட
விட்டுட்டு வர்ரீங்க?. 

அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், 
வரி என 300-ரூபாய்கொடுத்திருப்போம்...
இல்லையா ?.

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ணா 

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே
இப்படியும் தேடலாம் 

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...

இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

200-ரூபாய் போதும்''

என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கனம் மூச்சு நின்றது

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.

உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து  விடுங்கள்....

நம் உயிரின் பயணம் பலன் பெரும் 🖤♥️.

Tuesday, 15 December 2020

குட்டித் தீவு நவ்ரு

ஆஸ்திரேலியாவுக்கு 
அருகே உள்ள குட்டி தீவு #நவ்ரு (Nauru). 
ஜனத்தொகை 10,000 மட்டுமே. 
தீவின் நீளம் 5 கி.மீ, அகலம் 3 கிமீ.
30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு

மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது...

ஆம்...தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன. 

பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள்.

தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.

அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் 
வந்து இறங்கின.
 பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. 
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது.

ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. 

கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். 
அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்கமுடியும்.

அந்த பணத்தை என்ன செய்தார்கள்?

எல்லாருக்கும் இலவசமாக உணவு, 
டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கிகொடுத்தார்கள். 

அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள்.
 ஹவாயி, நியூயார்க், சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன. 

ஒரு நபருக்காக விமானம் சிங்கப்பூர் போன கதை எல்லாம் உண்டு. 
போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள்.

ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து எல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள் மக்கள்.

அதன்பின் திடீர் என 
ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது. 
கம்பனிகள் விடைபெற்றார்கள்.

அரசின் வருமானம் நின்றது...
விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.

மக்கள் உழைக்க முடியாதவண்ணம் 
மிக குண்டாக இருந்தார்கள்...
இளையதலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.

பாஸ்பேட் சுரண்டபட்டு மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டிருந்தது

அதன்பின் வாழ்க்கைதரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசு தன் நாட்டு குடியுரிமையை காசுக்கு விற்றது. கள்ளகடதல்காரர்கள், அல்கொய்தா, மாபியா கும்பல்கள் எல்லாம் நவுரு வங்கியில் பணத்தை போட்டு கருப்பை வெள்ளை ஆக்கினார்கள். 
கடைசியாக உலகநாடுகள் நவ்ரு மேல் பொருளாதார தடை விதிக்க மக்கள் மறுபடியும் ஏழ்மை நிலைக்கு போனார்கள்.

இன்று உலகின் மிக ஏழ்மை நிரம்பிய, உலகின் மிக குண்டானவர்கள், ஆரோக்கியகுறைவானவ்ர்கள் இருக்கும் நாடாக நவ்ரு ஆகிவிட்டிருக்கிறது

ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியால் தான் மக்கள் ஒருவேளை சோற்றை உண்கிறார்கள்.

பைனான்சியல் டிசிப்ளின் இல்லையெனில் 
வீட்டுக்கும் இதே நிலைதான், 
நாட்டுக்கும் இதே நிலைதான்.

நூறு வருடங்களாக உருவாக்கிய சொத்துகளை கட்டிகாக்க தெரிவது சம்பாதிக்க தெரிவதை விட முக்கியம்..

Wednesday, 9 December 2020

கர்மா...

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..🌴🌴🌴

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை 🌲🌲🌲🌲🌲
நடந்து சென்றே...

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்  🍀🍀

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! 🍀🍀🍀

ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! 🌲🌲🌲

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை; 🌴🌴🌴

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!

காரணம் 
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! 🌴🌴🌴

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்  🍀🍀🍀🌴
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...  அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட...  அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!....🌲🌲🌲🌲

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! 🍀🍀ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!😣😣

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! 💐💐

நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! 🌴🌴

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! 👍👍

"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி.. 🌳🌴

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. 🌴

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! 💐💐

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா? 👌 கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,

இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி. 🌴🌴🌴

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க.. 

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.

"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, 🌴🌲🍀🌴🌴
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.... 

"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!  💐💐

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!    🌴🌲🌸

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ ↪
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....↩
நல்லதை தந்தால் நல்லது வரும்,...🌴🌴

தீமையை தந்தால் தீமை வரும்! 🌴🌴

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா.... 🌴🌲🌳
நிச்சயம் வரும்! 

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!! 🌴

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." 🌴🌴🌴#AVR
வாழ்க வளமுடன் !!😍

Thursday, 26 November 2020

உண்மையான எதிரி

#உங்களுக்குத்_தெரியுமா 

ஒரு ஜாடியில் நூறு சிவப்பு எறும்புகளையும், நூறு கறுப்பு எறும்புகளையும் போட்டு பாருங்கள். ஒன்றும் ஆகாது.

இதுவே அந்த ஜாடியைக் கொஞ்சம் குலுக்கினால் போதும், அவ்வளவுதான் எறும்புகள் ஒன்றை ஒன்று தாக்கி கொன்று அழிந்து போகும்.

சிவப்பு எறும்புகள், கறுப்பு எறும்புகளைத் தன் எதிரியாய்க் கருதும். கறுப்பு எறும்புகளும் சிவப்பு எறும்புகளைத் தன் எதிரியாய்க் கருதும்.

ஆனால் உண்மையான எதிரி ஜாடியை குலுக்கியவன் தான் என்பது அந்த எறும்புகளுக்கு புரியாது.

இது நமது தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும். ஜாதிச் சண்டைகள் போட்டிடும் முன்பு நாம் கேட்க வேண்டிய கேள்வி 

ஜாடியைக் குலுக்கியது யார் ? என்பதே...