Tuesday, 6 March 2018

பச்சத் தண்ணி பத்மநாபன்

*   நேர்மைக்கு   என்றுமே   அழிவில்லை *              

பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர்
‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட
அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால்
அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர்
தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.

“இறைவா…
என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன்.
நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும்.
நீங்களும் எந்த சூழலிலும்
நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து
என் பெயரைக் காப்பாற்றவேண்டும்…” என்று
நா தழு தழுக்க சொன்னார்.

இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க,
கடைசி மகள் ப்ரியா மட்டும்
கோபத்தில் வெடித்தாள்.
ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி
ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான்
பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே
அவளுக்கு கோபம்.

“அப்பா….
உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல்
நீங்கள் எங்களை விட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று
நீங்கள் கூறியவர்கள் எல்லாரும்
அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள்

ஆனால்
நாம் இருக்கும்
இந்த வீடு கூட
வாடகை வீடு தான். ஸாரி…. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம் போதும்.
உங்களை என்னால் பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்….”
என்றாள்.

அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின்
உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.

காலங்கள் உருண்டன.

கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா
ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு
அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள்.
அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே
பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்து விட்டாலும்
ஒரு பார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை நடத்திக்கொண்டிருந்தனர்.
பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.

ப்ரியாவின் முறை வந்ததும்
உள்ளே அழைக்கப்பட்டாள்.

அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர்
“உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா ???” என்றார்.

“ஆமாம்… சார்…”

உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் ….. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா ????”

“ஆமாம்… சார்…” என்றாள்
சற்று நெளிந்தபடி.

“ஒ… நீங்க அவரோட டாட்டரா ??
இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா…
இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா
அதுக்கு அவரும்
ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது
நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னை விட அதிகமா கோட் பண்ணின
நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம
அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி
எனக்கு ஒதுக்கினார். அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு
நான் இல்லை.
இந்த கம்பெனியும் இல்லை.
ஏன்னா…
என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது.
அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி,
இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி கிடைச்சது.
ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்….”

“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த
இதை விட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா…
யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில்
ஜாய்ன் பண்ணிக்கலாம்….” என்றார்.

அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு
வேலை கிடைத்தது. அலுவலகம் வந்து செல்ல
ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள்.
பி.எப்.,
இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும்
ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.

இரண்டு ஆண்டுகள் சென்றன…
ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.

இதற்கிடையே அவர்கள்
சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா
செய்து விட,
அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS
ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.

மாதம்
பத்து லட்ச ரூபாய் சம்பளம்.
கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து
சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.

அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.

“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள். ???”

கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.

“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை.
அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக
அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும்
அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”

“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க ???”

“என் அப்பா இறக்கும் தருவாயில்
அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன்.
என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்.
இன்று நானிருக்கும் நிலைக்கு வர நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்து விட்டேன்.”

“அப்போது
என் தந்தை என்னிடம் கேட்டுக்கொண்டது என் அடியொற்றி செல்வீர்களா என்பதே  ??”

“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு
எனக்கு எல்லாமே
என் அப்பா தான்….” கண்களை துடைத்தபடி சொன்னாள்
ப்ரியா.

நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா ???

உண்மையான நல்ல பெயரை சம்பாதிப்பது
என்பது மிக மிகக் கடினம்.
அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால்
அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.

நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது,
கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை – இவையெல்லாம் தான்
ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன. கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை
விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்…

*“பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதை. விட      புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.

*  நிறைய உண்மை கலந்த கதை இது !!!   *   நேர்மையாக   இருப்பதால்    கண்ணீர்  
தான்   பரிசு   
என்று   மனம்  கலங்காதீர்கள் * ....*உங்கள்    நேர்மை    தான்    உங்கள்   குடும்பத்தை    நிஜமாகக் காப்பாற்றும்*   ,    *நமது   நாட்டையும்    நேர்மை தான்    காப்பாற்ற   வேண்டும் *.....ஆகவே   மகிழ்ச்சியாக  ,   நேர்மையாக    சமுதாயப்பணியாற்றுவோம்*  ....

லஞ்சம்    இல்லா   சமுதாயத்தை  நிச்சயமாகவே   உருவாக்குவோம்

💙🙏💚

Monday, 5 March 2018

Ghost in the bottle

Husband takes his wife to play her first game of golf.

Of course, the wife promptly hacked her first shot right through the window of the biggest house adjacent to the course.

The husband shouted , "I warned you to be careful! Now we'll have apologize and see how much your lousy drive is going to cost us."

So the couple walked up to the house and knocked on the door.

A warm voice said, "Come on in." When they opened the door they saw the damage that was done: glass was all over the place, and a broken antique bottle was lying on its side near the broken window.

A man reclining on the couch asked, "Are you the people that broke my window?"

"Uh...yeah, sir. We're sure sorry about that," the husband replied.

"Oh, no apology is necessary. Actually I want to thank you. You see, I'm a ghost, and I've been trapped in that bottle for a thousand years. Now that you've released me, I'm allowed to grant three wishes. I'll Give you each one wish, but if you don't mind, I'll keep the last one for myself."

"Wow, that's great!" the husband said. He pondered a moment and blurted out, "I'd like a million dollars a year for! the rest of my life."

"No problem," said the ghost. "You've got it, it's the least I can do. And I'll guarantee you a long, healthy life!"

"And now you, young lady, what do you want?" the ghost asked. "I'd like to own a gorgeous home complete with servants in every country in the world," she said.

"Consider it done," the ghost said. "And your homes will always be safe from fire,burglary and natural disasters!"

"And now," the couple asked in unison, "what's your wish, ghost?"

"Well, since I've been trapped in that bottle and haven't been with a woman in more than a thousand years, my wish is to have your wife."

The husband looked at his wife and said, "honey, you know we both now have a fortune, and all those houses. What do you think?"

She mulled it over for a few moments and said, "You know, you're right. Considering our good fortune, I guess I wouldn't mind, but what about you, honey?"

"You know I love you sweetheart," said the husband.

"I'd do the same for you!" So the ghost and the woman went upstairs where they spent the rest of the afternoon. The ghost was insatiable.
After about three hours of non-stop fun, the ghost  looked directly into her eyes and asked, "How old are you and your husband?"

"Why, we're both 35," she responded breathlessly.
ghost smile –

-

-

-

-

-

-

-

Really???

Thirty-five years old and both of you still believe in ghosts???😂😂

Friday, 2 March 2018

நாகரிகக் குறிப்புகள்

அனைவரும் பின்பற்ற வேண்டிய
நாகரிகங்கள் இவை :

of course சிலபல இன்டர்நெட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை.

> ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

> பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

> நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

> கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

> ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

> ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.
அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.

> பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.

> பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

> பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

> பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

> நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

> சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !

> ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

> ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

> நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

> முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

> நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

> யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

> வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

> உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

>  வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

> புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

> உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom ! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் . 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

> ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

> பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

> ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

> உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

> ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

> வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

>  ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

> கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

> பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

> ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

> டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

> Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

> மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

> ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

> அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அழைப்பு விடுக்காதீர்கள்

குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று கேட்காதீர்கள்.

கட்டணம் கட்டு கிட்ட கடவுள்

நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்....

காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்....., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!

இது என்ன நியாயம்????

கலகலவென சிரித்தான் இறைவன் 😃😃😃😃

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை,

எனக்கான நேரத்தை,

எனக்கான விழாக்களை,

என்னை வணங்கும் முறையை,

எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு

என்னையே கேட்பது என்ன நியாயம் என்றான்????

யோசிக்க 🤔🤔🤔🤔. அருமை.

அனுமன் vs ஆடிட்டர்

படித்ததில்  பிடித்தது....

               நான் நண்பரது வீட்டு விழாவிற்கு சென்றிருந்தபோது
ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான
பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது.
நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன
செய்திகளையே இங்கு தருகிறேன்.

“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்புல்லானது. எங்களால்
ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். வேடிக்கைக்காக
எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்
கேளுங்கள்.

ராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக்
கிடக்கும் லட்சுமணன். அவனைக் காப்பாற்ற சஞ்சீவி
மூலிகையைக் கொண்டுவரும்படிக்கு அனுமன் பணிக்கப்
படுகிறான். அனுமன் சஞ்சீவி மூலிகையைத் தேடித் தேடி
சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான். லட்சுமணன் பிழைத்துக் கொள்கிறான்.
யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்கு
திரும்புகின்றனர்.

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையை
கொண்டுவந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார்.
ஆனால் அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது.
காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம்:

1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு
முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.

2. அனுமன் ஒரு 4th Grade Officer. எனவே அவருக்கு
வான் வழிப்பயணம் அனுமதி இல்லை.

3. அனுமன் சஞ்சீவ பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage.
Excess luggage is not allowed.

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்
படுகிறது என்று எழுதிய ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்
படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச்சொல்கிறார்.

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.
“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணித்தேன்.
அதற்குக்கூட பயணப்படி கிடையாதா,’ எனப் புலம்பிய அனுமனை
தேற்றிய ராமன், கோப்பில் ‘please re examine ‘ என எழுதி
அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்கு திருப்பி அனுப்புகிறார்.

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை
சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார்.

கவலையுடன் சென்ற அனுமன் ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப்பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை. இறுதியில்
அனுமன்,” இதோ பார் இந்த பயணப்படியை நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
எனச் சொன்னவுடன் சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி
உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது.

அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction
ஆகி அவருக்கு கிடைத்தது. ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் கோப்பை
பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே
clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார்.

அந்த clarifications :

1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்
பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய ராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது.

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்
காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது.

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான
வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும்
எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான
பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்
படுகிறது…”

என்று கதையை நண்பர் சொல்லிக் கொண்டு செல்ல
கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

நாராயணா! இந்த ஆடிட்டர்/அக்கவுன்டன்ட் இம்ச தாங்க முடியலப்பா!