Monday 17 July 2023

ஜிம் தோர்ப்

படத்தில் இருப்பவர் ஜிம் தோர்ப். புகைப்படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள், அவர் வெவ்வேறு காலுறைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பதை நீங்கள் காணலாம். இது ஒன்றும் ஃபேஷன் ஷோ அல்ல. அது 1912 ஒலிம்பிக்ஸ் ல் நடந்தது. ஓக்லஹோமாவைச் சேர்ந்த அமெரிக்க இந்தியரான ஜிம், டிராக் அண்ட் ஃபீல்டில் அமெரிக்காவின் சார்பாக ஓடினார்.

அவர் போட்டியிட்ட அன்று காலை, அவரது காலணிகள் திருடப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, ஜிம் ஒரு குப்பைத் தொட்டியில் இரண்டு காலணிகளைக் கண்டுபிடித்தார். புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் ஜோடி அதுதான். ஆனால் அதில் ஒரு காலணி மிகவும் பெரியதாக இருந்ததால், கூடுதல் சாக்ஸை அணிய வேண்டியதாயிற்று. இந்த காலணிகளை அணிந்து, ஜிம் அன்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

நண்பர்களே, உங்களைத் தடுத்து நிறுத்தும் காரணங்களுக்காக நீங்கள் மனம் தளர வேண்டியதில்லை என்பதற்கு இவரின் வெற்றி ஒரு சான்றாகும். வாழ்க்கை உங்களுக்கு நியாயமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? இன்று அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? 
இன்று காலையில் நீங்கள் எழும்போது ; திருடப்பட்ட காலணிகள், உடல் நலக்குறைவு, ஏமாற்றிய உறவுகள், தோல்வியுற்ற தொழில், இப்படி பல ஒவ்வொருவருக்கும் உண்டு. உங்கள் பந்தயத்தில் நீங்கள் ஓடுவதை இதெல்லாம் தடுக்க கூடாது. நீங்கள் சாக்குப்போக்குகளைக் கடந்து, கடின உழைப்பைத் தொடர்ந்தால், நீங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை அனுபவிக்க முடியும். 

நீங்கள் காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம், அல்லது நீங்கள் வெற்றிக்கான பாதையில் ஓடலாம். ஆனால் இரண்டையும் கொண்டிருக்க முடியாது.

ஒருபோதும் கைவிடாதீர்கள் நண்பர்களே..
எந்நாளும் இனிய நாளாக அமையட்டும்.. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment