Tuesday, 16 May 2023

egg seller and a rich lady

"A Lady asked an old street vendor: "How much do you sell your eggs for?" The old man replied "0.50¢ an egg, madam.” The Lady responde, “I'll take 6 eggs for $2.00 or I'm leaving.” The old salesman replied, “Buy them at the price you want, Madam. This is a good start for me because I haven't sold a single egg today and I need this to live.”

She bought her eggs at a bargain price and left with the feeling that she had won. She got into her fancy car and went to a fancy restaurant with her friend. She and her friend ordered what they wanted. They ate a little and left a lot of what they had asked for. So they paid the bill, which was $150. The ladies gave $200 and told the fancy restaurant owner to keep the change as a tip.

This story might seem quite normal to the owner of the fancy restaurant, but very unfair to the egg seller. The question it raises is; 
Why do we always need to show that we have power when we buy from the needy? 
And why are we generous to those who don't even need our generosity?

We once read somewhere that a father used to buy goods from poor people at a high price, even though he didn't need the things. Sometimes he paid more for them. His children were amazed. One day they asked him "why are you doing this dad?" The father replied: "It's charity wrapped in dignity.”

I know that most of you will not share this message, but if you are one of the people who have taken the time to read this far... 
Then this message of attempted "humanisation" will have gone one step further in the right direction."

Author: unknown

Sunday, 14 May 2023

A violinist - True Event

A violinist played for 45 minutes in the New York subway. A handful of people stopped, a couple clapped, and the violinist raised about $30 in tips.

No one knew this, but the violinist was Joshua Bell, one of the best musicians in the world. In that subway, Joshua played one of the most intricate pieces ever written with a violin worth 3.5 million dollars. And two days before he played in the subway, with again not many people appreciating his skills .

Joshua Bell sold out a Boston theatre, and the seats averaged about $100.

The experiment proved that the extraordinary in an ordinary environment does not shine and is so often overlooked and undervalued.

There are brilliantly talented people everywhere who aren’t receiving the recognition and reward they deserve. But once they arm themselves with value and confidence and remove themselves from an environment that isn’t serving them, they thrive and grow.

Your gut is telling you something. Listen to it if it’s telling you where you are isn’t enough!

Go where you are appreciated and valued.

a corn former

There was a farmer who grew excellent quality corn. Every year he won the award for the best grown corn. One year a newspaper reporter interviewed him and learned something interesting about how he grew it. The reporter discovered that the farmer shared his seed corn with his neighbors. “How can you afford to share your best seed corn with your neighbors when they are entering corn in competition with yours each year?” the reporter asked.

“Why sir,” said the farmer, “Didn’t you know? The wind picks up pollen from the ripening corn and swirls it from field to field. If my neighbors grow inferior corn, cross-pollination will steadily degrade the quality of my corn. If I am to grow good corn, I must help my neighbors grow good corn.”

So is with our lives... Those who want to live meaningfully and well must help enrich the lives of others, for the value of a life is measured by the lives it touches. And those who choose to be happy must help others find happiness, for the welfare of each is bound up with the welfare of all.

Author Unknown

Tuesday, 9 May 2023

smart man and a smater judge

Once upon a time in an old Japanese village, there was a smart man who owned a well, but he didn't use it, so he decided to sell it to a nearby farmer. One day, when he passed by and saw the farmer pumping water from the well for cooking etc., the smart man immediately stopped him and did not allow him to pump water from the well.

"I only sold you the well, I didn't sell you the water. Therefore, you cannot take water from this well," the smart man spoke up.

The farmer was very sad and didn't know what to do. He had bought the well, but he hadn't paid for the water from the well. Now the well was full of water, but he couldn't use it, while his whole family and livestock all needed clean water from this well.

After thinking for a long time about how to resolve the issue with the smart man, the farmer decided to bring it up to the district court, hoping to get justice. At the court, the farmer recounted the story from beginning to end, hiding nothing, in order to get justice for his family.

The district judge called the smart man up and asked, "Why don't you let him use the water in the well? Didn't you sell the well?"

"Well, your honor, I only sold the well to this farmer, I didn't sell him the water in it. Therefore, he has no right to take water from my property. Now, if he wants to take water, he has to pay more to buy the water," the smart man replied, firmly believing in his argument.

The district judge looked at the smart man, smiled slightly, and replied, "Oh, you make a good point. However, when you sold the well to this farmer, the well became his property, and the water in the well is still your property. So, you have no right to store water in the farmer's well anymore."

"Now there are only two options: One is that you have to pay the farmer to rent the well for water storage. Two is that you have to remove all the water from the well immediately," the judge looked up at the smart man and asserted firmly.

The smart man bowed his head sadly, not knowing what to do to justify his actions. He had been harmed by his own intelligence.

That's why in life, no matter how smart you are, there will always be others who are smarter than you.

Thursday, 4 May 2023

முட்டாள் வேலைக்காரன்

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்

ஒருநாள் அவனை அழைத்து, "நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ... அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.

அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!' என்று நினைத்தான்.

"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்' என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.

கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.

சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட'வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது' என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.

சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.

"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!' என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, ""கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.

வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.

இப்போது அவன் உள்ளத்தில், "இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!' என்ற சிந்தனை எழுந்தது.

"சரி, அவரையே கேட்டு விடுவோம்' என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.

"ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, "மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!' என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.".

உங்கள் தகுதி என்ன...?


ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். 

அவருக்கு கண் பார்வை கிடையாது. 

அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், "ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார். 

சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். 

அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார். 

மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். 

அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான்.
 
உடனே துறவி "மன்னரே, வணக்கம். 

இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார்.

அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். 

அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

“அவரவர் தகுதி அவர்கள் பேச்சிலே அகப்படும்”

அரசன் அறிவித்த போட்டி

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.கோட்டைக் கதவுகளைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கைகள் வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும், உயிரில்லையே' என்று கூறி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டை கதவுகளில் தாழ்பாள் போடப்படவில்லை. திறந்து தான் இருந்தது.

பல பேர் இப்படி தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள்.

அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

கணவன் கொடித்த பை

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர்.

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார். மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ? என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
அன்பு,
கருணை,
உடல்நலம்,
மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள், பெரிய கற்கள் போன்றவை.
வேலை,
வீடு,
கார் , போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

கேளிக்கை,
வீண்_அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்.

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ,
நல்லதையே செய்வோம் நல்லோராய்வாழ்வோம். ‌. ‌ *பகிர்வு: தமிழ் உலகம்*

தற்கோலை முயற்சி

ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்…

நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா… ???

குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்…!

நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல… அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்… பொல்லாத பிராப்ளம்… !!???

குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே…
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்… 👇👇👇👇

நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்…. 😊😊

ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்… 😡😡

அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்… 😈😈

அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்…! 😀😀

என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்… 😢😢

காலம் ஓடியது…..

என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்….

அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்…😕😕

என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்…😥😥

என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்…. 😢😢

அவனே எனக்கு பேரனும் ஆனான்…😇

என் மகளின் மகன் அல்லவா? 😁😁

அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்…😂😂

என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊

நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று… 👌👌

ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥

அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்… 😕😕

இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்…☺☺
.
.
.

நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்…

😊😊😢😢😁😁

கிணற்றில் விழுந்த கழுதை

● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

● காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 

● அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

● ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. 

● இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. 

● கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. 

● வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

● நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். 

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன? 

*எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.*

மாவீரன் நெப்போலியன்

தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும். 

எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை 'விதியின் மனிதன்' என அழைத்துக்கொண்டான்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க அரசவைக்கு வருவார்.

அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.

பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். "ரஷ்யக் குளிர் நெப்போலியனை தோற்கடித்தது!"என வரலாறு எள்ளி நகையாடுகிறது.

அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். "என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!"என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன். 

"முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்". "முடிந்தது" என்றார் நெப்ஸ். "அடுத்து" என கம்பீரமாக கேட்க, "எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் - ஒரே தொழில் போட்டி" எனவும் சிரித்துக்கொண்டே, "சரி! அடுத்து?"எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!" "ஹ்ம்ம்" என்ற நெப்போலியன்...

"கிளம்புங்கள்!" என படைகளிடம் சொல்லிவிட்டு - வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. "ஒன்...டூ...த்ரீ!" என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து "இப்படிதான் இருந்தது எனக்கு!" என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.

நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன். 

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.

ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். "அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!" என்றபொழுது நெப்போலியன், "அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்" என்றார்.

"முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை" என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்த நெப்போலியனின் நினைவு நாள் (மே 5). ஐம்பாதாண்டு காலம் மட்டுமே வாழ்ந்த தனி சரித்திரம் அவன்.

வினைப் பலன்

🌹🌺" *ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவதாகும் என்பதை* .... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌹🌺சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

🌺வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் ஸ்ரீ கிருஷ்ண பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

🌺அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

🌺தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும் செய்யும்
குணமுடையவனாக அவனிருந்தான்.

🌺அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

🌺இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

🌺இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் என் ஸ்ரீ கிருஷ்ணன் மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். 

🌺இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.

🌺வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான்.

🌺கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

🌺இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. 

🌺எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த கிருஷ்ணனை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே கிருஷ்ணன் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது.

🌺உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோனவில்லை, மாறாக ஸ்ரீ கிருஷ்ணனிடம் சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

🌺அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன் அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் பேச தொடங்கினார்,

🌺சித்தா.... நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

🌺நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

🌺என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெரும்பாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய்.

🌺ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

🌺வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது.

🌺இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

🌺நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள்.

🌺அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

🌺தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

🌺ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺

தகுதி

ஒரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.
பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.
குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.
''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.
வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.
''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்.. ‌. *பகிர்வு: தமிழ் உலகம்*

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.
'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.
'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.
'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.
'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.
'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.
'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'
'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'
'இல்லை'
'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.
'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

இன்று எது
உன்னுடையதோ
அது நாளை
வேறு ஒருவருடையது.
எங்கிருந்து
பெறப்பட்டதோ
அது அங்கேயே
திரும்பப்பெறப்படும்.
சந்தேகம் என்பது
கொடிய நோய்.
மரணமே முடிவு.

நம்பிக்கை என்பது
உயிரைப் போன்றது.
அதுவே நிரந்தரமான
மகிழ்ச்சியாகும்.

நம்பிக்கையோடு
வாழ்வோம்.
மகிழ்ச்சியைப்
பெறுவோம்.

10 ரூபாய் கட்டு

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன அருமையான கதை....!

ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார்.

வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. 

அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். 

இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். 

அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.

இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். 

சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. 

அந்த வழியாக ஒருவன் வந்தான். 

இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.

மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.

99 நோட்டுகள்தான்.

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....!

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்....!

*???......??.....!!!...*

அந்த ஒற்றை பத்துரூபாயைத் தேடினான்....!

தேடினான்....! தேடினான்....!

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்.....!!

என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்...

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்...

கருத்து :-

நம்மில் பலர் இப்படித்தான் கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைந்து உடலும் மனமும் சோர்ந்து அல்லலுறுகிறோம்..!

*ஆனந்தமான வாழ்வுக்கு நம் புராண தத்துவங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!*

மன்னரின் கவலை

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த மந்திரிக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம். 
ஆகவே, மந்திரி ஒரு தந்திரம் செய்தார். 

‘அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’

 ‘ஆமாம்’ என்றான் அரசன்.

 ‘ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லை!’ 

‘மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே’ என்றார் மந்திரி.

 ‘புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்? அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!’

‘குரு’ என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. 

வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். 

அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

இந்தக் களேபரமெல்லாம் முடிந்தபிறகு அரசன் தன் குருநாதரைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களை விவரித்தான். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று தான் யோசித்துவைத்திருந்த தீர்வுகளையும் சொன்னான். 

குருநாதர் எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கடைசியாக அரசன் கேட்டான். ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?’
அவர் எதுவும் பதில் பேசவில்லை. 

சில நிமிடங்களுக்குப்பிறகு ‘நீ புறப்படலாம்’ என்றார். அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் காட்டை நோக்கிப் பயணமானான்.

இதைப் பார்த்த மந்திரி குருநாதரிடம் ஓடினார். ‘அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

‘உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான்’ என்றார் ஜென் குரு. ‘நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!’

“அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூர தேவையில்லை, பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலே போதும்”

சந்தேகம்

மனிதனுக்கு வரக்கூடாத வியாதி சந்தேகம்

உதாரணம் இந்த கதை

ராஜா அமைச்சரை அழைத்தார்.

""மந்திரியாரே! இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்கிறார்கள். 

ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர் சூட்டி அவரை வணங்குகிறார்கள். ஏன்?

 இவ்வளவு உருவத்தைப் படைத்திருக்கிறார்கள்?'' என்றார்.

மந்திரி சிரித்தார்.

""ராஜா! கடவுளின் பெயரில் தான் வித்தியாசம் இருக்கிறதே தவிர அவர் யாராலும் அறியப்பட முடியாதவர் என்ற கருத்தில் மாற்றமில்லை,'' என்றவர் 

ராஜாவின் சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு முடிவு எடுத்தார்
மந்திரி

ஒரு துணியை எடுத்தார்.

""இது என்னவென்று தெரியுமா?'' என்றார்.

""இதென்ன பிரமாதம், துணி...'' என்றார் ராஜா.

அதை இடுப்பில் கட்டிய மந்திரி ஒரு வேலைக்காரனை அழைத்து, 

""இது என்னப்பா?'' என்றார்.

""துண்டு'' என்றான் அவன்.
அந்தத் துணியை தன் மேல் போட்டுக் கொண்டு, 

""இப்போது இது என்ன?'' என்று கேட்டார்.

""அங்கவஸ்திரம்'' என்று பதிலளித்தான் அவன்.

அதையே தரையில் விரித்து, ""இப்போது இதற்கு என்ன பெயர்?'' என்றார்.

""படுக்கை விரிப்பு'' என்று பதிலளித்தான் அவன்.

இப்போது ராஜாவை நோக்கிய மந்திரி,""அரசே! துணி என்பது ஒன்று தான். 

ஆனால், இதுவே அது இருக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடுகிறதல்லவா! 

அதைப்போல, கடவுளுக்கு, அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து வழிபடுகிறார்கள். பொருள் ஒன்று தான். வடிவம் தான் வேறு,'' என்றார்.

புரிந்து கொண்ட ராஜா, அமைச்சரைப் பாராட்டினார்.

*பகிர்வு - தமிழ் உலகம்*

Monday, 1 May 2023

what is in your cup?

You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere.

Why did you spill the coffee? 

"Because someone bumped into me!!!"

Wrong answer.

You spilled the coffee because there was coffee in your cup. 

Had there been tea in the cup, you would have spilled tea.

Whatever is inside the cup is what will spill out.

Therefore, when life comes along and shakes you (which WILL happen), whatever is inside you will come out. It's easy to fake it, until you get rattled.

So we have to ask ourselves... “what's in my cup?"

When life gets tough, what spills over?

Joy, gratitude, peace and humility? 

Anger, bitterness, victim mentality and quitting-tendencies? 

Life provides the cup, YOU choose how to fill it. 

Today let's work towards filling our cups with gratitude, forgiveness, joy, words of affirmation, resilience, positivity; and kindness, gentleness and love for others.