Tuesday, 31 January 2023

Ivan Fernandez and Abel Mutai

Kenyan runner Abel Mutai was only a few meters from the finish line, but got confused with the signs and stopped, thinking he had finished the race. A Spanish man, Ivan Fernandez, was right behind him and, realizing what was going on, started shouting to the Kenyan to keep running. Mutai did not know Spanish and did not understand.

Realizing what was going on, Fernandez pushed Mutai to victory. A reporter asked Ivan, "Why did you do this?" Ivan replied, "My dream is that one day we can have some sort of community life where we push ourselves and help each other win." The reporter insisted "But why did you let the Kenyan win?" Ivan replied, "I didn't let him win, he was going to win. The race was his." 

The reporter insisted and asked again, "But you could have won!" Ivan looked at him and replied: "But what would be the merit of my victory? What would be the honor of this medal? What would my Mother think of it?" The values are transmitted from generation to generation. What values do we teach our children and how much do you inspire others to earn? Most of us take advantage of people's weaknesses instead of helping to strengthen them. Alhamdulillah 🤲🙏

Source: SOKP

Wednesday, 18 January 2023

தமிழ் - டீகோடிங்

பாற்கடலை கடைய அமுதம் வருமா? - பைத்தியக்காரத்தனம்!

"அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி! இதைவிட ஒரு காமெடி என்னன்னா... அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery channelல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம். அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல அப்படி செத்தா அது சாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம். இப்படி ஒரு Fantasy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க." 

- இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர் (பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

நான் நிதானமாக சொன்னேன் இந்த கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள். மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை. இவற்றை அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும். சரி, இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

🌼 பாற்கடல் - குண்டலினி சக்தி
🌼 மேரு மலை - முதுகுத்தண்டு
🌼 வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று (உஷ்.. உஷ்னு சத்தம் வருதா?)
🌼 தேவ-சுரர் - இடகலை - பிங்கலை (நாடி)
🌼 ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை
🌼 தொண்டைக்குழி - விசுக்தி
🌼 விஷ்னு - வாழ்வு
🌼 ஆலகாலவிஷம் - கபம்
🌼 அமுதம் - நித்ய வாழ்வு (மரணமில்லா பெருவாழ்வு)
🌼 திருமகள் - செல்வம், நிறைவு
🌼 சந்திரன் - சித்தத் தெளிவு
🌼 காமதேனு, கற்பக விருட்சம் - நினைத்தது கைகூடும் ஆற்றல்
🌼 ஐராவதம் - தேக பலம்
🌼 தன்வந்திரி - ஆரோக்கியம்

அதாவது "முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை - பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது (இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்). ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசியோகம் மூலம் இடகலை பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்ய பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும். அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

மேலும் பாற்கடல் கடையும்போது லட்சுமி, தன்வவந்திரி, சந்திரன், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் வந்தது என்பது வாசியோகம் சித்தி பெற்ற ஒருவனுக்கு முறையே செல்வம் (நிறைவு), ஆரோக்கியம், சித்தத் தெளிவு, நினைத்தது கைகூடும் ஆற்றல், தேக பலம் கிடைக்கும் என்பதற்கான உருவகம்.

ஆனால் இந்தப் பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும் (சந்தேகம் இருப்பின் வாசியோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)."

 - இப்படி விளக்கினேன். அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார், 'விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே?!' என்று.

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு) மேலும் சில உருவகங்களின் Decodings:

1. ஒரே இறைவன் (இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)

சிவசக்தி - துவைதம் (Duality)

பிதா, சுதன், பரிசுத்த ஆவி - வசிஷ்டாத்வைதம் (கிறிஸ்த்துவம்)

2. சும்மா இருந்தால் சிவம் (Static), ஓயாமல் அசைந்தால் சக்தி (Dynamic), சக்தி இல்லையேல் சிவம் இல்லை - உருவகம்

3. திரிசூலம் - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியின் உருவகம்

4. கணபதியை (பூமியை), சக்தி (Dynamic force)
அழுக்கை (Dust of Universe) உருட்டி படைத்தாள் - இது பூமி தோன்றலின் உருவகம்.

5. தில்லை நடராசர் நடனம் - Cosmic dance-ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது).

6. சிவன் (யோக சக்தி) + திருமால் (போகசக்தி)
இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன் - உருவகம்

7. முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமாணமான காலத்தை உணர்த்த மகாகாலன். அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்

8. பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாக படைத்தது ஜனனமும் மரணமும் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

9. வாயு மைந்தன் அனுமன் (குரங்கு போன்ற நிலையில்லாத மனம்), யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம் 
- மனதின் உருவகம்

10. கருடாழ்வார் - மூச்சின் உருவகம்

11. சூரியனின் ஏழு குதிரைகள் - நிறப்பிரிகை VIBGYOR உருவகம்

12. தசாவதாரம் - பரிணாம வளர்ச்சியின் உருவகம்

13. ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு, தான் உணர்ந்ததை உணர்த்த, ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி
உணர்த்தினர். 

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?

உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.

Sunday, 15 January 2023

பாடம்

_மனைவி இறக்கும்போது,_ _*அவருக்கு வயது 45 இருக்கும்*._ _உறவினர்கள், *நண்பர்கள்*_ _அனைவரும் *அவரை மறுமணம்* செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், *அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை*_

_என் மனைவி, *அவள் நினைவாக* எனக்கு *ஒரு மகனை* விட்டு சென்றிருக்கிறாள்._ _*அவனை வளர்த்து* ஆளாக்குவது ஒன்றே *இனி என் வேலை*. அவன் சந்தோஷத்தில் *அகமகிழ்ந்து*, அவன் வெற்றியில் நான்_ *_திளைத்திருப்பது_* _எனக்கு போதும்._ _*அவனுக்காக வாழ போகிறேன்*_

_இன்னொரு துணை_
*_எனக்கு தேவையில்லை_* _என்று சொல்லிவிட்டார்._

_வருடங்கள் உருண்டோடியது._
_மகன் வளர்ந்து_
_பெரியவனானதும்,_
_தன் வீட்டையும்,_
_வியாபாரத்தையும்_ 
_மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்._

_மகனுக்கு திருமணமும் செய்து வைத்து,_
_அவர்களுடனேயே தங்கியும் விட்டார்._

_ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்_ 
_சீக்கிரமாக காலை_ _உணவு உண்ண,_
_*மருமகளிடம்* ரொட்டியில் தடவ_ _*வெண்ணெய்*_ _தருமாறு கேட்டார்._
_*மருமகளோ வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்*_

_மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன்_ _வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்._

_*மகன்* உணவருந்தும் போது, *மேஜையில் வெண்ணை* கொண்டு வந்து வைத்தாள் *மனைவி*. ஒன்றும் பேசாமல் , *மகன்* தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். *அந்த வெண்ணையை* பற்றிய சிந்தனையே *அந்நாள் முழுதும்* அவன் எண்ணத்தில் *ஓடிக்கொண்டு இருந்தது*._

_மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான்.ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க..._

_நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும்,உங்கள்பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்._

_இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்._
_மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்.._

_ஏன் இந்த திடீர் முடிவு?. இல்லை அப்பா *உங்கள் மதிப்பு* என்னவென்று *என் மனைவிக்கு* உணர்த்த வேண்டிய *கட்டாயம் வந்துவிட்டது*._

_*சாதாரண வெண்ணைக்காக* நீங்கள் கையேந்தும் *நிலை வரக்கூடாது*_
_ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை *அவள் உணர வேண்டும்*. மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்..._

_பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.._ 

_ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்._

_பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை._

                  படித்ததில் பிடித்தது.......💐💐💐

இங்க் பென் இருக்கா?

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும்தான்"

வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். 

அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, 

வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது.

மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று ஹிக்கின்பாதம்ஸ் போனேன். 

அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். 

( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? 
 12/= ரூபாய்.) 

நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம்தான்!

சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனாதான். 

பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, 

ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். 

ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். 

கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், 

அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். 

பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். 

அதில் இங்க்கின் அளவு தெரியும். 

மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில் தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். 

ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். 

ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். 

எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள்தான் ஹீரோ பேனா உபயோகப்படுத்துவார்கள்.  

பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாததுபோல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். 

இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச் செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. 

இங்க் ஃபில்லர். 

கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  

ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க்தான் எப்போதும் உபயோகிப்பேன். 

பிரில் இங்க்தான் அப்பொழுது பிரபலம், 

செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். 

அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்பப் பிடிக்கும். 

இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப்படுத்தமாட்டேன்

இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  

ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. 

ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், 

பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். 

பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காக, தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும். 

வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். 

இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். 

இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். 

நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். 

பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். 

ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. 

மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு பட படக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். 

ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை.

மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். 

காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதைப்போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். 

தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். 

எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. 

சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். 

மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) 

வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - 

சாக்பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  

பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். 

அதேபோல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ்தான். 

நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. 

இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது புறமுதுகில் குத்துவதுபோல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். 

பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், 

அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். 

டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. 

என்னிடம் கொடுத்தார். 

நல்ல கனமாக இருந்தது. 

பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது.  

ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம் தொலைத்துவிட்டோம்.
🖋️🖋️🖋️
               *சுஜாதா*.