Wednesday, 28 February 2018

எலியும் வைர மோதிரமும்

🐀எலி ஒன்று 💍வைர  வியாபாரி வீட்டிலிருந்து ஒரு 💍வைரத்தை முழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை👨🏻👨🏻👨🏻‍✈ பார்த்து எப்படியாவது அந்த 🐀எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

🐀எலி பிடிப்பவனும் தன் *துப்பாக்கி’யுடன்*🔫 வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று 🐀போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த 💍வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் *ஒதுங்கி தனித்தே* நின்றிருந்தது எலி.👨🏻👨🏻👨🏻‍✈ பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..*🐁

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை💍 எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படித்தான்...

"அனேகர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற என்னம்கொண்டு  மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,  தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.

உறவுகளும் அப்படித்தான்.
சிலர் இடையில் வந்த அழிந்துபோகும் செல்வத்தை நம்பி, கடவுள் கொடுத்த உறவுகளையும், அன்பாலும் நம்பிக்கையாலும் பெற்ற நட்பையும் அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்தமும் பந்தமுமே(நட்பையும்) கடைசி வரையில் நம்முடன் இருக்கும்...

Saturday, 24 February 2018

39ம் நம்பர் அறை

ஒரு அழகிய வாலிபன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று முதலாளியை சந்திக்க விரும்புவதாகக் கூறினான். முதலாளி வந்தவுடன் அவரிடம்.....😊

"39ம் நம்பர் அறை கிடைக்குமா?"
"கண்டிப்பாக சார்....."
"நன்றி...."

அந்த அறைக்குச் செல்வதற்கு முன் முதலாளியிடம் ஒரு கறுப்பு கத்தி, 39செமீ நீள வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சு ஒன்று தரச் சொல்லி கேட்டான்.

இதைக் கேட்ட முதலாளி மிகுந்த ஆச்சரியத்துடன் ஒத்துக் கொண்டார்.

அறைக்குச் சென்ற அந்த வாலிபன் அதன் பின் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை.

இதில் ஆச்சரியமான ஒன்று எதுவென்றால் முதலாளியின் அறை 39ம் அறைக்கு அருகில்.
நடுநிசியைத் தாண்டியவுடன் முதலாளிக்கு பக்கத்து அறையிலிருந்து பல வினோத சப்தங்கள் கேட்டது. காட்டு மிருகங்களின் கத்தல் மற்றும் பாத்திரங்கள் உருளும் சப்தம் என விதவிதமான ஒலிகள்.

அன்று இரவு முழுவதும் முதலாளி உறங்கவில்லை. விதவிதமான ஒலிக்கு காரணத்தை யோசித்தம் விடை கிடைக்கவில்லை.

அடுத்த நாள் காலை அந்த இளைஞன் அறையைக் காலி செய்து சாவியைக் கொடுத்தவுடன் முதலாளி அந்த அறையை செக் பண்ண சொன்னார்.

அந்த அறை மிகவும் சுத்தமாக பொருட்கள் அதனதன் இடத்தில் இருந்தது. அங்கிருந்த மேசையில் அந்த கறுப்பு கத்தி, வெள்ளை நூல் மற்றும் ஆரஞ்சும் இருந்தது.

பின் அந்த இளைஞன் பில்லை செட்டில் செய்து விட்டு ரூம் பாய்ஸ்க்கும் நல்ல டிப்ஸ் கொடுத்து புன்னகையுடன் கிளம்பி விட்டான்.

முதலாளி இதில் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் அவன் மேல் மிகுந்த சந்தேகமும் அடைந்தார்.

ஒருவருடத்திற்குப் பின் மீண்டும் வந்த அந்த இளைஞன் அதே அறையைக் கேட்டதோடு மட்டும் அல்லாமல் போன முறை போல் கறுப்புக் கத்தி, 39 செமீ வெள்ளை நூல் மற்றும் 73கி ஆரஞ்சும் கேட்டான்
.
இந்த முறை எப்படியாவது உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும் என முதலாளி தூக்கம் விழித்து காத்திருந்தார். கடந்த முறை போலவே நடுநிசியைத் தாண்டியவுடன் அதே போல சப்தங்கள் பக்கத்து அறையிலிருந்து வரத் தொடங்கின ஆனால் இந்த முறை கடந்த வருடத்தை விட அதிகமாக இருந்தது.
அடுத்த நாள் முகம் முழுதும் பன்னகையுடன் கை நிறைய டிப்ஸ் கொடுத்து பில்லை செட்டில் செய்து விட்டு அவன் கிளம்பினான்.

இதற்கான காரணங்களை முதலாளி ஆராயத் தொடங்கினார். எதற்காக 39ம் நம்பர் ரூம் எதற்கு கறுப்பு கத்தி வெள்ளை நூல் ஆரஞ்சு என எவ்வளவு மண்டையை உடைத்துக் கொண்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

முதலாளி மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த வருட மார்ச் மாதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். ஆச்சரியமாக மார்ச் முதல் தேதியே அந்த இளைஞன் வந்தான்.
இந்த முறையும் அதே அறை மற்றும் அதே பொருட்களுடன் அறைக்குள் சென்றான்.

அந்த நாள் இரவும் அதே போல பல சப்தங்களோடு முதலாளிக்கு கழிந்தது.

அடுத்த நாள் அந்த இளைஞன் அறையைக் காலி செய்து விட்டு புறப்படுவதற்கு முன் முதலாளி பணிவுடன் அவனிடம் சப்தங்களுக்கான காரணத்தைக் கேட்க அதற்கு அவன்.....

"இந்த உண்மையை உங்களுக்கு சொல்ல வேண்டும் எனில் நீங்கள் கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது...."

"கண்டிப்பாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..."
"சத்தியமாக......."

"சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்...."

அதற்குப் பின் அவன் சப்தங்களுக்கான காரணத்தை முதலாளியிடம் சொன்னான்.

ஆனா அந்த முதலாளி ரொம்ப நம்பிக்கையான ஆளுங்கறதுனால இன்னமும் எங்கிட்ட அந்த இரகசியத்தை சொல்லலை.

அவர் சொன்னான்னா கண்டிப்பா நான் உங்களுக்கும் சொல்லிடுறேன்...... ;) ;) 😜😜😜😜😜😜

துப்புவதாக இருந்தால் ஓரமாக போய் துப்பவும்....!...

போனுக்கு நல்லதல்ல...!

Wednesday, 21 February 2018

2 minutes refresher management course

Two minute refresher management course.
Worth reading again even if you've already read this

Lesson One

An eagle was sitting on a tree resting, doing nothing.

A small rabbit saw the eagle and asked him, "Can I also sit like you and do nothing?"

The eagle answered:
"Sure, why not."

So, the rabbit sat on the ground below the eagle and rested. All of a sudden, a fox appeared, jumped on the rabbit, and ate it.

Management Lesson - To be sitting doing nothing, you must be sitting very, very high up.

Lesson Two

A turkey told a bull :
"I would love to be able to get to the top of that tree, but I haven't got the energy."

The bull said :
"Well, why don't you nibble on some of my droppings?" They're packed with nutrients."

The turkey pecked at a lump of dung, and found it actually gave him enough strength to reach the lowest branch of the tree. The next day, after eating some more dung, he reached the second branch. Finally after a fourth night, the turkey was proudly perched at the top of the tree.

He was promptly spotted by a farmer, who shot him out of the tree.

Management Lesson - Bullshit might get you to the top, but it won't keep you there.

Lesson Three

A little bird was flying south for the winter. It was so cold; the bird froze and fell to the ground into a large field.

While he was there, a cow came by and dropped some dung on him. As the frozen bird lay there in the pile of cow dung, he began to realise how warm he was.

The dung was actually thawing him out!

He lay there all warm and happy, and soon began to sing for joy.

A passing cat heard the bird singing and came to investigate. Following the sound, the cat discovered the bird under the pile of cow dung, and promptly dug him out and ate him.

Management Lessons -
(1) Not everyone who shits on you is your enemy.
(2) Not everyone who gets you out of shit is your friend.
(3) And when you're in deep shit, it's best to keep your mouth shut!

This ends your two-minute refresher management course...

Monday, 19 February 2018

ஒன்னு மட்டும் உண்மை

சிரிக்க.... சிந்திக்க....

சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்..

ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள்.

வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள்.

அம்மா கேட்டாள் "யாரு இது?"

சேகர் சொன்னான் "என் ரூம்மேட்மா".

அம்மா "அப்படீன்னா?"

"ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு,

நீ சந்தேகப்படுகிற மாதிரி வேற ஒன்னும் இல்லம்மா,

வீட்டை மட்டும் தான் ஷேர் பண்ணுறோம்..

அவ தனி பெட்ரூம், நான் தனி பெட்ரூம் "

அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய் விட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய ரூம்மேட் சொன்னாள் ;

"உங்கம்மா வந்து போனதில் இருந்து சமையல் ரூமில் இருந்து தோசை கரண்டியைக் காணலை,
ஒரு வேளை உங்கம்மா எடுத்துப் போயிருப்பாங்களோ?"

சேகர் சொன்னான் "தெரியலை, எங்க கிராமத்து வீட்டுல வேற போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டு கேக்கிறேன் "

அவன் அம்மாவுக்கு கடிதம் எழுதினான் *அன்புள்ள அம்மா..*

நான் *நீங்கள் இங்கேஇருந்த தோசை கரண்டியை எடுத்தீங்கன்னு சொல்லலை*
*எடுக்கலைன்னும் சொல்லலை*
ஆனா ஒண்ணு மட்டும் உண்மை,
*என் வீட்டுல இருந்து நீங்க போனதுக்கு அப்புறம் தோசை கரண்டியை காணவில்லை*.!

சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது.. அதை சேகர் பிரித்து படித்தான்
*அன்புள்ள மகனுக்கு*..

*நான் நீ உன் கூட வசிக்கிற பொண்ணோடு நீ தப்பா இருக்கறேன்னு சொல்லலை இல்லைன்னும் சொல்லலை ஆனா ஒண்ணு மட்டும் உண்மை*..

அவள் அவ பெட்டுல தூங்கி இருந்தா *இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டு பிடிச்சு இருப்பா*...!

Saturday, 17 February 2018

வாலைப் பிடி

ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.

அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான். இளையனே நீ என்மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.
அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.

மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.

அதைப் பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி அடுத்த மாட்டை பார்க்கலாம் என்று விட்டு விட்டான்.

சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம்.
அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம் , மூன்றவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.

ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.

இந்த மாட்டை விடக்கூடாது. இதைத்தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான்.

மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம்.அந்த மாட்டுக்கு வாலே இல்லை.

*நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.*

*சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு , மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்) அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.*

*ஆகவே, வாய்ப்புகளை பயன் படுத்துவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது...*

Wednesday, 14 February 2018

காத்திருப்பு

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...

அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..

பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....

அதான்...
என்று இழுத்தாள்...

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..

அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு  அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட  நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.

Tuesday, 13 February 2018

வாழையும் தென்னையும்

💕💞💕
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று🌱 ஒன்று  நடப்பட்டது.

  ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும்🌴 இருந்தது.

வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, *" நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "*

தென்னங்கன்று சொன்னது,
*" ஒரு வருஷம் ".*

"ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?"* கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.😆
 
தென்னங்கன்றோ🌴 அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.😊

           ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின்🌱 வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை🌴விட உயரமாக வளர்ந்துவிட்டது.

வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ🌴 எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது.

         வாழைக்கன்றை🌱 நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட🌴  இருமடங்கு  உயரமாகி விட்டது.

தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை

*"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!*

நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது.  ஆனா பாரு , நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.

தென்னங்கன்றிடம் புன்னகை😊 தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.

         இன்னும் சிறிது காலம் சென்றது.  அதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டது.  அது பூவும் ,  காய்களுமாக அழகாக மாறியது.

அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது.  இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது.

        நல்ல  உயரம் .  பிளவுபடாத அழகிய இலைகள்,  கம்பீரமான குலை .  வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின .

        ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்.  வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்.  வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான்.  தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .

இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்?  வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.  முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள ,  அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.

வாழை மரம் கதறியது.  அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது.  மரண பயம் வந்துவிட்டது.  அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது. 

ஆம்   வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது. 

ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது.

                 தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.

*ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?*
🤔🤔🤔🤔
*கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் ,  வேகமாகவே காணாமல் போகும்.*

*" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது,*
*பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...*

*✍படித்ததில் பிடித்தது..✍*
💕💞💕