Wednesday, 1 November 2017

கடவுள் இருக்கிறாரா?  இல்லையா?

இது ஒரு உண்மைச் சம்பவம்!.

தத்துவப் பேராசிரியர்  அவர் ...நாத்திகர்.... பல பேராசிரியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..  அவர்களுக்கு ,கடவுள் இல்லை என்று

பேசுவது பிடித்திருக்கிறது----சமூகத்தில் ,தங்களைப் பிரமிப்போடு பார்ப்பதாக அவர்களுக்கு ஒரு பிரமை----

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் மூலமாக, மறுத்துப்  பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?
'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான்.
'கடவள் நல்லவராஃ'
'ஆம் ஐயா'
'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?
'ஆம்'
'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய் வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய்?
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
'உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி

நான் மீண்டும் கேட்கிறேன் ----கடவுள் நல்லவரா'?
'ஆம் ஐயா'
'சாத்தான் நல்லவரா?'
'இல்லை'
'எல்லாரும் கடவுள் படைப்புதான் என்கிறார்கள்-- அப்படியானால்  சாத்தான் எங்கிருந்து வந்தார்'?
கடவுளிடமிருந்துதான்'
'சரி----- இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா'?
'ஆம்'
'அப்படியனெ;றால் அவற்றை உருவாக்கியது யார்'?
(மாணவர் பதில் சொல்லவில்லை)
'இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தனஃ'
(மாணவர் மௌனமாய் நிற்கிறார்)
விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது.

இப்போது சொல், கடவுளை கண்ணால் கண்டிருக்கிறாயா?

அவர் பேசுவதைக் காதால்   கேட்டிருக்கிறாயா? அல்லது

கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறாயா?

கடவுளைத் தொட்டு உணர்ந்து இருக்கிறாயா

வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?'
................................(மௌனம்)
'ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய். அப்படித்தானே?'
'ஆம் ஐயா'
'நம் நடைமுறை வாழ்க்கiயிலும் சரி. பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி. ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி. எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது. கடவுள் இல்லை என்று இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?'
'ஒன்றுமேயில்லை, எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது'
'ஹம்ம்......நம்பிக்கை..........அதுதான் இப்போது பிரச்னையே...'
ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

ஐயா ---நான் சிலவற்றைக் கேட்கலாமா ?

பேராசிரியர் "தாராளமாகக் கேள் "  என்றார்
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
'ஐயா............வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?'
'நிச்சயமாக உள்ளது.'
'அதே போல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?'
'நிச்சயமாக.'
'இல்லை ஐயா, நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை.'
(வகுப்பறையில் நிசப்தத்தில் ஆழ்கிறது)
'ஐயா................வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையும்,

தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்ப நிலையும்

இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன.

ஆனால் இதுபோல குளிரை அளக்க முடியுமா?

வெப்பம் என்பது ஓர் ஆற்றல்.

குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல.

வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது !
வெப்பம் இல்லை என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே – 240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.
(குண்டூசி விழும் சப்தம்கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

மாணவர் மேலும் கேட்டார் :--
'சரி, இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா, அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?' '

ஆமாம் தம்பி, இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.'
'நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா, இருட்டு என்பதே வெளிச்சத்தின் இல்லாமைதான்.

நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணை கூசச்  செய்யும் ஒளி என

பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்க முடியும். அளக்கவும் முடியும்.

ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு.

அதை அளக்க முடியாது, இல்லையா?'
'சரி தம்பி, நீ என்னதான் கூற வருகிறாய்?'
'ஐயா........நான் கூறுகிறேன், கடவுளைப்பற்றிய உங்கள் கருத்து தவறானது/ பிழையானது.'
'அப்படியா ? எப்படி என்று விளக்கிக் கூற முடியுமா?'
'ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள்

. ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம்.

உதாரணத்திற்கு நல்ல கடவுள் கெட்ட கடவுள்,

இருட்டு – வெளிச்சம், வெப்பம் - குளிர்.

நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள்.

அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்க முடியாது.

எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத் தூண்டல்களினால்தான்.

மின்சாரத்தை அளக்க முடிந்த உங்களால் காந்தத் தன்மையை விவரிக்க முடிந்த உங்களால்

எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்பதமாகக் கருதுகிறீர்கள்

உண்மையில் 'வாழ்வு இனி இல்லை' என்ற தன்மையே இறப்பு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.

சரி, இப்பொழுது சொல்லுங்கள் ஐயா,

குரங்கிலிருந்து மனிதன் உருவானான்  என்பது  உண்மையா ?' – கேட்டான் மாணவன்.
'இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமோனால், ஆம் அதுதான் உண்மை,

குரங்கிலிருந்து மனிதன் உருவானான்' பேராசிரியர் பதிலுரைத்தார்.

'உங்கள் கண்களால் மனிதப்பரிமாண  வளர்ச்சியை கண்டிருக்கிறீர்களா– மடக்கினான் மாணவன்.
(பேராசிரியர் தன் தலையை இல்லை இல்லை என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்)
மாணவன் தொடர்ந்தான்,

'அப்படியென்றால். யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை.

எல்லாமே ஒரு வகையான அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால்

குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது உங்கள் கருத்து.

அதை நிரூபிப்பதற்கு உங்களிடம் ஆதாரம் ஏதுமில்லை என்பதே உண்மை.

உங்களுக்குச் சரியெனப்படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள் இல்லையா?

அப்படியானால், நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?'
( வகுப்பில் இருக்கும் மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

'இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?'
(வகுப்பறை கொல்லெனச் சிரிப்பொலியால் அதிர்கிறது)
'மாணவர்களே யாரவாது  நமது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையாவது நுகர்ந்திருக்கிறீர்களா?

உங்கள் ஐம்புலன்களும் நமது பேராசிரியரின் மூளையை தொட்டதோ, பார்த்ததோ, நுகர்ந்ததோ இல்லை அல்லவா,

அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி,

ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி,

எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை! என்று.

மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால் வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போகிறது)

'நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி' என்றார் பேராசிரியர்.

'அதுதான் ஐயா........ இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. பார்க்க முடியவில்லை என்றாலும்,

தொடமுடியவில்லை என்றாலும் நுகர முடியவில்லை என்றாலும், உணர முடிகிறதல்லவா ?

அப்போது  கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும்.

மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது.

இதுதான் உலகத்தில் சகலமானவற்றையும் இயங்கிக்கொண்டிருப்பது.

நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை'

மாணவர்கள் வியந்தார்கள்---பேராசிரியர் ----------!

இது ஒரு உண்மைச் சம்பவம்!

இறுதி வரை பின்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்,
வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் -நமது முன்னாள் குடியரசுத்தலைவர்
அக்னி சிறகுகள்

வயது மறந்து போச்சு

டாக்டர்..  எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்.

மனோதத்துவ மருத்துவர்.. அப்படியா...!?

ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால என் வயசு தெரியல...

இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..?

ஆமா டாக்டர்... ஆமா...?

சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...

உங்க பேரென்ன...

ராமநாதன்...

என்ன தொழில் பண்றீங்க...

பைனான்ஸ்...

நைட்டு நல்லா தூங்குவீங்களா...?

கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...

சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...?

நெறைய டாக்டர்....

அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...?

ஆமா டாக்டர்...

எந்த மாதிரி நடிகைங்க...

ரேவதி,அமலா மாதிரியான நடிகைங்க....

சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...

சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...

சந்தோஷம்... சிஸ்டர் 48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?

ஷகிலா...

உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்..அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?

வேற... சிலசமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா க்கூட வருவாங்க...

ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..

அப்புறம்... அப்புறம்... ம்...  என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன் வருவாங்க...

சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...

ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...

அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க...

45,48,54,41..

நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...

என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..?

தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒருமணி நேரமாகும்னுட்டாங்க. திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல, பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்....!!😜😜😜😜

நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?*

*ஒரு குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய குரு குலத்தில் பல மாணவர்கள் தங்கி வில் வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச் சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான்.குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர்.இதையெல்லாம் கேட்கக் கேட்க அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது. அது கற்றுக் கொடுத்த குருவையே அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது."இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே! இன்னும் கூட அதிகமாகக் கற்றுக் கொள்ள எனக்கு இளமையும், வயதும் இருக்கிறது. இனி நான்தான் குரு. பழையகுருவை விரட்டுவேன்.நானே குரு ஆவேன்" என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான். மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு குருவின் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று சத்தமிட்டான்."கிழட்டு குருவே வெளியே வாரும். இனி நீரல்ல, நான்தான் குரு. உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன். தைரியம் இருந்தால் மோதிப் பாரும். இல்லை என்றால் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்" என்றான்.குரு இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததில் கொஞ்சம் நிலை குலைந்து போனார். ஆனாலும் உறுதியான குரலில் சொன்னார் . " போட்டி துவங்கலாம் ". துவங்கியது.முதலில் குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி எய்தார். அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது. சிஷ்யனும் அதே போல் ஒரு அம்பை எய்ய அது இரண்டு காய்களை வீழ்த்தியது. சிஷ்யனின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.அடுத்து குரு இரண்டு அம்புகளை ஒன்றாக விடுத்தார்.அதில் சரியாக ஒரு இலையும், ஒரு காயும் விழுந்தன. சீடன் அலட்சியமாக மூன்று அம்புகளை ஒன்றாய் எய்ய அது ஒரு இலையையும் , ஒரு காயையும் , ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது. சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது. குரு இப்போது தரையைப் பார்த்து தலைகுனிந்தபடி வானத்தை நோக்கி அம்பு விட்டார். அது குறிபார்த்து எய்ததுபோல் விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையின் மார்பில் தைத்து அதைக் கீழே விழ வைத்தது.சிஷ்யனின் கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியேஅவனும் தலையைக் குனிந்தவாறே ஒரு அம்பை எய்தான். அவனது அம்போ இரண்டு பறவைகளை ஒன்றாக வீழ்த்தியது. சிஷ்யனின் கூட்டம் கூத்தாடியது.மரியாதை இல்லாமல் குருவின் அருகே வந்து அவரை சுற்றி நின்று கைதட்டியது.மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர். குரு அவமானப் படுத்தப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குரு வில்லையும் , அம்பையும் கீழே போட்டுத் தரையில் மண்டியிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.குரு தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டாரோ?எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்.திடீரென்று குரு கண்ணைத் திறந்து வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்த மாத்திரத்திலேயேவானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த சில பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன. இப்போது சீடனின் முகம் இருண்டது."குருவிடம் இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே "மனதுக்குள் மிரண்டாலும் அவனும் அவரைப் போலவே மண்டியிட்டு வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். ஒன்று கூட விழவில்லை. பதற்றமாக மீண்டும் பார்த்தான். அப்போதும் எதுவும் விழவில்லை.மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான் . திடீரென எழுந்து குருவின் பாதங்களில் விழுந்து அழுதான்.*"குருவே! எப்போதுமே நீங்கள் மட்டுமே பெரியவர். என்னை மன்னிப்பீர்களா?"* என்றான். குரு அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்." நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள் நான் பார்க்கும்போது விழவில்லையே. ஏன் குருவே?குரு சொன்னார்*" தாழ்மை வந்தால்தான் மேன்மை வரும். அகந்தை வந்தால் அழிவுதான் வரும் "*"ஆம் குருவே, நான் பாவி. ஒன்றும் அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்.குரு சொன்னார், " இப்போது மேலே பார்" பார்த்தான். பறந்து கொண்டிருந்த ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.செல்லமே! மேன்மைக்கு ஏதுவான தாழ்மையை இந்த நாளில் ஆண்டவரிடம் வேண்டிப் பெற்றுக் கொள்வோமா?*"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் ".*

1990ரோடு தொலைந்த வாழ்க்கை

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
.
.
.
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...
.
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...
.
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...
.
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...
.
ஊருக்கு  ஓரிருவர்  காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...
.
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...
.
.
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...
.
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...
.
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...
.
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன்  சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...
.
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...
.
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்...
.
.
.
.
.
.
.
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட  சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...

கடவுளும் விவசாயியும்

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

போராடித்தான் பாப்போமே...

👍