Saturday, 21 April 2018

உள்ளிருந்து...

எதிர்பார்ப்போடு ஆன்மீகத்தில் நுழையாதீர்கள்....

*பெரும்பாலும் புற வாழ்க்கையில் பலன்களை எதிர் பார்த்து தான் பலர் ஆன்மீகத்தை தேடுகின்றனர்.*

*அப்படி வருபவர்களுக்கு உள்ளே மலருதல் நிகழ வாய்ப்பில்லை.*

*இது குறித்து ஓஷோ சொன்ன கதையை கேளுங்கள். ஒருவன் தலை சிறந்த மருத்துவன் ஆக வேண்டும் என்றால் அந்த ஆர்வம் அவன் உள்ளேயிருந்து எழ வேண்டும்.*

*ஒரு பொறியியலில் ஆர்வம் கொண்ட ஒரு மாணவனை அவனுடைய தந்தை கட்டாயப் படுத்தி மருத்துவத்துக்கு படிக்க வைத்தார்.*

*எப்படியோ அவன் மருத்துவனாகி விட்டான். ஒரு நாள் வயிற்று வலி என்று செருப்பு தைப்பவன் ஒருவன் வந்தான்.*

*மருத்துவனால் சுயமாக அது என்ன வலி என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய பாட குறிப்புகளில் தேடிப் பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லை.*

*பிறகு நோயாளியிடம் சொன்னான் எனக்கு தெரிந்த வரை உன்னுடைய நோய்க்கு மருந்தில்லை. நீ இன்னும் சில நாட்கள் தான் உயிரோடு இருக்க முடியும் என்றான்.*

*செருப்பு தைப்பவன் வருத்தத்துடன் போய் விட்டான்.*

*பல நாட்கள் கழித்து அவனை ஒரு சந்தையில் வைத்து அவனை உயிருடன் பார்த்தான் மருத்துவன். ஆச்சரியத்துடன் நீ எப்படி உயிருடன் இருக்கிறாய் என்று கேட்டான்.*

*அவன் சொன்னான் எப்படியும் நான் சாகப் போகிறேன் என்பதால் எனக்கு பிடித்த உருளைக் கிழங்கு போண்டா பத்து சாப்பிட்டேன். பிறகு வயிற்று வலி சரியாகி விட்டது என்றான்.*

*மருத்துவன் இதை தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டான்.*

*பிறகு ஒரு நாள் துணி தைப்பவன் ஒருவன் வயிறு வலியோடு வந்தான். மருத்துவன் சொன்னான் உனக்குரிய மருந்து எதுவும் இல்லை. நீ பத்து உருளை கிழங்கு போண்டா சாப்பிடு சரியாகி விடும் என்றான்.*

*அவன் சென்ற மறு நாள் செய்தி வந்தது அவன் இறந்து விட்டதாக.*

*மருத்துவன் யோசித்து தன்னுடைய டைரியில் குறிப்பு எழுதினான் இப்படி.... வயிற்று வலி வந்தால் பத்து உருளை கிழங்கு போண்டா செருப்பு தைப்பவனை குணமாக்கும், துணி தைப்பவனை கொன்று விடும்.*

*கட்டாயமாக திணிக்கப் படும் ஆன்மீகத்திலோ கட்டாயமாக மேற் கொள்ளும் ஆன்மீகத்திலோ பயன் இல்லை.*

*எல்லா மதங்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளை அப்படி ஒரு ஆன்மீகத்தில் தான் தள்ளி விடுகிறார்கள்.*

*இந்த மருத்துவனைப் போல அந்த அரை குறை ஆன்மீகமும் பிறரை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது.*

*தேடல் உள்ளிருந்து எழாமல் ஆன்மீகத்தில் மலருதல் சாத்தியமில்லை.*

*ஓஷோ*

*இன்று முதல் எதிர்பார்ப்புகள் இன்றி தேட ஆரம்பியுங்கள்....

Tuesday, 20 March 2018

சாத்தானை படைத்தது யார்??

வகுப்பறையில் ஆசிரியை
மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,
உலகில் இருக்கும் அனைத்தையும்
படைத்தது கடவுளா ? என்று.
ஒரு மாணவன்

ஆமாம் என பதில் அளிக்கிறான்.
ஆசிரியர் : அப்படியெனில்,

சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப்
பார்த்து நான் உங்களை சில
கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை'
என்று ஏதேனும் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ
குளிரை உணர்ந்தது இல்லையா?
மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில்
தவறு.குளிர் என்ற
ஒன்று இல்லை.அது வெப்பத்தின்
பற்றாக்குறை. சராசரி வெப்பம்
குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.
இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும்.மீண்டும்
தவறு.இருள் என்ற
ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான்
இருள் என்கிறோம். உண்மையில்
ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம்
அதிகம் படிக்கிறோம்.

குளிரையும்
இருளையும் அல்ல. அதே போல்,
சாத்தான் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை. உண்மையில்
அது கடவுளின் மீது உள்ள
அன்பின் , நம்பிக்கையின்
பாற்றாக்குறை. அந்த மாணவன்
வேறு யாருமில்லை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

Wednesday, 14 March 2018

கணவன் மனைவி

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா". மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்".

யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே...
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

இனி இவனை அடிக்க முடியாதுன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றதுதான்

#திருமணம்

😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.

ஆனால்,

பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

உங்கள் கணவரை நேசியுங்கள்!
.
* அடிக்கடி டீயோ, காபியோ கேக்குறார் என்றால்
உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.
.
* மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?
.
என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.
.
* உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?
அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.
.
* இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?
.
உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.
.
* உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு
வாங்கி தரவில்லையா?
.
உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.
.
* நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.
.
ஏனென்றால்.........
.
கணவனை கொல்வது
சட்டப்படி குற்றம்!

😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐
மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.
👍மணம் நிம்மதியோடு படித்து விட்டு .பிறருக்கும் அனுப்பி பாருங்கள்.வாழ்த்துவார்கள். வாழ்க வளமுடன். . நன்றி. நன்றி நன்றி.
😥😥😥😥😥😥😥

காமராஜர்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.

உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.

பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.

உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,

வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

Pin drop silence....

அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனர்.

இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ".

""மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்""

இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!

இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

காமராஜர் ஒரு முறை 💐 ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. 😚தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..😌

உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ 🐝ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... 🐝
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...😊

பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது😝 பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.."

👌👌👌👌👌
கலெக்டர் தலை குனிந்தார்...

படிக்காத மேதை...

வறலாறு ஒரு நொடியில் நிகழ்வு

விலகி நிற்பவர்கள்
         வெல்லுவதில்லை
              வெல்ல நினைப்பவர்கள்     
                      விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில்
         முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால்,
     முதன் முதலில் வைத்திருக்க
              வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான்
    நிலவுக்கு சென்ற
       அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க்
    அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
     மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது
                         இணை விமானி...
இவர்கள் சென்ற
     அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
     "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்,
   ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன்
   முதலில்கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை...
        சில நொடிகள்தான்
                தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில்
      இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது,
       "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங்
        கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு,
     ஒரு நொடி தயக்கத்தில்
            மாற்றி எழுதப்பட்டது...
திறமையும்
      தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
      இன்று ஆல்ட்ரினை
            யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான்
     இந்த உலகம் நினைவில்
              வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல...
    தயக்கம்,
        பயம் இவை எந்த அளவுக்கு
           நம் வெற்றியை பாதிக்கும்
             என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை
     பார்க்கும்போதெல்லாம்
       இந்தச் சம்பவத்தை நினைவில்
             வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம்
    நம்முடைய மிகப் பெரிய
       வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே
     மிகப்பெரும் சாதனைகளை
         படைக்கிற வல்லமை
               உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம்,
      பயம்,
          கூச்சம் இவைதான்
                     நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய
        தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை
                 தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை
                     பாராட்டுவதில் தயக்கம்...
ஏன்,
      சிலருக்கு இந்த தகவலை
           நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை
        செய்ய தயங்கினால்,
            தவறானதை தான் செய்து
                             கொண்டிருப்போம்...
எனவே,
           நல்ல விஷயங்களில்...
                   தயக்கத்தை தவிர்ப்போம்..

*                 *                   *

Friday, 9 March 2018

Complete and finish

ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்,

ஆங்கிலத்தில் "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம் என்ன என்று கேட்டார்கள்.

கூட்டத்தினர் இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை என்று கூறினார்கள்.

அப்போது அறிஞர் அண்ணா கூறினார்....

"நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "complete ".

அதுவே "நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்கை "finished ".

அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்கை "completely Finished " என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்.

படித்ததில் பிடித்தது.

Wednesday, 7 March 2018

கோபம் vs கொலைவெறி

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே.!”

அப்பா ஒருகணம் யோசித்தார்.
“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.
“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டிருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல.
நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா… எத்தனை தடவை இதே நம்பருக்கு போன் பண்ணுவீங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர்

இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…
இல்ல வேற ஏதாவதை திங்கிறியா…? அறிவில்ல உனக்கு…?
இன்னொரு தடவை போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ…
அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.
“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”