Monday, 30 April 2018

ஓஷோ

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..

'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'.

போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000ரூபாய்க்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' 😍😜

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். 😜😝

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'😒😒😏😜😝

#ஓஷோ

Tuesday, 24 April 2018

குரு சிஷ்யன்

ஒரு
சீடன், குருவைப் பார்த்துக்
கேட்டான் .

"குருவே..
நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளை மீறியவன் ஆவேனா..?"

"இல்லையே..
தாராளமாகச் சாப்பிடலாம்"
என்றார் குரு.

உடன், சீடன் கேட்டான்.
"கூடவே, ஈஸ்ட்
சேர்த்துக் கொண்டால் தவறா குரு ?"

"அதிலொன்றும்
தவறில்லை. சாப்பிடலாம்." என்றார் குரு.

மறுபடியும் சீடன் கேட்டான்..

"அவற்றுடன் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?"

"ஒரு
குறையும் இல்லை" என்றார் குரு.

அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்.

"இம்மூன்றையும் சேர்த்துதான் பேரிச்சம்பழ மது தயாரிக்கப்படுகிறது. அதை மட்டும் ஏன், நான் அருந்தக்கூடாது என்கிறீர்கள்" என்றான்.

குரு கேட்டார்..

"கைப்பிடி மண்ணை அள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?"

"வலிக்காது" குருவே என்றான்.

"அதன் மீது சிறிது நீரை ஊற்றினால். . ?"
குரு கேட்டார்.

"அதுவும் வலிக்காது" என்றான்.

குரு அமைதியாகச் சொன்னார்..

"இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி, வேகமாக உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?"

"என் தலை பிளந்துவிடும்
குருவே" என்றான்.

"உன்
கேள்விக்கான
விடை கிடைத்து விட்டதா"
என்றார் குரு.

"கிடைத்து விட்டது. மன்னித்து விடுங்கள் குருவே" என்றார் சீடன்.

*நீதி* :

அறிவை நல்ல விஷயங்களுக்காக மட்டும் உபயோகப்படுத்துவோர் , எளிதில் வெற்றி பெறுவர்....

Saturday, 21 April 2018

உள்ளிருந்து...

எதிர்பார்ப்போடு ஆன்மீகத்தில் நுழையாதீர்கள்....

*பெரும்பாலும் புற வாழ்க்கையில் பலன்களை எதிர் பார்த்து தான் பலர் ஆன்மீகத்தை தேடுகின்றனர்.*

*அப்படி வருபவர்களுக்கு உள்ளே மலருதல் நிகழ வாய்ப்பில்லை.*

*இது குறித்து ஓஷோ சொன்ன கதையை கேளுங்கள். ஒருவன் தலை சிறந்த மருத்துவன் ஆக வேண்டும் என்றால் அந்த ஆர்வம் அவன் உள்ளேயிருந்து எழ வேண்டும்.*

*ஒரு பொறியியலில் ஆர்வம் கொண்ட ஒரு மாணவனை அவனுடைய தந்தை கட்டாயப் படுத்தி மருத்துவத்துக்கு படிக்க வைத்தார்.*

*எப்படியோ அவன் மருத்துவனாகி விட்டான். ஒரு நாள் வயிற்று வலி என்று செருப்பு தைப்பவன் ஒருவன் வந்தான்.*

*மருத்துவனால் சுயமாக அது என்ன வலி என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய பாட குறிப்புகளில் தேடிப் பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லை.*

*பிறகு நோயாளியிடம் சொன்னான் எனக்கு தெரிந்த வரை உன்னுடைய நோய்க்கு மருந்தில்லை. நீ இன்னும் சில நாட்கள் தான் உயிரோடு இருக்க முடியும் என்றான்.*

*செருப்பு தைப்பவன் வருத்தத்துடன் போய் விட்டான்.*

*பல நாட்கள் கழித்து அவனை ஒரு சந்தையில் வைத்து அவனை உயிருடன் பார்த்தான் மருத்துவன். ஆச்சரியத்துடன் நீ எப்படி உயிருடன் இருக்கிறாய் என்று கேட்டான்.*

*அவன் சொன்னான் எப்படியும் நான் சாகப் போகிறேன் என்பதால் எனக்கு பிடித்த உருளைக் கிழங்கு போண்டா பத்து சாப்பிட்டேன். பிறகு வயிற்று வலி சரியாகி விட்டது என்றான்.*

*மருத்துவன் இதை தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டான்.*

*பிறகு ஒரு நாள் துணி தைப்பவன் ஒருவன் வயிறு வலியோடு வந்தான். மருத்துவன் சொன்னான் உனக்குரிய மருந்து எதுவும் இல்லை. நீ பத்து உருளை கிழங்கு போண்டா சாப்பிடு சரியாகி விடும் என்றான்.*

*அவன் சென்ற மறு நாள் செய்தி வந்தது அவன் இறந்து விட்டதாக.*

*மருத்துவன் யோசித்து தன்னுடைய டைரியில் குறிப்பு எழுதினான் இப்படி.... வயிற்று வலி வந்தால் பத்து உருளை கிழங்கு போண்டா செருப்பு தைப்பவனை குணமாக்கும், துணி தைப்பவனை கொன்று விடும்.*

*கட்டாயமாக திணிக்கப் படும் ஆன்மீகத்திலோ கட்டாயமாக மேற் கொள்ளும் ஆன்மீகத்திலோ பயன் இல்லை.*

*எல்லா மதங்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளை அப்படி ஒரு ஆன்மீகத்தில் தான் தள்ளி விடுகிறார்கள்.*

*இந்த மருத்துவனைப் போல அந்த அரை குறை ஆன்மீகமும் பிறரை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது.*

*தேடல் உள்ளிருந்து எழாமல் ஆன்மீகத்தில் மலருதல் சாத்தியமில்லை.*

*ஓஷோ*

*இன்று முதல் எதிர்பார்ப்புகள் இன்றி தேட ஆரம்பியுங்கள்....