எதிர்பார்ப்போடு ஆன்மீகத்தில் நுழையாதீர்கள்....
*பெரும்பாலும் புற வாழ்க்கையில் பலன்களை எதிர் பார்த்து தான் பலர் ஆன்மீகத்தை தேடுகின்றனர்.*
*அப்படி வருபவர்களுக்கு உள்ளே மலருதல் நிகழ வாய்ப்பில்லை.*
*இது குறித்து ஓஷோ சொன்ன கதையை கேளுங்கள். ஒருவன் தலை சிறந்த மருத்துவன் ஆக வேண்டும் என்றால் அந்த ஆர்வம் அவன் உள்ளேயிருந்து எழ வேண்டும்.*
*ஒரு பொறியியலில் ஆர்வம் கொண்ட ஒரு மாணவனை அவனுடைய தந்தை கட்டாயப் படுத்தி மருத்துவத்துக்கு படிக்க வைத்தார்.*
*எப்படியோ அவன் மருத்துவனாகி விட்டான். ஒரு நாள் வயிற்று வலி என்று செருப்பு தைப்பவன் ஒருவன் வந்தான்.*
*மருத்துவனால் சுயமாக அது என்ன வலி என்று கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னுடைய பாட குறிப்புகளில் தேடிப் பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லை.*
*பிறகு நோயாளியிடம் சொன்னான் எனக்கு தெரிந்த வரை உன்னுடைய நோய்க்கு மருந்தில்லை. நீ இன்னும் சில நாட்கள் தான் உயிரோடு இருக்க முடியும் என்றான்.*
*செருப்பு தைப்பவன் வருத்தத்துடன் போய் விட்டான்.*
*பல நாட்கள் கழித்து அவனை ஒரு சந்தையில் வைத்து அவனை உயிருடன் பார்த்தான் மருத்துவன். ஆச்சரியத்துடன் நீ எப்படி உயிருடன் இருக்கிறாய் என்று கேட்டான்.*
*அவன் சொன்னான் எப்படியும் நான் சாகப் போகிறேன் என்பதால் எனக்கு பிடித்த உருளைக் கிழங்கு போண்டா பத்து சாப்பிட்டேன். பிறகு வயிற்று வலி சரியாகி விட்டது என்றான்.*
*மருத்துவன் இதை தன்னுடைய டைரியில் குறித்துக் கொண்டான்.*
*பிறகு ஒரு நாள் துணி தைப்பவன் ஒருவன் வயிறு வலியோடு வந்தான். மருத்துவன் சொன்னான் உனக்குரிய மருந்து எதுவும் இல்லை. நீ பத்து உருளை கிழங்கு போண்டா சாப்பிடு சரியாகி விடும் என்றான்.*
*அவன் சென்ற மறு நாள் செய்தி வந்தது அவன் இறந்து விட்டதாக.*
*மருத்துவன் யோசித்து தன்னுடைய டைரியில் குறிப்பு எழுதினான் இப்படி.... வயிற்று வலி வந்தால் பத்து உருளை கிழங்கு போண்டா செருப்பு தைப்பவனை குணமாக்கும், துணி தைப்பவனை கொன்று விடும்.*
*கட்டாயமாக திணிக்கப் படும் ஆன்மீகத்திலோ கட்டாயமாக மேற் கொள்ளும் ஆன்மீகத்திலோ பயன் இல்லை.*
*எல்லா மதங்களிலும் பெற்றோர்கள் குழந்தைகளை அப்படி ஒரு ஆன்மீகத்தில் தான் தள்ளி விடுகிறார்கள்.*
*இந்த மருத்துவனைப் போல அந்த அரை குறை ஆன்மீகமும் பிறரை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது.*
*தேடல் உள்ளிருந்து எழாமல் ஆன்மீகத்தில் மலருதல் சாத்தியமில்லை.*
*ஓஷோ*
*இன்று முதல் எதிர்பார்ப்புகள் இன்றி தேட ஆரம்பியுங்கள்....
No comments:
Post a Comment